search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரம்"

    • தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பு, சோதனை பணி நடந்து வருகிறது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஒரு சரக்கு லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து உர மூட்டைகளுக்கான ஆவணங்களை காண்பிக்குமாறு லாரியில் வந்தவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி அஜய்ராஜ் தலைமையிலான குழுவினர் உர மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து லாரியை எடுத்து செல்லுமாறு தாசில்தார் அருள்ராஜ் கூறினார். தொடர்ந்து, தஞ்சை நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    • 1250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
    • தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொ ருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

    இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து 1300 டன் யூரியா, காம்ப்ளக்ஸ், டிஏபி உரங்கள் சரக்கு ரயிலில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது.

    பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் உள்ள தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதே போல் தஞ்சையில் இருந்து கன்னியாகுமரிக்கு பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதற்காக 1250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

    • புதுக்கோட்டை மாவட்டம் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள்‌, சரக்கு ரெயிலில்‌ வந்து சேர்ந்தது
    • ரயிலில் இருந்து லாரிகளில் ஏற்றும் பணியினை வேளாண்மை இணை இயக்குநர்‌ ஆய்வு செய்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஏற்கனவே மானாவாரி பகுதியில் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன.

    இந்த பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 4598 மெட்ரிக் டன்கள், டி.ஏ.பி. 1596 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 1476 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 5667 மெட்ரிக் டன்கள் ஆகியவை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் மாவட்டத்திற்கு தேவையான உர விநியோகத் திட்ட இலக்கீட்டின்படி உர நிறுவனங்களிலிடமிருந்து உரங்கள் பெறப்படுவதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா உரம் 785.7 மெட்ரிக் டன்களும், டிஏபி உரம் 252.25 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் உரம் 249.3 மெட்ரிக் டன்களும், துத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திலிருந்து சரக்கு ரெயில் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தது.

    இந்த உரங்கள், மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் பயன்படும் வகையில் அனுப்பி வைக்கப்படுவதை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி ஆய்வு செய்தார். ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்ட தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் மதியழகன், வேளாண்மை அலுவலர் முகமது ரபி மற்றும் ஸ்பிக் உர நிறுவன பிரதிநிதி மயில்வாகனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    மேலும், மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் உர நகர்வு குறித்து சிறப்பு பறக்கும்படை மூலம் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உர விற்பனையாளர்கள் விதி மீறல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரக்கட்டுபாட்டு ஆணை 1985 இன்படியும் மேலும், உர நகர்வு கட்டுப்பாட்டு ஆணை 1973 இன்படியும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    மொத்த உர விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிடவும், பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதும் கூடாது. உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் இருப்பு வைப்பதும், உரங்களை விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி உர உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்கு தேவையான 1288.85 மெட்ரிக் டன் உரங்கள், தூத்துக்குடியில் இருந்து சரக்கு இரயிலில் வந்தது
    • மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் பயன்படும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டது

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் 1288.85 மெட்ரிக் டன்கள் துாத்துக்குடியில் இருந்து சரக்கு இரயிலில் புதுக்கோட்டை வந்தடைந்தது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். எனவே, சம்பா சாகுபடிக்கும் , ஏற்கனவே, பயிரிட்டுள்ள மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் ஆகிய பயிர்களுக்கும் தேவையான உரங்கள் யூரியா 4498 மெட்ரிக் டன்கள், டிஏபி 1513 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 1564 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 5291 மெட்ரிக் டன்கள் ஆகிய உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா உரம் 784.35 மெட்ரிக் டன்களும், டிஏபி உரம் 252.25 மெட்ரிக் டன்களும்,  காம்ப்ளக்ஸ் உரம் 252.25 மெட்ரிக் டன்களும், துாத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திலிருந்து  சரக்கு இரயில் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரப்பெற்றது. இந்த உரங்கள், மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் பயன்படும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டது.

    • குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.
    • உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.

    இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

    இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 10 வேகன்களில் 600 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வந்து இறங்கியது.

    பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன

    • திருமங்கலம் நகராட்சியில் மக்கும் குப்பையில் உரம் தயாரித்து நகராட்சி தலைவர் இலவசமாக வழங்கினார்.
    • 45 நாட்களுக்கு ஈரப்பதத்துடன் தண்ணீர் தெளித்து உரம் பதப்படுத்தப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி யில் உள்ள 27 வார்டுகளில் பொதுமக்கள் துப்புரவு பணியாளர்கள் மூலம் பெறப்படும் குப்பைகளை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது. முதற்கட்டமாக 100 மில்லி மீட்டர் அளவுக்கு மக்கும் கழிவுகள் பிரிக்கப்பட்டு அவற்றை அரைத்து உரமாக வெளியேற்றப்படுகிறது.

    அந்த உரத்தை குவித்து வைத்து 45 நாட்களுக்கு ஈரப் பதத்துடன் தண்ணீர் தெளித்து பதப்படுத்தப்படுகிறது. அதன்பின் 30 மில்லி மீட்டர் அளவுள்ள கழிவுகள் இயந்திரங்கள் மூலமாக குறைந்தபட்சம் நாலு மில்லி மீட்டர் அளவுக்கு இயந்திரம் உதவியுடன் பொடியாக மாற்றி இயற்கை உரமாக்கப் படுகிறது. மேலும் குப்பை கிடங்கில் வாழை இலை, தோட்ட கழிவுகள், மா இலைகள் போன்றவற்றை அரைத்து உலர வைத்து அதனை இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.

    இதனால் 16 டன் குப்பை களை 10 டன் மக்கும் குப்பைகளாக வருவதை தொடர்ந்து மக்கும் குப்பை களை இயற்கை உரம் ஆக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை பிளாஸ்டிக் கழிவுகள் இயந்திரம் மூலமாக சமப்படுத்தி பண்டலாக மாற்றி சிமெண்ட் தொழிற் சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் 10 டன் வரை தயாரிக்கப்படும் இலவச உரங்களை விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சின்னச்சாமி, வீரக்குமார், திருக்குமார், அமுதா, சரவணன், சங்கீதா, சுகாதார அதிகாரி சண்முகநாதன், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
    • தலா 1250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் தூத்துக்குடி மற்றும் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

    குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.

    இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    அதன்படி நேற்று குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது.

    தற்போது தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

    இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 1250 டன் காம்ப்ளக்ஸ் உரம் தஞ்சைக்கு வந்து இறங்கியது. பின்னர் உர மூட்டைகள் லாரிகள் ஏற்றப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதே போல் இன்று தஞ்சையில் இருந்து தலா 1250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு தூத்துக்குடி மற்றும் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    • நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 85.19 மி.மீ ஆகும்.
    • எண்ணெய் வித்து பயிர் விதைகள் 3.83 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறுதிட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு. மே- 2023ம்மாதம்முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 73.70 மி.மீ., நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 85.19 மி.மீ ஆகும். இது சராசரி மழை பொழிவை விட 11.49 மி.மீ., அதிகமாகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    அதன்படி நெல் 0.099 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 7.11 மெட்ரிக் டன், பயிறுவகை பயிறுகள் 41.37 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 3.83 மெட்ரிக் டன்இருப்பிலுள்ளது. அமராவதி அணையிலிருந்து நீர் வரத்து தொடங்கியதால் உடுமலை,மடத்துக்குளம், தாராபுரம் வட்டாரங்களில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தங்களுடையவிவசாய நிலங்களை தயார் செய்து உள்ளனர். மேலும், கீழ் பவானி பாசன பகுதிகளானகாங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் தொடங்கப்படவுள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள்தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 2240 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1331 மெட்ரிக் டன்,காம்ப்ளக்ஸ் 5103 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 665 மெட்ரிக் டன் அளவு இருப்பில்உள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள்மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் கால தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன் , இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின்இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளார் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை ஆட்சியர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயசங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • உரம் தயாரித்தல் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் பார்வையிட்டார்.
    • பணிகளில் ஏற்படும் குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சியில் திடக்கழிவு வளம் மீட்பு பூங்காவில் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் 'திடீர்' ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அங்கு நடைபெற்று வரும் உரம் தயாரித்தல், மக்கும் குப்பை, மக்கா குப்பையை பிரித்தெடுத்தல் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து அவற்றில் ஏற்படும் குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அன்றன்றே குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து உரமாக மாற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • கழிப்பிடத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை அருகே உள்ள குப்பை கிடங்கில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அங்குள்ள குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டப் பட்டு வருகிறது.இந்நிலையில் கடலூர் செயற் பொறியாளர் கருப்பையா, விழுப்புரம் உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் குப்பை கிடங்கை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மலைபோல் குவிந்து உள்ள பழைய குப்பைகளை உடனடியாக தரம் பிரித்து அதை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் குப்பைகளை குப்பைக்கிடங்கில் கொட்டி அன்றன்றே குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து உரமாக மாற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்தையும் ஆய்வு செய்தனர். கழிப்பிடத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது சின்னசேலம் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • விவசாயிகள் கூடுதல் லாபம் பெற திரவ உயிர் உரங்களை பயன்படுத்தலாம் என ேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை கூறினார்
    • உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு அதிக மகசூல் கிடைக்கவும் வாய்ப்பளிக்கிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையான பயிர்கள் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி நஞ்சுள்ள உணவு உற்பத்தியை மட்டும் தான் பெருக்க முடிகிறது.மேலும் சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்படுகிறது. ஆனால் உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு அதிக மகசூல் கிடைக்கவும் வாய்ப்பளிக்கிறது.

