search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுத பூஜை"

    • பயணிகள் வசதிக்காக சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல தென்னக ரெயில்வேயும் சிறப்பு ரெயில்களை இயக்கியது.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இன்றும், நாளையும் வழக்கமான வார விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

    இதனால் ஆயுத பூஜையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் செல்வதற்கு பஸ், ரெயில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தனர்.

    பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சுமார் 2,100 பஸ்கள் இயக்கப்படும். பயணிகள் முன்பதிவு அதிகரித்ததால் கூடுதலாக 2,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதுபோல மற்ற ஊர்களில் இருந்து 1,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பஸ்களில் பயணம் செய்வதற்காக நேற்று மக்கள் பஸ் நிலையங்களுக்கு படை எடுத்தனர். சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று மதியத்தில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மாலை 6 மணிக்கு பிறகு பயணிகள் அலை அலையாக வரத் தொடங்கினார்கள். இதனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் நிரம்பி வழிந்தது.

    பயணிகள் வசதிக்காக சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த 3 பஸ் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கோயம்பேட்டில் திரண்ட மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாத அளவுக்கு திணறல் ஏற்பட்டது.

    முன்பதிவு செய்திருந்தவர்கள் தங்களது பஸ் எங்கு நிற்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள். நள்ளிரவு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதற்கு வசதியாக மெட்ரோ ரெயில்களும் கூடுதலாக விடப்பட்டு இருந்தது.

    பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல தென்னக ரெயில்வேயும் சிறப்பு ரெயில்களை இயக்கியது. வடமாநிலங்களுக்கு அதிகளவு சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன. இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தொடர் விடுமுறை காரணமாக சொந்த வாகனங்களில் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு செல்பவர்களின் எண்ணிக்கையும் நேற்று அதிகமாக இருந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து கடும் நெரிசலுடன் காணப்பட்டது.

    நேற்று மட்டும் ரெயில்கள் மூலம் சுமார் 1.5 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு சென்றனர். ஆம்னி பஸ்களிலும் சுமார் 1.5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் 1 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    சொந்த வாகனங்கள் மூலமாக சென்றவர்கள் எண்ணிக்கையும் 1 லட்சம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மட்டும் 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாதவர்கள் இன்று காலை முதல் பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

    இதனால் இன்றும் சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.

    • ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழித்தடங்களில் 1900 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    முக்கிய பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் வருகிற 23-ந்தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சேலம் புதிய பஸ் நிலையம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பஸ் நிலையங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலை, ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் இயக்கம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.

    எனவே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    • பூக்களை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாகவே விலை ஏறுமுகமாகவே உள்ளது.
    • பொரி, கடலை முதல் பழங்கள் வரை மக்கள் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

    போரூர்:

    நவராத்திரி விழாவின் கடைசி நாளான ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாவையொட்டி வீடுகளில் பூஜை செய்வார்கள். மேலும் கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்திலும் பூஜை போடுவார்கள். இதற்கு பழங்கள், பூக்கள் பெருமளவு விற்பனையாகும்.

    இதையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பழங்கள், பூக்கள் பெருமளவு வந்து குவிந்துள்ளன.

    பூக்களை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாகவே விலை ஏறுமுகமாகவே உள்ளது. சாமந்தி பூ இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.70 முதல் 90 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் பன்னீர் ரோஸ் ரூ.40, சாக்லேட் ரோஸ் ரூ.80, கனகாம்பரம் ரூ.200, மல்லி ரூ.500, சம்பங்கி ரூ.50, அரளி ரூ.100 வரை உயர்ந்து உள்ளது. இன்றைய விலை விவரம் வருமாறு:-

    சாமந்தி கிலோ ரூ.200 முதல் 240, பன்னீர் ரோஸ் ரூ.120 முதல் 140, சாக்லேட் ரோஸ் ரூ.180 முதல் 200, கனகாம்பரம் ரூ.1000, மல்லி ரூ.1200, சம்பங்கி 200, அரளி 400.

    பழங்களை பொறுத்தவரை வாழைப்பழங்கள் உள்ளூரில் பெருமளவு கிடைக்கிறது. ஆப்பிள், காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து வருகிறது.

    மாதுளை கர்நாடகாவில் இருந்து வருகிறது. சாத்துக்குடி ஆந்திராவில் இருந்து வருகிறது. ஆப்பிள் கிலோ ரூ.120 முதல் 150 வரை விற்கிறது. மாதுளை ரூ.250-க்கு விற்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் காய்கறிகள், மளிகை கடைகள் முன்பு தற்காலிக கடைகள் போட்டுள்ளார்கள். பொரி, கடலை முதல் பழங்கள் வரை மக்கள் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்கள். 

