தேவூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி

ரமேஷ் (வயது 49), விவசாயி. இவர் அங்குள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.
தேவூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூர் கோணகழுத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 49), விவசாயி. இவர் அங்குள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். நேற்று அங்குள்ள அவரது உறவினரான செல்லப்பன் என்பவரது விவசாய கிணற்றில் ரமேஷ் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். தொடர்ந்து அவரது உடலை கயிறு கட்டி மீட்டனர். தகவல் அறிந்த தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்ற போது அவர் கால் தவறி விழுந்தாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com