கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

ஆப்பக்கூடல் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த ஓரிச்சேரிபுதூர், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சாந்தி (52). இந்நிலையில் நேற்று சாந்தி ஓரிச்சேரிபுதூர், அய்யர் தோட்டத்திற்கு அருகே உள்ள ராட தன்னாட்சி முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

தோட்டத்தின் வண்டி தடத்திற்கு மேற்புறம் உள்ள விவசாயத் தோட்ட கிணறு அருகே சாந்தி நின்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.

அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com