search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில்"

    • ரமேஷ் (வயது 49), விவசாயி. இவர் அங்குள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.
    • அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூர் கோணகழுத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 49), விவசாயி. இவர் அங்குள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். நேற்று அங்குள்ள அவரது உறவினரான செல்லப்பன் என்பவரது விவசாய கிணற்றில் ரமேஷ் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். தொடர்ந்து அவரது உடலை கயிறு கட்டி மீட்டனர். தகவல் அறிந்த தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்ற போது அவர் கால் தவறி விழுந்தாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • இருக்கூர், வலசுப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் ஒன்று மிதப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கிணற்றில் சடலமாக மிதந்தவர் சுமார் 26 வயது நிரம்பிய வட மாநில வாலிபர் என்பது தெரியவந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் ஒன்று மிதப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் அடிப்படை யில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து, சுமார் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டனர்.

    பின்னர் ஆம்பு லன்ஸ் மூலம் பிரேதத்தை பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர். இதில், கிணற்றில் சடலமாக மிதந்த வர் சுமார் 26 வயது நிரம்பிய வட மாநில வாலிபர் என்பது தெரியவந்துள்ளது.

    இவர் எங்கு வேலை பார்த்து வருகிறார்? எதற்காக இப்பகுதிக்கு வந்தார்? எப்படி கிணற்றில் விழுந்தார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? என்பது குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • பழனிசாமி தோட்டத்து கிணற்றில் கால் தவறி விழுந்தார்.
    • தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஓட்டக்குட்டை ரோடு கோழிக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (43). விவசாயி. இவரது தோட்டத்தில் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.

    இந்நிலையில் பழனிசாமி தோட்டத்து கிணற்றில் மோட்டார் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கால் தவறி அவர் கிணற்றில் விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 மணி நேரமாக போராடி கயிறு கட்டி பழனிசாமியை பிணமாக மீட்டனர்.

    இறந்த பழனிசாமிக்கு ரேவதி என்ற மனைவியும், 7 வயதில் மகனும் உள்ளனர். இதனையடுத்து சத்தியமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வரகம்பாடி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (59) என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 55). இவர் மின் மோட்டார்களை சரி செய்யும் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    இவர் இன்று காலை வரகம்பாடி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (59) என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் கிணற்றில் கடந்த 14-ந் தேதி பச்சிளம் குழந்தையின் உடல் மிதந்தது.
    • சம்பவ இடத்திற்கு வந்த எருமைப்பட்டி போலீசார், நாமக்கல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் விஸ்வநாதன், ராஜு, முத்துகிருஷ்ணன். இவர்களுக்கு சொந்தமான விவசாய கிணறு அந்த பகுதியில் உள்ளது.

    இந்த கிணற்றில் கடந்த 14-ந் தேதி பச்சிளம் குழந்தையின் உடல் மிதந்தது. இது குறித்து எருமைப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த எருமைப்பட்டி போலீசார், நாமக்கல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிறந்து 3 நாட்களே ஆன இந்த குழந்தையை, கிணற்றில் வீசிக் கொன்றது யார்? என்பது தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் சமீபத்தில் குழந்தை பிறந்த நபர்கள் குறித்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிணற்றில் பொன்னுசாமி பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
    • இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அம்மன் கோவில் அண்ணா மலை கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (யது 70). இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் பொன்னு சாமி சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரது மகன் ஆனந்தராஜ் மற்றும் உறவி னர்கள் அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தனர்.

    அப்போது அண்ணா மலை கோட்டை பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே பொன்னுசாமியின் செருப்பு மற்றும் லுங்கி கிடந்தது. இதையடுத்து சந்தேகம் அடைந்த உறவி னர்கள் இது குறித்து கொடு முடி தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது கிணற்றில் பொன்னுசாமி பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை அவர்கள் மீட்டனர்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். இதில் பொன்னுசாமி குளிக்க சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் பொன்னுசாமி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த என்.புதுப்பட்டி சங்கமா பாளை யம் பகுதியை சேர்ந்தவர் நேற்று மாலை தனது அண்ணன் மகனுக்கு, அங்குள்ள கிணற்றில் நீச்சல் பழகி கொடுத்துக் கொண்டிருந்தார்.
    • நீச்சல் சொல்லி கொடுத்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த என்.புதுப்பட்டி சங்கமா பாளை யம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் சரத்குமார் (வயது 25). இவர் நேற்று மாலை தனது அண்ணன் மகனுக்கு, அங்குள்ள கிணற்றில் நீச்சல் பழகி கொடுத்துக் கொண்டிருந்தார்.

