search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரும்பள்ளம்"

    • அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.
    • இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக பவானிசாகர், தாளவாடி, சத்தியமங்கலம், அணைப்பகுதிகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    இந்நிலையில் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

    இதேப்போல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவில் உள்ளது. இதேபோல் 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டமும் தனது முழு கொள்ளளவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.

    தற்போது இந்த அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

    இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பெரும்பள்ளம் ஓடையில் ஆண் பிணம் மிதப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் மாயமா னவர்கள் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோடு நெசவாளர் காலனி அருகே பெரும்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த ஆண் பிணம் அழுகி போய் இருந்தது.

    அவர் பச்சை கருப்பு புளு கலர் கட்டம் போட்ட முழு கை சட்டை அணிந்திருந்தார். அவர் கழுத்தில் ஆஞ்சநேயர் படம் வைத்த டாலர் இருந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ன தெரியவில்லை.

    ஓடையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் மாயமா னவர்கள் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×