    தற்போது பூ, பழங்கள், காய்கறிகள் எல்லாமே நகரில் பல இடங்களில் ரோட்டோரங்களில் கடைகள் தொடங்கி விற்பனை நடக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களும் ஆங்காங்கே பிரிந்து செல்வதால் கோயம்பேட்டில் வழக்கத்தை விட விற்பனை குறைவாக நடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அடுத்த 2 நாட்களுக்கு மேலும் விலை உயரத்தான் வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்.

    • ரெயிலின் முன்பதிவு நிறைவு பெற்ற டிக்கெட்டுகள் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.
    • சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

    நெல்லை:

    ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி சென்னையில் இருந்து இன்று இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு ரெயில் நெல்லை வந்து சேரும்.

    ரெயிலில் உள்ள சாதாரண படுக்கை பெட்டி மற்றும் எக்கனாமிக் ஏசி கிளாஸ் ஆகியவையின் முன்பதிவு டிக்கெட்டுகள் நிறைவு பெற்று காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.

    நெல்லையில் இருந்து 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.35 மணிக்கு ரெயில் புறப்பட்டு 25-ந் தேதி அதிகாலை 4.20 மணிக்கு சென்னை சென்றடையும். ரெயிலின் முன்பதிவு நிறைவு பெற்ற டிக்கெட்டுகள் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.

    தொடர் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிகமானோர் சொந்த ஊருக்கு வருகை தரும் நிலையை கருத்தில் கொண்டு புதிய சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டது.

    சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

    நெல்லை-சென்னை இடையேயான பெரும்பாலான ரெயில்களில் ஏற்கனவே டிக்கெட் விற்றுத்தீர்ந்த நிலையில் சிறப்பு ரெயிலிலும் டிக்கெட் முடிவு பெற்றது.

    • கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.
    • வட மாநிலங்களில் தசரா பண்டிகை விசேஷமாக கொண்டாடப்படுவதால் சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பின.

    சென்னை:

    ஆயுத பூஜையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வெளியூர் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் தங்கி வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

    ஆன்மிக தலங்கள், சுற்றுலா மையங்களுக்கு குடும்பமாக செல்வதால் பஸ், ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டன. கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்களும், பல்வேறு நகரங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து இன்று வழக்கமாக செல்லும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், மதுரவாயல் பைபாஸ் ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. 

    கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். அரசு பஸ்கள், ஆம்னி பஸ்களில் சொந்த ஊர் செல்வதற்கு மாலையில் இருந்தே கூட்டம் கூடத்தொடங்கும் என்பதால் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.

    சென்னையில் இருந்து மொத்தம் 3100 பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் நெரிசல் இல்லாமல் செல்ல விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளையில் இருந்து விடுமுறை என்பதால் கார்களிலும் பயணத்தை மேற்கொண்டனர். சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பகல் நேரங்களில் புறப்படும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி காணப்பட்டன.

    வட மாநிலங்களில் தசரா பண்டிகை விசேஷமாக கொண்டாடப்படுவதால் சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பின.

    இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் காலையில் இருந்தே களை கட்டியது. கோவை, திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் ரெயில்களும் நிரம்பி காணப்பட்டன.

    எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் உயர்ந்து காணப்பட்டது. இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அதில் இடங்களை பிடிக்க பயணிகள் போட்டி போட்டனர்.

    குருவாயூர், சோழன், புதுச்சேரி எக்ஸ்பிரஸ், வைகை, பல்லவன், தேஜாஸ், வந்தே பாரத் உள்ளிட்ட பகல் நேர ரெயில்களில் பயணிக்க கூட்டம் அலைமோதியது.

    மாலையில் புறப்பட்டு செல்லக்கூடிய கன்னியாகுமரி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருவனந்தபுரம், செங்கோட்டை, கொல்லம் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பியதால் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க 3 மணி நேரத்திற்கு முன்னதாக காத்து நின்றனர். இதனால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று எல்லா பிளாட்பாரத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தன.

    இன்று மாலையில் இருந்து படிப்படியாக கூட்டம் அதிகரித்து நள்ளிரவு வரை பஸ்களில் பயணம் செய்யக்கூடும் என்பதால் அதற்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளையும் அதிகளவில் மக்கள் வெளியூர் புறப்பட்டு செல்வதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
    • அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.

    பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.

    அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.

    அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.

    பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    • அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • இன்று காலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்களுடன் சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாட்களும் சேர்ந்து வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகரித்து உள்ளது.

