என் மலர்
உள்ளூர் செய்திகள்

குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட உரம் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை குறித்து வர்த்தகர்களுக்கு செயல்விளக்கம்
- முன்னதாக சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
- நுண் உரக்கிடங்கு வளாகத்தில் செயல்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில்தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகராட்சி செயல்படுத்தி வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை பொதுமக்கள் , சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்விளக்கம் அளிக்கபட்டது.
நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார் நகராட்சி ஆணையர் வெ ங்கடலட்சுமண ன்முன்னி லை வகித்தார்.
சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் வரவேற்றார் நிகழ்ச்சியி ல்வர்த்தக சங்க தலைவர் தென்னரசு பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி வளம் மீட்பு மையத்திலும் நுண் உரக்கிடங்கு வளாகத்திலும் செயல்முறை கள் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வணிகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் உரக்கி டங்கில் தயார் செய்யப்பட்ட மாதிரி உரம் இலவசமாக வழங்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மைவளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.






