search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறுவடை"

    • குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்
    • சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    குண்டடம்:

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதியாகும். இதனால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்டபகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்

    இது குறித்து மேட்டுக்கடையை சேர்ந்த ஒரு விவசாயி கூறியதாவது;-

    குண்டடம் வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம்.

    இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களைஅதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 75 ஆயிரம் வரை செலவாகிறது.

    இந்தநிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடையை தீவிரமாக செய்துவருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே அதிக விலைக்கு விற்பனையானதால் இப்பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக சின்ன வெங்காயத்தை பயிர் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சின்ன வெங்காயம் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்து ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கடந்த சீசனில் பெறும் நஷ்டம் அடைந்தனர்.

    நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடிவதில்லை என்றாலும் குறைந்த அளவு விவசாயிகள் சின்ன வெங்காயத்தை தற்போது அறுவடை செய்து கொண்டனர்.

    அவர்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வருகிற 25-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
    • 25 டன் அளவு வரை எண்ணெய் பனை குலைகள் அறுவடை செய்யப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேசிய சமையல் எண்ணெய் - எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் 8 ஹெக்டர் அளவில் புதிய பரப்பு விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது. அதுபோன்று இந்த ஆண்டும் தேசிய சமையல் எண்ணெய் - எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் 20 ஹெக்டர் அளவில் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த இலக்கினை 75 சதவீதம் சாதனை அடையும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் பனை இயக்கம் திட்டத்தின் கீழ் மாபெரும் எண்ணெய் பனை கன்று நடவு விழா வருகிற 25-ம் தேதி முதல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

    இந்த மாபெரும் விழாவில் மாவட்ட கலெக்டர் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    எண்ணெய் பனை பயிரானது நடவு செய்ததிலிருந்து மூன்று ஆண்டுகளில் மகசூல் தரவல்லது. எண்ணெய் பனை நடவு செய்வதற்கு களி கலந்த மணல் அல்லது செம்மண் கலந்த மணல் பகுதி மற்றும் நல்ல நீர் வசதி மிக்க பகுதி ஏற்றதாகும். ஒரு ஹெக்டேருக்கு 20 லிருந்து 25 டன் அளவு வரை எண்ணெய் பனை குலைகள் அறுவடை செய்யப்படுகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் எண்ணெய் பனை குலைகள் அரசு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் வரை அரசு அங்கீகாரம் பெற்ற கோத்ரெஜ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படாது.

    தற்போது நடைபெற உள்ள இந்த விழாவில் பங்கேற்று மானியம் பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அசல் அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, வயல் வரைபடம் மற்றும் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்தும் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் இந்த எண்ணெய் பனை நடவு விழாவில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் தஞ்சாவூர், பூதலூர் -9943422198, ஒரத்தநாடு, திருவோணம் -9488945801, பட்டுக்கோட்டை, மதுக்கூர் - 6374921241, கும்பகோணம், திருவிடைமருதூர்,

    திருப்பனந்தாள் - 9842569664, பாபநாசம், அம்மாபேட்டை, திருவையாறு - 7539940657, பேராவூரணி , சேதுபாவா சத்திரம் -8903431728 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
    • உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை கால நெல் சாகுபடியும் நடைபெறும்.

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடைகால நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடந்து வந்தது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    அதிலும் குறிப்பாக கண்டிதம்பட்டு, புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கருக்கும் மேல் கோடைகால நெற்பயிர்கள் வயலிலே தண்ணீர் தேங்கி சாய்ந்தன. மாவட்டம் முழுவதும் கணக்கிட்டால் சாய்ந்த நெற்பயிர்களின் ஏக்கர் அளவு அதிகரிக்கும். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இன்னும் குறைந்தது மூன்று நாட்களுக்காவது மழை இன்றி வெயில் அடித்தால் மட்டுமே தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களை ஓரளவாது காப்பாற்ற முடியும். தற்போது தண்ணீர் தேங்கி பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    • விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர்.
    • கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்த போது நல்ல விலைக்கு விற்பனையானது.

    குண்டடம் :

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயி ராசு கூறியதாவது;- குண்டடம் வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.

    கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்த போது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.75ஆயிரம் வரை செலவாகிறது.

    சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு எந்த பயிர்களையும் உற்பத்தி செய்யமுடியாதநிலை ஏற்பட்டுவிடும். இதனால் அறுவடை செய்யும் பயிர்களின் மூலம் வருவாய் கிடைத்தால் மட்டுமே வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும். உரம், இடுபொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேசெல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கவலை அடைந்துள்ளனர். நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடிவதில்லை. தண்ணீர் கிடைத்து நல்ல விவசாயம் செய்தால் நல்ல விலை கிடைப்பதில்லை.

