கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

பழனிசாமி தோட்டத்து கிணற்றில் கால் தவறி விழுந்தார்.தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஓட்டக்குட்டை ரோடு கோழிக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (43). விவசாயி. இவரது தோட்டத்தில் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.

இந்நிலையில் பழனிசாமி தோட்டத்து கிணற்றில் மோட்டார் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கால் தவறி அவர் கிணற்றில் விழுந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 மணி நேரமாக போராடி கயிறு கட்டி பழனிசாமியை பிணமாக மீட்டனர்.

இறந்த பழனிசாமிக்கு ரேவதி என்ற மனைவியும், 7 வயதில் மகனும் உள்ளனர். இதனையடுத்து சத்தியமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com