search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manure"

    • முன்னதாக சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
    • நுண் உரக்கிடங்கு வளாகத்தில் செயல்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில்தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகராட்சி செயல்படுத்தி வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை பொதுமக்கள் , சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்விளக்கம் அளிக்கபட்டது.

    நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார் நகராட்சி ஆணையர் வெ ங்கடலட்சுமண ன்முன்னி லை வகித்தார்.

    சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் வரவேற்றார் நிகழ்ச்சியி ல்வர்த்தக சங்க தலைவர் தென்னரசு பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நகராட்சி வளம் மீட்பு மையத்திலும் நுண் உரக்கிடங்கு வளாகத்திலும் செயல்முறை கள் செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வணிகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் உரக்கி டங்கில் தயார் செய்யப்பட்ட மாதிரி உரம் இலவசமாக வழங்கப்பட்டது.

    திடக்கழிவு மேலாண்மைவளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

    • கால்நடைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
    • கால்நடைகளின் சாணம், புழுக்கை மற்றும் கழிவு விவசாய நிலங்களுக்கு மீண்டும் இயற்கை உரம் சிறந்த உரமாக கிடைக்கிறது.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் விவசாயத்திற்கு கால்நடை களின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த சமீப காலமாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    முந்தைய காலங்களில் கால்நடை கழிவுகளை இயற்கை உரமாக வயல்களுக்கு இட்டு அதிக அளவில் விவசாயம் செய்து வந்தனர். அதற்காக விவசாயிகள் அதிக அளவில் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வந்தனர்.

    சமீப காலமாக கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் கால்நடை கழிவுகள் அதிக அளவில் கிடைப்பதில்லை. அதனால் இயற்கை உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தது. இரசாயன உரங்களால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு, அதில் விளைவிக்கக்கூடிய தானியங்களை உண்ணும் மனித இனம் மட்டுமின்றி கால்நடைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

    சமீப காலமாக இரசாயன உரங்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக சில விவசாயிகள் மீண்டும் இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர்.

    கால்நடைகளை அடைத்து வைப்பதன் மூலம் கால்நடைகளின் சாணம், புழுக்கை மற்றும் கழிவு விவசாய நிலங்களுக்கு மீண்டும் இயற்கை உரம் சிறந்த உரமாக கிடைக்கிறது.

    இதற்காக ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள், மாடுகள், வாத்துகள் தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்காகவும், இயற்கை உரத்திற்காகவும் கொண்டுவரப்பட்டு கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கிடை அமைக்கும் பணிகளில் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தொழு உரத்தை சூப்பர் பாஸ்பேட் கலந்து விதைக்க வேண்டும் என ேவளாண் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
    • முதுகுளத்தூர் தாலுகாவில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை உதவி இயக்குநர் பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் தாலுகாவில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை உதவி இயக்குநர் பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார்.

    கலைஞர் திட்டத்தில் இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகுளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள 60ம் குறுவை சாகுபடி பயிர்களை பார்வையிட்டார்.

    பின்னர் வயல்வரப்புகளில் விதைப்பதற்காக துவரை விதைகளை விநியோகம் செய்தார். வயல் வரப்புகளில் பயறு வகைகள் பயிரிடு வதால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார்.

    அட்மா திட்டத்தில் தொழு உரம் தயாரிக்கப்படுவதை பார்வையிட்ட உதவி இயக்குநர் தொழு உரத்தை அப்படியே விதைக்காமல் சூப்பர் பாஸ்பேட் கலந்து விதைக்க வேண்டும். அதனால் மண் வளம் காக்கப்படும். வேர்கள் செழித்து வளரும் என்றார்.

