search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கன்வாடி மையம்"

    • பொன்னேரியை அடுத்த மெதுர் ஊராட்சிக்குட்பட்ட காலனியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
    • கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது.

    பொன்னேரியை அடுத்த மெதுர் ஊராட்சிக்குட்பட்ட காலனியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ரூ.11 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
    • பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாயில்பட்டி, கல்லம நாயக்கன்பட்டி, புலிப்பாறைப்பட்டி, குண்டாயிருப்பு, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திட்டப்பணிகள்

    தாயில்பட்டி ஊராட்சி யில் கலைஞர் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தி கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மயான பணிகளையும், கல்லமநாயக்கன்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.10 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள நூலக கட்டிடத்தையும் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    மேலும், புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ஜெ.ஐ.சி.ஏ. திட்டத்தின் கீழ் ரூ.11.56 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.

    பின்னர் குண்டா யிருப்பு ஊராட்சி, சுப்பிர மணியபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சேவை மையத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டப்பட உள்ள பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி இயக்குநர் (தணிக்கை) அரவிந்த், வட்டாட்சியர் ரங்கநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரு.11.80 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    வேர்க்கிளம்பி பேரூ ராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரு.11.80 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்.

    வேர்க்கிளம்பி பேரூ ராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங் குமார், துணைத் தலைவர் துரைசிங் மனு வேல், செயல் அலுவ லர் சதீஷ் குமார், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலை வர் டாக்டர் பினுலால் சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தின குமார், திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோண், மாவட்ட செயலாளர் ஜாண் இக்னேஷியஸ், காட்டாத்துறை காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாம் டிக்சன், காட்டாத்துறை ஊராட்சி தலைவர் இசை யாஸ், மற்றும் வேர்கிளம்பி பேரூராட்சி வார்டு உறுப்பி னர்கள், பொது மக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • மழை நீர் தேங்கியதால் செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தையும்,நியாய விலை கடையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தும்மக்குண்டு கிராமத்தில் வி.கள்ளப்பட்டி சாலையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்

    கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பெய்த மழையிலும், தொடர்மழை காரணமாகவும் அங்கன்வாடி மையத்தின் முன்பு முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை இல்லை. இதனால் தற்போது அந்த தண்ணீர் கழிவுநீராகி நோய் பரவும் மையமாக உருவெடுத்து உள்ளது.

    தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.இதன் காரணமாக அங்கன்வாடி மைய பொறுப்பாளர் அருகில் உள்ள தனியார் வீட்டை வாடகைக்கு எடுத்து குழந்தைகளை அங்கு வைத்து பாடம் நடத்தி வருகிறார்.

    அங்கன்வாடி மையத்தின் அருகிலே உள்ள நியாய விலைக் கடையும் தண்ணீர் தேங்கிய காரணத்தினால் மூன்று மாதத்திற்கு மேலாக பூட்டப்பட்டுள்ளது. நியாய விலை கடை திறக்க முடியாத சூழல் இருப்பதால் தற்காலிகமாக நியாய விலை கடை தும்மக்குண்டு அருகே உள்ள பெருமாள் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக உடை யாம்பட்டி, கரிசல்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் இப்பகுதியினர் தெரி வித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மூன்று மாத காலமாக மழை நீர் தேங்கியதால் செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தையும்,நியாய விலை கடையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிட பணிக்கான பூமி பூஜையும் நடந்தது.
    • சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சியில் உள்ள கண்ணுடையாள்புரம் கிராமத்தில் மாவட்ட கனிமவளத்துறை நிதி ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிட பணிக்கான பூமி பூஜையும், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிட பணிக்கான பூமி பூஜையும் நடந்தது. சோழவந்தான் சட்டம ன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், உதவி பொறியாளர் பூப்பாண்டி, பேரூராட்சி தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ், ஊராட்சி தலைவர் பவுன்முருகன், துணைதலைவர் பாக்கியம்செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், ரேகா வீரபாண்டி, சுப்பிரமணி, ஊராட்சி துணைதலைவர் கேபிள்ராஜா, ரிசபம் ஊராட்சிதலைவர் சிறுமணி, திருவேடகம் ராஜா, பேட்டை பெரியசாமி, மாணவரணி தவமணி, ஊராட்சி செயலர் திருசெந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 2 முதல் 5 வயது வரையிலான 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப சுகாதாரக் கல்வி பயின்று வருகின்றனா்.
    • ஓடுகளால் அமைக்கப்பட்ட இக்கட்டடம், மிகவும் பழுதடைந்து, மின் இணைப்பு கூட இல்லாமல் பராமரிப்பின்றி உள்ளது.

