search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை-சென்னை இடையே சிறப்பு ரெயிலில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன
    X

    நெல்லை-சென்னை இடையே சிறப்பு ரெயிலில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

    • ரெயிலின் முன்பதிவு நிறைவு பெற்ற டிக்கெட்டுகள் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.
    • சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

    நெல்லை:

    ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி சென்னையில் இருந்து இன்று இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு ரெயில் நெல்லை வந்து சேரும்.

    ரெயிலில் உள்ள சாதாரண படுக்கை பெட்டி மற்றும் எக்கனாமிக் ஏசி கிளாஸ் ஆகியவையின் முன்பதிவு டிக்கெட்டுகள் நிறைவு பெற்று காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.

    நெல்லையில் இருந்து 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.35 மணிக்கு ரெயில் புறப்பட்டு 25-ந் தேதி அதிகாலை 4.20 மணிக்கு சென்னை சென்றடையும். ரெயிலின் முன்பதிவு நிறைவு பெற்ற டிக்கெட்டுகள் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.

    தொடர் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிகமானோர் சொந்த ஊருக்கு வருகை தரும் நிலையை கருத்தில் கொண்டு புதிய சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டது.

    சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

    நெல்லை-சென்னை இடையேயான பெரும்பாலான ரெயில்களில் ஏற்கனவே டிக்கெட் விற்றுத்தீர்ந்த நிலையில் சிறப்பு ரெயிலிலும் டிக்கெட் முடிவு பெற்றது.

    Next Story
    ×