    திரவ உயிர் உரங்கள் பல்வேறு அளவுகளில் பிரத்யேகமான கொள்கலன்களில் விநியோகம் செய்யப்படுகிறது. திரவ உயிர் உரங்களின் ஆயுட்காலம் 12 மாதங்கள் ஆகும்.அகில இந்திய அளவில் தமிழகத்தில்தான் முதன் முறையாக பாக்டீரியவை பிரித்தெடுக்கும் இணை ஒட்ட திரவ வடிப்பான் என்ற தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உயிர் உரங்கள் தயாரிக்கப்படுகிறது. உயிர் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளுடன் கலந்து உபயோகிக்க கூடாது. உயிர் உரங்களை குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும்.

    விதைகளை பூஞ்சான கொல்லியுடன் விதை நேர்த்தி செய்த பின்தான் கடைசியாக உயிர் உரங்கள் விதை நேர்த்தி செய்ய வேண்டும். எனவே விவசாயிகள் ரசாயன உரங்களை குறைத்து உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி சாகுபடி செலவை குறைத்து நிகர லாபம் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.


    • உரம் மற்றும் பூச்சி மருந்துகளை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்.
    • பருத்தி சாகுபடி பயிர்கள் 20 முதல் 90 நாட்கள் வரையிலான இளம் பயிர்களாக உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் வருடம் தோறும் பருத்தி சாகுபடி பரப்பளவு அதிகரித்து வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக பருத்தி பஞ்சு கொள்முதல் விலை அதிகரித்து வருவதால் விவசாயிகள் ஆர்வமுடன் பருத்தி சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர்.

    அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருத்தி சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 16,261 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது.

    பருத்தி சாகுபடிக்கு சாதகமான சீதோசன நிலை நிலவியதால் விளைச்சல் அதிகரித்தது.

    அதற்கு ஏற்ற வகையில் பருத்தி பஞ்சின் கொள்முதல் விளையும் அதிகரித்தது.

    இதனால் இந்த ஆண்டும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 16,500 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இன்னும் 500 ஹெக்டேர் வரை பருத்தி சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பருத்தி சாகுபடியினை பெரும்பாலும் சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தடையின்றி சொட்டு நீர் பாசனம் நடைபெறும் வகையில் 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மேலும் பருத்தி சாகுபடி பயிர்கள் 20 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரையிலான இளம் பயிர்களாக உள்ளது. இப்பயிர் நன்கு வளர உரம் தேவைப்படுகிறது.

    பருத்தி செடிகளில் மாவு பூச்சி, அந்து பூச்சிகள் உள்ளிட்ட பூச்சிகள் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

    அதனால் பூச்சிகளிடமிருந்து பருத்தி பயிர்களை காப்பாற்றும் வகையில் விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகளை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அல்லது வேளாண் அலுவலகங்கள் மூலம் 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பருத்தி பஞ்சுகளை கொள்முதல் செய்ய இந்திய பருத்தி கழகத்திலிருந்து முகவர்களை, மாவட்டங்களுக்கு நேரடியாக வரவழைத்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×