    சென்னை மற்றும் சுற்று பகுதியில் வசிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தொழிலாளர்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வமாக உள்ளனர்.

    ரெயில்களில் இடம் இல்லாததால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை கோயம்பேடு, மதுரவாயல் பைபாஸ், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து மொத்தம் 2264 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

    அதன்படி நாளை மட்டும் 1000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக இந்த பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது. அரசு விரைவு பஸ்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டதால் பிற போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் 17 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்ய உள்ளனர்.

    அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்ற நிலையில் தனியார் ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு அதிகரித்து உள்ளது. இந்த பண்டிகை விடுமுறையையொட்டி ஆம்னி பஸ்களில் 32 சதவீதம் முன்பதிவு அதிகரித்து உள்ளதாக ரெட் பஸ் ஆன்லைன் புக்கிங் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    ஊட்டி, கொடைக்கானல், உடுமலைப்பேட்டை போன்ற சுற்றுலா தலங்களுக்கு அதிகளவில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் திருச்செந்தூர் வேளாங்கண்ணி, திருவண்ணாமலை, பழனி போன்ற ஆன்மீக தலங்களுக்கும் ஏராளமான பேர் செல்கின்றனர். ஆயுத பூஜை விடுமுறையில் சுமார் 1.5 லட்சம் பேர் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்தும் பிற நகரங்களுக்கு பயணம் அதிகரித்து உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    தமிழ்நாடு அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறும்போது, கோயம்பேட்டில் இருந்து நாளை பல்வேறு நகரங்களுக்கு 1270 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதில் 70 சதவீத இடங்கள் நிரம்பி விட்டன. 21-ந் தேதி (சனிக்கிழமை)யும் அதிக முன்பதிவு உள்ளது. 50 ஆயிரம் பேர் நாளை பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர் என்றார்.

    இது தவிர சென்ட்ரல், எழும்பூர், ரெயில் நிலையங்களில் இருந்து வட மாநிலங்களுக்கும், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் ரெயில்களிலும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

    • கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மலர் அங்காடி வளாகத்தில் ஆயுத பூஜையையொட்டி சிறப்பு சந்தை இன்று தொடங்கியது.
    • சிறப்பு சந்தை திறக்கப்பட்டதையொட்டி பொதுமக்கள் வீடுகளுக்கு தேவையான பூஜை பொருட்களை குறைந்த விலையில் வாங்கி சென்றனர்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விழா காலங்களில் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். பொதுமக்கள் பண்டிகைகளை கொண்டாடுவதற்கான பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்காக இந்த சிறப்பு சந்தை நடைபெறும்.

    இந்த சந்தையில் பொதுமக்களுக்கு பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில் இந்த சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். இந்த சந்தையானது, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் மூலம் ஏலம் விடப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலம் நடத்தப்படும்.

    தற்போது கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் மூலம் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த முறை சிறப்பு சந்தை நடத்துவதற்காக ஏலம் விடப்படவில்லை. கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகமே நேரடியாக சிறப்பு சந்தையை நடத்துகிறது.

    அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மலர் அங்காடி வளாகத்தில் ஆயுத பூஜையையொட்டி சிறப்பு சந்தை இன்று தொடங்கியது. இதில் முதல் நாளான இன்று பல கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த சிறப்பு சந்தையில் நவராத்திரி மற்றும் ஆயுத பூஜையை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த சந்தையில் பொரி, கடலை, வாழைப்பழம், வாழைக்கன்று, வாழை இலை, தேங்காய், கரும்பு போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை உள்ளிட்ட பூஜையில் வைப்பதற்கு தேவையான அனைத்து பழங்களும் விற்கப்படுகிறது.

    சாமி படங்களுக்கு அணிவிப்பதற்கான சாமந்தி உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

    சிறப்பு சந்தை திறக்கப்பட்டதையொட்டி பொதுமக்கள் இங்கு வந்து வீடுகளுக்கு தேவையான பூஜை பொருட்களை குறைந்த விலையில் வாங்கி சென்றனர். இங்கு பொருட்கள் மொத்த விலையிலும், சில்லரை விலையிலும் விற்பனை செய்யப்பட்டன. இந்த சிறப்பு சந்தை வருகிற 27-ந்தேதி வரை 10 நாட்களுக்கு செயல்படும்.

    • சென்னையில் இருந்து தினமும் 2,100 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.
    • வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களும் நிரம்பி செல்கின்றன.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்ந்து வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்குவதாக அரசு அறிவித்துள்ளது.