    அப்போது கிணற்றில் இருந்த படிக்கட்டு வழியாக மேலே ஏறி வரும்போது, சரத்குமார் கால் தவறி கிணற்றினுள் விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டதால் தண்ணீரில் தத்தளித்தார். பின்னர் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்த அவரது சகோதரர் மகன் கதறினார். பின்னர் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து சென்ற உறவினர்கள், தண்ணீரில் மூழ்கி கிடந்த சரத்குமாரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். நீச்சல் சொல்லி கொடுத்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அருகில் இருந்தவர்கள் உங்களது தந்தை குடிபோதையில் சைக்கிள் எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறினர்.
    • இது குறித்த தகவலின் பெயரில் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த சாணார்பாளையம் ஆண்டாள் நகரை சேர்ந்தவர் ராமசாமி(52).

    இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு தேவி, லாவண்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சரோஜா கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ராமசாமி மட்டும் ஆண்டாள் நகரில் தனியாக வசித்து வந்தார். தேவி, லாவண்யா தினமும் தந்தையிடம் போனில் பேசி வந்தனர்.

    எங்களின் கடந்த 28-ந் தேதி மகள்கள் இருவரும் தந்தைக்கு போன் செய்தனர். ஆனால் போனை அவர் எடுக்கவில்லை. இதனை அடுத்து மகள்கள் இருவரும் ஆண்டாள் நகருக்கு வந்து விசாரித்த போது அருகில் இருந்தவர்கள் உங்களது தந்தை குடிபோதையில் சைக்கிள் எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறினர்.

    இதையடுத்து தந்தையை பல்வேறு இடங்களில் தேடினர். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி தாட்டரவலசு, கருக்கன் காட்டு தோட்டம் பகுதியில் உள்ள கிணற்றில் ராமசாமி பிணமாக கிடந்தார்.

    இது குறித்த தகவலின் பெயரில் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ராமசாமி குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பழனிச்சாமி தனது தம்பி செல்லமுத்துக்கு சாப்பாடு எடுத்து வந்து அவரது தோட்டத்து வீட்டிற்கு வந்துள்ளார்.
    • இந்நிலையில் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஆணின் உடல் மிதப்பதாக தகவல் பரவியது.
    • லதிக்குமார் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் திடீரென லதிக்குமார் மாயமானான்.
    • இந்நிலையில் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு குழந்தையின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

    கொடுமுடி:

    ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் படகுடா பகுதியை சேர்ந்தவர் சோட்டுக்குமார். இவரது மனைவி அனிதாடிகள். இவர்களுக்கு லதிக்குமார் (5) என்ற மகன் உள்ளான்.

    சோட்டுகுமார் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மலையம் பாளையம் அடுத்த கணபதிபாளையத்தில் உள்ள சிமெண்ட் கல் அறுக்கும் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

    சோட்டு குமாருடன் அவரது மனைவியும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த கம்பெனியில் கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களின் மகன் லதிக்குமார் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் திடீரென லதிக்குமார் மாயமானான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சோட்டுகுமார் மற்றும் அவரது மனைவி மகனை பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு குழந்தையின் உடல் மிதப்ப தாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சோட்டுகுமார் மனைவியுடன் சென்று பார்த்தார். அப்போது கிணற்றில் அவர்களது மகன் மிதந்து கொண்டு இருந்தான். இதை கண்டு அவர்கள் அலறி துடித்தனர். இது குறித்து போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லதிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பரி சோதித்த டாக்டர்கள் அந்த சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மலை யம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்றோர்களுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் அங்கிருந்து வெளியே வந்து அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விளையாடிய போது கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆப்பக்கூடல் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.
    • இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த ஓரிச்சேரிபுதூர், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சாந்தி (52). இந்நிலையில் நேற்று சாந்தி ஓரிச்சேரிபுதூர், அய்யர் தோட்டத்திற்கு அருகே உள்ள ராட தன்னாட்சி முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    தோட்டத்தின் வண்டி தடத்திற்கு மேற்புறம் உள்ள விவசாயத் தோட்ட கிணறு அருகே சாந்தி நின்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.

    அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறை அருகே 50 அடி ஆழம் கொண்ட தோட்டத்து கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.
    • பெருந்துறை போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள கிரே நகர் பெரிய காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர். இவரது மனைவி அம்மணியம்மாள் (வயது 88). கணவர் இறந்து விட்ட நிலையில் அம்மணியம்மாள் தனது மகன் துரைசாமி என்பவரது வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    துரைசாமி அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட 10 அடி தண்ணீர் உள்ள தோட்டத்து கிணறு உள்ளது. நேற்று இரவு அம்மணியம்மாள் கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

    உடனடியாக துரைசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி அம்மணியம்மாள் உடலை கயிறு கட்டி பிணமாக மீட்டனர்.

    பின்னர் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் அம்மணியம்மாளின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×