    அவினாசி:

    சமூக ஆா்வலரும், வக்கீலுமான திருமூா்த்தி முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: -

    அவிநாசி வட்டம், சேவூா் அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ராமியம்பாளையம்கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ராமியம்பாளையம், சாலைப்பாளையம், ஓடத்தோட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து 2 முதல் 5 வயது வரையிலான 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப சுகாதாரக் கல்வி பயின்று வருகின்றனா்.

    50 ஆண்டுகளுக்கு முன் கருங்கல்லாலும், ஓடுகளால் அமைக்கப்பட்ட இக்கட்டடம், மிகவும் பழுதடைந்து, மின் இணைப்பு கூட இல்லாமல் பராமரிப்பின்றி உள்ளது.மேலும் தற்போது ஓடுகள் உடைந்தும், சுவா்கள், தரைகள் தளம் இடிந்தும் உள்ளதால் மழை நீா் மையத்துக்குள் வழிகிறது.தரை ஓதத்தினால் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

    இதனால் குழந்தைகள் உட்காா்ந்து பயிலவோ, ஓய்வெடுக்கவோ, விளையாடவோ கூட இடமின்றி உள்ளதால், பெற்றோா் மிகவும் அச்சமடைந்துள்ளனா்.ஆகவே சிதிலமடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நகர பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நகர பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. 1-வது வார்டில் நடைபெற்ற நகர பகுதி சபை கூட்டத்திற்கு சிங்கம்புணரி நகர் சேர்மனும் 1-வது வார்டு உறுப்பினருமான அம்பலமுத்து தலைமை தாங்கினார். செயல் அதிகாரி ஜான் முகமது முன்னிலை வகித்தார். இதில் 1-வது வார்டு பொதுமக்கள் திரளான அளவில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பொது மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு அதற்கான தீர்வுகள் செய்து தருவதாக சேர்மன் அம்பலமுத்து உறுதியளித்தார். அதை தொடர்ந்து அந்த வார்டு பொதுமக்கள் கூறுகையில், அங்கன்வாடி மையம் சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த சமுதாயக்கூடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மின்சார வசதி கிடையாது. ஆகவே சமுதாய கூடத்தை சிறந்த முறையில் பராமரிப்பு செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும். அப்போது பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து அங்கன்வாடி மையம் உடனடியாக சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.

    • 1504 அங்கன்வாடி மையங்களிலும் கைத்தூய்மை தினம் அனுசரிக்கப்பட்டது.
    • குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ரோசல்பட்டி ஊராட்சி, முத்தால் நகர், மகாலிங்கம் தெரு அங்கன்வாடி மையத்தில் உலக கைத்தூய்மை தின நிகழ்ச்சி நடந்தது. இைதயொட்டி கைத்தூய்மையின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    உலக கைத்தூய்மை தினமான இந்த நாளில், பல வகையில் கைகளை சுத்தமாக வைத்து கொள்ள விழிப்புணர்வைத் தந்து நலம் காப்பதே கைத்தூய்மை தினத்தின் நோக்கம் ஆகும். உலக அளவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுகாதாரக் குறைபாடுகளினாலும், தன் சுத்த செயல்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காததாலும் சுமார் 1½ கோடி குழந்தைகள் இறக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதனை அறிந்த உலக சுகாதார நிறுவனம் 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதியை ''உலக கைத்தூய்மை தினமாக'' அனுசரிக்க ஆணை பிறப்பித்தது. உணவை உண்ணும் முன்பு, கழிவறை சென்று வந்த பின்பு, வெளியே சென்று வீட்டுக்கு வந்து சிறு குழந்தைகளைத் தூக்கும் முன்பு, மூக்கை சீந்திய பின்பு, தும்மும் போது கைகளை பயன்படுத்திய பின்பு, குப்பைகளை அப்புறப்ப டுத்திய பின்பு, சமைக்கும் முன்பு, சாப்பாட்டை பரிமாறும் முன்பு, மாடி கைப்பிடி பிடித்த வந்த பின்பு, நோயாளிகள், அடிபட்டவர்களுக்கு சிகிச்சை செய்த பின்பு, வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்த பின்பு, செல்லப் பிராணிகளை தொட்ட பின்பு, நூலகங்களில் புத்தகங்களை தேடி எடுத்த பின்பு, தலைக்கு எண்ணை தேய்த்து குழந்தைகளுக்கு தலை வாரிய பின்பு என பல வேலைகளைச் செய்த பிறகு கட்டாயம் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

