கிணற்றில் மிதந்த ஆண் பிணம்

பவானி லட்சுமி நகர் மணக்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.போலீசார் விசாரணையில் இறந்தவர் பவானி லட்சுமி நகர் சென்னாநாயக்கனூரை சேர்ந்த மணிவண்ணன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கிணற்றில் மிதந்த ஆண் பிணம்
Published on

சித்தோடு:

பவானி லட்சுமி நகர் மணக்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக பவானி தீயணைப்பு நிலையத்திற்கு பழனிவேல் ராஜன் என்பவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆணின் உடலத்தை கயிறு கட்டி கிணற்றிலிருந்து மீட்டனர். பின்னர் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவயிடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் பவானி லட்சுமி நகர் சென்னாநாயக்கனூரை சேர்ந்த மணிவண்ணன் (35) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இறந்த மணிவண்ணன் உடலை மீட்ட சித்தோடு போலீசார் பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com