நன்செய் இடையாறில் இரட்டை வாய்க்காலில் ஆண் பிணம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொய்யேரியிலிருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள இரட்டை வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதந்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நன்செய் இடையாறில் இரட்டை வாய்க்காலில் ஆண் பிணம்
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொய்யேரியிலிருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள இரட்டை வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பரமத்தி வேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவரா? எப்படி இறந்தார்? வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்தாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com