    சென்னையில் இருந்து வருகிற 20, 21 மற்றும் 22-ந் தேதி ஆகிய நாட்களில் 2,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ் பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    சென்னையில் இருந்து தினமும் 2,100 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கூடுதலாக 1000 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரெயில்களில் ஒரு வாரத்திற்கு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. 20-ந் தேதியில் இருந்து அடுத்த வாரம் 27-ந் தேதி வரை ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன.

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மட்டுமின்றி கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன.

    இதே போல வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களும் நிரம்பி செல்கின்றன. இடங்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ளது.

    இதுபோல அரசு விரைவு பஸ்களிலும் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. குறிப்பாக 20, 21 மற்றும் 24-ந் தேதிகளில் இடங்கள் இல்லை. பிற போக்குவரத்து கழக பஸ்களிலும் விறுவிறுப்புடன் முன்பதிவு நடைபெறுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    20-ந் தேதி பயணம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரூ.29 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக தேவையான அளவு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் 2,500 அரசு பஸ்களில் தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையைபோல ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆம்னி பஸ்களில் வழக்கம் போல பயணிகளின் தேவையை பொறுத்து கட்டணத்தை உயர்த்தி விட்டனர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ஏ.சி. வசதி இல்லாத இருக்கைகளுக்கு ரூ.1,500 வரை வசூலிக்கப்படுகிறது. ஏ.சி.வசதியுடன் இருக்கையாக இருந்தால் ரூ.2ஆயிரம் வரையிலும், படுக்கையாக இருந்தால் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து 20, 21, 22 மற்றும் வெளியூர்களுக்கு சென்னை திரும்ப 24, 25-ந் தேதிகளில் பயணம் செய்ய பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

    • தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரெயில்களில் ஒரு வாரத்திற்கு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
    • தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மட்டுமின்றி கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்ந்து வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்குவதாக அரசு அறிவித்துள்ளது.

    சென்னையில் இருந்து வருகிற 20, 21 மற்றும் 22-ந்தேதி ஆகிய நாட்களில் 2,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ் பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    சென்னையில் இருந்து தினமும் 2,100 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூடுதலாக 1000 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரெயில்களில் ஒரு வாரத்திற்கு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. 20-ந் தேதியில் இருந்து அடுத்த வாரம் 27-ந்தேதி வரை ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன.

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மட்டுமின்றி கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன.

    இதே போல வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களும் நிரம்பி செல்கின்றன. இடங்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ளது.

    இதுபோல அரசு விரைவு பஸ்களிலும் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. குறிப்பாக 20, 21 மற்றும் 24-ந்தேதிகளில் இடங்கள் இல்லை. பிற போக்குவரத்து கழக பஸ்களிலும் விறுவிறுப்புடன் முன்பதிவு நடைபெறுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    20-ந்தேதி பயணம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரூ.29 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக தேவையான அளவு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் 2,500 அரசு பஸ்களில் தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையை போல ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆம்னி பஸ்களில் வழக்கம் போல பயணிகளின் தேவையை பொறுத்து கட்டணத்தை உயர்த்தி விட்டனர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ஏ.சி. வசதி இல்லாத இருக்கைகளுக்கு ரூ.1,500 வரை வசூலிக்கப்படுகிறது. ஏ.சி.வசதியுடன் இருக்கையாக இருந்தால் ரூ.2ஆயிரம் வரையிலும், படுக்கையாக இருந்தால் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து 20, 21, 22 மற்றும் வெளியூர்களுக்கு சென்னை திரும்ப 24, 25-ந்தேதிகளில் பயணம் செய்ய பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

    • தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி வருகிற 21, 22-ந்தேதி (சனி, ஞாயிறு) வார விடுமுறை, 23-ந்தேதி ஆயுத பூஜை, 24- ந்தேதி விஜயதசமி என தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபபோல் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 300 பஸ்களும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 200 பஸ்கள் என கூடுதலாக 20, 21 மற்றும் 22 ஆகிய 3 நாட்களில் மொத்தம் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 24 மற்றும் 25 ஆகிய 2 நாட்களில் சென்னை தடத்தில் 300 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களிலும் 200 சிறப்பு பஸ்களும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப செல்ல 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படு த்தப்பட்டுள்ளது.

    எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
    • சென்னை, பெங்களூரிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

    சென்னை:

    ஆயுத பூஜை பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னை, பெங்களூரிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    வரும் 23ம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமை ஆகும். ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் சேர்த்து விடுமுறை நாளாக உள்ளது. அதுபோல விஜயதசமி தினமும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, பெங்களூரிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தினசரி சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஆயுத பூஜையையொட்டி கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பொதுமக்கள் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

    ×