சாக்கடையில் ஆண் பிணம்

குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாக்கடையில் ஆண் பிணம்
Published on

ஈரோடு:

ஈரோடு பெருந்துறை ரோடு, குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுப்பற்றி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை.

இதுகுறித்து, சூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com