    எனவே அரசு முன்வந்து விவசாயிகளை பாதிக்காதவகையில் உரிய விலையை நிர்ணயித்து சின்ன வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • புலியடி வாய்க்காலின் மதகு கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டது.
    • விவசாயிகள் அறுவடை நேரத்தில் கடும் அவதி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    பூதலூர் அருகே உள்ள கங்கை சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கண்ணன் மற்றும் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

    வெண்ணாறு கோட்டம் பூதலூரில் ஆனந்த காவிரி கிளையான புலியடி வாய்க்காலின் மதகு கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டது.

    இதனால் விவசாயிகள் அறுவடை நேரத்தில் கடும் அவதி அடைந்தனர். எனவே மேற்படி வாய்க்காலில் மதகு அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 2 கிலோ விதை தேவைப்படுகிறது.
    • ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 டன் வரை மகசூல் கொடுக்கும்.

    உடுமலை :

    குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. பீட்ரூட் மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. பீட்ரூட் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு வசதியாக வெவ்வேறு காலங்களில் அறுவடை செய்யும் வகையில் சில நாட்கள் இடைவெளி விட்டு விதைக்கப்படுகிறது.

    பீட்ரூட் சாகுபடி செய்தால் 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என்பதால் விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பீட்ரூட் சாகுபடி செய்வது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:- குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 2 கிலோ விதை தேவைப்படுகிறது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல், அறுவடை செய்தல் என ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவாகிறது. கோடைகாலங்களில் பீட்ரூட் மகசூல் குறைந்தும், குளிர்காலத்தில் மகசூல் அதிகரித்தும் காணப்படுகிறது.

    ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 டன் வரை மகசூல் கொடுக்கும். கடந்த காலங்களில் ஒரு கிலோவிற்கு சராசரியாக ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. வியாபாரிகள் தோட்டங்களுக்குள் நேரடியாக வந்து அறுவடை செய்து கழுவி சுத்தம் செய்து பைகளில் அடைத்து எடுத்துச் செல்கிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் பீட்ரூட் உடுமலை, பொள்ளாச்சி மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட பீட்ரூட் விற்பனைக்காக பைகளில் அடைக்கப்படுகிறது. தற்போது ஒரு கிலோ பீட்ரூட் ரூ.5 முதல் ரூ. 7 வரை மட்டுமே விற்பனை ஆகிறது என்றனர்.

    • நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    • காய்கறி சாகுபடியை விட இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது.

    குடிமங்கலம் :

    உடுமலை பகுதியில் சின்னவெங்காய சாகுபடியில் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து ள்ளனர்.

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பா சனத்துக்கு இரு சீசன்களில் சின்னவெங்காயம் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.நாற்று நடவு முறையை பின்பற்றுகின்றனர். பிற காய்கறி சாகுபடியை விட இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது. எனவே அறுவடையின் போது, விலை வீழ்ச்சி ஏற்பட்டால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.இந்நிலையில் கடந்த தை பட்டத்திலும், பின்பட்டத்தி லும் நடவு செய்யப்பட்ட சின்னவெ ங்காய சாகுபடியில் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சின்னவெங்காய சாகுபடியில் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக இந்தாண்டு அறுவடை செலவும் பல மடங்கு அதிக ரித்து விட்டது.நடப்பு சீசனில் போதிய மழை இல்லாததால் பயிரின் வளர்ச்சி பாதித்தது. தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில், கிலோ 20 - 30 ரூபாய்க்கு நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது.எனவே அறுவடை சீசனில் ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மகசூல் குறைந்துள்ளதால் கடலையை அறுவடை செய்ய கூலி வழங்க முடியாமல் விவசாயிகள் வேதனை.
    • கூடுதல் ரகங்களில் விதைகடலை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளான, புதுப்பள்ளி, காமேஸ்வரம், தாண்டவமூர்த்திகாடு, பூவைத் தேடி, விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் வேர்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 105 நாட்கள் பயிரான இது, வருடத்திற்கு 3 முறை பயிர் செய்யப்படுகின்றது. தற்போது, பயிர் செய்யப்பட்ட வேர்கடலை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் பருவம் தவறிய கனமழை பெய்ததால் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

    கனமழையின் காரணமாக கடலையின் வேர்ப்பகுதியில் தண்ணீர் தேங்கி அழுகி கடலையின் உற்பத்தி குறைந்துள்ளது. ஒரு செடிக்கு 15 முதல் 20 கடலை பருப்புகள் இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் தரக் கூடியதாக இருக்கும். ஆனால் தற்போது 4 அல்லது 3 என்ற அளவில் உள்ளது. மேலும் ஒரு ஏக்கருக்கு 10000 ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து உள்ளதால் கடலையை அறுவடை செய்ய கூலி வழங்க முடியாமல் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் நிலக்கடலையை கூடுதல் ரகங்களில் விதைகடலை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் நிலக்கடலைக்கு உரிய விலை இல்லை எனவும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக கோ 17 என்ற ரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
    • பருத்தி விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் அங்கக்சான்று எவ்வாறு செய்ய வேண்டும்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரம் சிமிலி கிராமத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மாநில அளவிலான பருத்தி பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தான பயிற்சி நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றினார்.