    பின்னர் வளநாடு கிராமத்தில் பிரதம மந்திரி யின் நிதி திட்டத்தில் நடை பெற்று வரும் கே.ஒய்.சி. பணிகளை ஆய்வு செய்தார். பயனாளிகள் தங்கள் கைபேசியுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

    விவசாயிகள் கே.ஒய்.சி. செய்தால் மட்டுமே அதன் பயன்கள் தங்குதடையின்றி கிடைக்கும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர்வேளாண்மை உதவி இயக்குநர் கேசவ ராமன், உதவி வேளாண்மை அலுவலர் தனதுரை, உதவி வேளாண்மை அலுவலர் முத்துராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கையான மற்றும் விஷமில்லாத உணவாக பயன்படுகிறது.
    • இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விளக்கம்.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் வட்டாரம் திருவத்தேவன் கிராமத்தில் விவசாயிகள் பாரம்பரிய மற்றும் புதிய நெல் ரகங்களை சாகுபடி செய்வது தொடர்பான தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் முரளி, துணைத் தலைவர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி பேசியதாவது,

    பாரம்பரிய நெல்- புதிய ரகங்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.

    இவை சர்க்கரை நோய், புற்றுநோய், வயிற்றுப்புண், நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கும் திறன் கொண்டது. பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கையான மற்றும் விஷமில்லாத உணவாக பயன்படுகிறது.

    விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    இயற்கை உரம் நிகழ்ச்சியில் இயற்கை உழவர் இயக்கத்தின் செயலாளர் முருகையன் பேசும்போது, 'விவசாயிகள் அனைவரும் செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்வதால் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதல் இன்றி பயிர் நன்றாக வளர்ந்து நஞ்சில்லாத மற்றும் தரமான உணவை உற்பத்தி செய்ய முடியும்' என்றார்.

    நிகழ்ச்சியில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, சீரகச் சம்பா, காட்டுயாணம், கருப்புக் கவுனி, சிவப்பு கவுனி, ஆத்தூர் கிச்சடி சம்பா, தேங்காய் பூ சம்பா, கந்தசாலா, கிச்சடி சம்பா போன்ற ரகங்களின் பண்புகள், குணாதிசயங்கள் மற்றும் சாகுபடி முறை குறித்தும், இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் தமிழழகன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பிரதீபா, அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • விதை நெல், உரம், பூச்சிக்கொள்ளி மருந்து போன்றவை தட்டுபாடின்றி கிடைக்க வேண்டும்.
    • வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆக்குதல்.

    கும்பகோணம்:

    பாட்டாளி மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கும்பகோணத்தி–ல்நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமிர்த. கண்ணன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் ஜோதிராஜ்,மாநில செயற்குழு போதை கேசவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில் கிளைகள் தோறும் கொடியேற்றுதல், பொறுப்பாளர்கள் செயல்பாடுகள் மற்றும் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில்அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆக்குதல் போன்ற கட்சி வளர்ச்சி குறித்து மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.

    கூட்டத்தில் கும்பகோணம் மாநகருக்கு வருகை தந்து பொதுக்கூ–ட்டத்தில் சிறப்புரை ஆற்றிய அன்புமணிராமதாஸ் வரவேற்று,சிறப்பாக பொதுக்குழு கூட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாமக , வன்னியர் சங்க, உழவர் பேரியக்க மாநில, மாவட்ட, ஒன்றிய,நகர,பேரூர் கிளை ,அணி பொறுப்பா–ளர்களுக்கு நன்றி தெரித்துகொள்கிறது.

    தஞ்சை வடக்கு மாவட்ட பாமகவிற்கு மாநில, மாவட்ட பொறுப்புகள் வழங்கிய பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு நன்றி தெரிவிப்பது ர்டு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றுவது.

    தஞ்சை டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம், பூச்சிக்கொள்ளிகள் , மருந்து போன்றவை தட்டுபாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்திற்கு வக்கீல் ராஜசேகர்,மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் சுந்தரம்,பாலகுரு, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம், மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் அணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குறுவை சாகுபடிக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுபாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • அரிசி, தயிர் உள்ளிட்ட அன்றாட பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பை கைவிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    குறுவை பயிர் சாகுபடிக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுபாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், ஏழை, எளிய நடுத்தர மக்கள் மற்றும் சிறு குறு தொழில் பாதிக்கின்ற மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். அரிசி, தயிர் உள்ளிட்ட அன்றாட பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் தலைமை தாங்கினார். பார்க்கவ குல சங்கம் மாவட்ட தலைவர் திருமாறன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×