search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்"

    • பெரும்பள்ளம் ஓடையில் ஆண் பிணம் மிதப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் மாயமா னவர்கள் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோடு நெசவாளர் காலனி அருகே பெரும்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த ஆண் பிணம் அழுகி போய் இருந்தது.

    அவர் பச்சை கருப்பு புளு கலர் கட்டம் போட்ட முழு கை சட்டை அணிந்திருந்தார். அவர் கழுத்தில் ஆஞ்சநேயர் படம் வைத்த டாலர் இருந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ன தெரியவில்லை.

    ஓடையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் மாயமா னவர்கள் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோடு, குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுப்பற்றி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை.

    இதுகுறித்து, சூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஏற்காடு மலையில் பிணத்தின் மேல் கிடந்த துணிகளை வைத்து இறந்தது ஆணாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
    • 150 அடி ஆழ பள்ளத்தில் அழுகிய நிலையில் எலும்பு கூடு மட்டும் கிடந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ளது செங்காடு கிராமம். இங்குள்ள வாழவந்தி கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் அழுகிய நிலையில் எலும்பு கூடு மட்டும் கிடந்தது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து பொதுமக்கள் சிலர் இது குறித்து ஏற்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அதன் பின்னர் தடயவியல் நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பிணத்தின் மேல் கிடந்த துணிகளை வைத்து இறந்தது ஆணாக இருக்கலாம் என்றும், 30 வயது மதிக்கதக்க இளைஞராக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

    எலும்பு கூடாக கிடந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து கிடந்தது யார்? அவர் தற்கொலை செய்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து காட்டுக்குள் வீசி சென்றனரா? என்று தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொய்யேரியிலிருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள இரட்டை வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொய்யேரியிலிருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள இரட்டை வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பரமத்தி வேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவரா? எப்படி இறந்தார்? வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்தாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • பவானி லட்சுமி நகர் மணக்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் விசாரணையில் இறந்தவர் பவானி லட்சுமி நகர் சென்னாநாயக்கனூரை சேர்ந்த மணிவண்ணன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சித்தோடு:

    பவானி லட்சுமி நகர் மணக்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக பவானி தீயணைப்பு நிலையத்திற்கு பழனிவேல் ராஜன் என்பவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆணின் உடலத்தை கயிறு கட்டி கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீசார் சம்பவயிடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் பவானி லட்சுமி நகர் சென்னாநாயக்கனூரை சேர்ந்த மணிவண்ணன் (35) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இறந்த மணிவண்ணன் உடலை மீட்ட சித்தோடு போலீசார் பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×