கபிலர்மலை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த வட மாநில தொழிலாளி

இருக்கூர், வலசுப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் ஒன்று மிதப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிணற்றில் சடலமாக மிதந்தவர் சுமார் 26 வயது நிரம்பிய வட மாநில வாலிபர் என்பது தெரியவந்துள்ளது.
கபிலர்மலை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த வட மாநில தொழிலாளி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் ஒன்று மிதப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படை யில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து, சுமார் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டனர்.

பின்னர் ஆம்பு லன்ஸ் மூலம் பிரேதத்தை பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர். இதில், கிணற்றில் சடலமாக மிதந்த வர் சுமார் 26 வயது நிரம்பிய வட மாநில வாலிபர் என்பது தெரியவந்துள்ளது.

இவர் எங்கு வேலை பார்த்து வருகிறார்? எதற்காக இப்பகுதிக்கு வந்தார்? எப்படி கிணற்றில் விழுந்தார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? என்பது குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com