    அதனைத் தொடர்ந்து பயிற்சியின் பருத்தி சாகுபடி தொழில்நுட்ப கையேட்டை வெளியீட்டும் பருத்தி இடுபொருள் கண்காட்சியை துவக்கி வைத்து திருவாருர் மாவட்ட இணை இயக்குனர் லெட்சுமிகாந்தன் பேசுகையில்:-

    பருத்தி நமது மாவட்டத்தில் முதன்மை பணப்பயிராக பயிரிடப்படுகிறது.

    இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக கோ 17 என்ற ரகத்தினை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த ரகம் மற்றும் இயந்திரம் மூலம் அறுவடை போன்ற தொழில் நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என்றார்.

    வேளாண்மை துணை இயக்குனர் (மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்) ஏழுமலை பருத்தி சாகுபடி செய்யக்கூடிய வயல்களில் அதற்கு முன்னதாக மண் மாதிரி சேகரம் மற்றும் நீர் மாதிரி சேகரம் எவ்வாறு செய்தல் வேண்டும் என விரிவாக எடுத்துரைத்தார்.

    வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி பயிற்சி அளிக்கையில் பருத்திப்பயிரில் மண் பரிசோதனைக்கு ஏற்ப தலை மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும் என்றும், உர அளவு, உரம் இடுதல் மற்றும் உர மேலாண்மை போன்ற தொழில்நுட்ப கருத்துகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

    வேளாண்மை உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) ஹேமா ஹப்சிபா நிர்மலா பேசுகையில்,பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியாக வருகிற 31-ந் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக காப்பீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார் .மேலும் ஜெயப்பிரகாஷ் வேளாண்மை உதவி இயக்குனர் (விதை சான்று) பருத்தி விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் அங்கக்சான்று எவ்வாறு செய்ய வேண்டும் என்கின்ற தொழில்நுட்ப கருத்துகளை எடுத்துரைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் அருள்செல்வி, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்த்தில் ஸ்பிரேயர் பருத்தி நுன்னுட்டம், தார்ப்பாய் போன்ற பருத்திக்குத் தேவையான இடுபொருட்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    இப்பபயிற்சி முகாமில் சிமிலி ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன், வேளாண்மை அலுவலர் வெங்கடேஸ்வரன், துணை வேளாண்மை அலுவலர் ரவி, உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக உளுந்து சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • கிலோ ரூ.70க்கு விற்பனையால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்துள்ளது

    கரூர், 

    புனவாசிப்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து அறுவடை பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அருகே, புனவாசிப் பட்டி, கொம்பாடிப்பட்டி, நரசிங்கபுரம், மத்திப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக உளுந்து சாகுபடி செய்துள்ளனர். தற்போது கிணற்று நீர் பாசன முறையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டது.இதில் உளுந்து பயிர்கள் செழிப்பாக வளர்ந்து, அறுவடைக்கு தயாராகின. இதையடுத்து அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. உளுந்து கிலோ 70 ரூபாய்க்கு விற்ப னையாகிறது. இதன் மூலம் விவசாயி களுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.

    • கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • வாய்க்கால் பாசனத்தில் அமோகம்

    கரூர், 

    கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கோவக் குளம் கிராம பகுதியில், நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவக்குளம், பிச்சம்பட்டி கிராம பகுதிகளில் விவசாயிகள் பரவலாக நெல் சாகுபடி செய்தனர். இப்பகுதியில் நெல் விளைச்சல் அடைந்து, தற்போது அறுவடை பணிகளில்விவ சாயிகள் தொடங்கியுள்ளனர். இந்த நல் வயல்கள் கட்டளை வாய்க்காலில் இருந்து பாசனம் பெறுகின்றன. இப்பகுதியில் நெல் விளைச்சல் அடைந்து தற்போது அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். கூலி ஆட்கள் பற்றாக் குறை காரணமாக நெல் அறுவடை இயந்திரம் அறுவடை பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

    • அறுவடையான வைக்கோல்கள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
    • தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம், பாப நாசம், திருவிடைமருதூர் பகுதிகளில் தற்பொழுது சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அறுவடையான வைக்கோல்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப ப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கும்பகோணம் அருகே திருப்புரம்பியம் என்ற இடத்தில் இருந்து நேற்று இரவு 165 வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல்லுக்கு கைலாசம் என்பவர் லாரியை ஓட்டி சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரி கொந்தகை அருகே சாலையில் உள்ள மின் கம்பியில் உரசி உள்ளது .இதில் வைக்கோலும், லாரியும் எரிந்து முற்றி லும் சேதமானது.

    அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. தீ விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததும் கும்பகோணத்தில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    சேதத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.

    ×