    அனைவரும் கைகளை தூய்மையுடன் பராமரித்து நல்ல வாழ்க்கையை பெறுவோம். விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் செயல்படும் 1504 அங்கன்வாடி மையங்களிலும் உலக கைத்தூய்மை தினம் அனுசரிக்கப்பட்டு, குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    அவினாசி :

    அவினாசி வட்டம் இந்திரா காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, அங்கன்வாடி பணியாளர் பிரியங்கா, ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி ஆகியோர் பேசுகையில்,குழந்தைகள் உள்ளிட்ட பெரியோர்கள் ஊட்டச்சத்துமிக்க காய்கறி, பழங்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை தினசரி சாப்பிட்டு நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வது அவசியம் என்றனர்.

    • பூங்குணம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
    • குழந்தைகளின்அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சாரைபாம்பை விரட்டினர் .

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் பூங்குணம்ஊராட்சி அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு20-க்கும்மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கே நேற்றுதிடீரென்று சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட குழந்தைகள் அலறிஅடித்து ஓடினர். குழந்தைகளின்புத்தகபை மீது பாம்பு புகுந்து ஓடியது. அங்கு இருந்தஅங்கன்வாடி மைய பொறுப்பாளர் குழந்தைகளை பாதுகாப்பாக வெளியே அைழத்து சென்றார். குழந்தைகளின்அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சாரைபாம்பை விரட்டினர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அங்கன்வாடி மையத்தைஒட்டியுள்ளகுடியிருப்பில் மண்டி கிடக்கும் புதர்களைஅகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

    • நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு துள்ளுப்பட்டியில் அங்கன்வாடி மையம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 11 லட்சம் அங்கன்வாடி மையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    நிலக்கோட்டை :

    நிலக்கோட்டை பேரூரா ட்சிக்குட்பட்ட 4-வது வார்டு துள்ளுப்பட்டியில் அங்கன்வாடி மையம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்று தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 11 லட்சம் அங்கன்வாடி மையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார். அதற்கான பூமி பூஜை தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, திண்டுக்கல் முன்னாள் எம்.பி. உதய குமார், அம்மையநாயக்க னூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகரச் செயலாளர் சேகர், முன்னாள் மாநில பொது க்குழு உறுப்பினர் சர வணன், நகர பொருளாளர் பூக்கடை சரவணன், பேரூராட்சி 4 வது வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் கருப்பையா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை மாவட்டத்தில் 1697 அங்கான்வாடி (பால் வாடி) மையங்கள் செயல்பட்டு வருகிறது.
    • மாநகர், புறநகரில் அங்கன்வாடி களுக்கு குழந்தைகள் வருகை வெகுவாக குறைந்து வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் 1697 அங்கான்வாடி (பால் வாடி) மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சியில் 615 அங்கன்வாடி மையங்களும், பேரூராட்சிகளில் 325, நகராட்சிகளில் 103, ஊரக பகுதியில் 757 மையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் 2 முதல் 5 வயது வரையுள்ள 1,79,322 குழந்தைகள் கல்வி கற்கின்றனர். 3 ஆண்டிற்கு கீழ் 91,784 குழந்தைகளும், 3 முதல் 5 வயது வரை 66,639 குழந்தைகளும் கல்வி கற்கின்றனர். மாநகர், புறநகரில் அங்கன்வாடி களுக்கு குழந்தைகள் வருகை வெகுவாக குறைந்து வருகிறது.

    கடந்த சில ஆண்டிற்கு முன் ஒரு மையத்தில் சரா சரியாக குழந்தைகளின் வருகை 50 ஆக இருந்தது. இப்போது சராசரியாக 20 குழந்தைகள் கூட வருவதில்லை. சில அங்கன்வாடி மையங்களில் ஒரிரு குழந்தைகள் மட்டுமே இருக்கும் நிலையிருக்கிறது. வேலைக்கு செல்லும் தாய் மார்கள் தங்களது குழந்தைகளை விட்டு ச்செல்லும் 'டே கேர் சென்டர்' போல் சில அங்கன்வாடி மையங்களை பயன்படுத்தும் நிலையிருக்கிறது.

    இதே நிலை நீடித்தால் அங்கன்வாடிகள் பெயரளவிற்கு கூட செயல்படாமல் போய்விடும். இதை தடுக்க ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தினர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.குழந்தைகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கத்தில் வீடு,வீடாக ஆய்வு செய்து பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகளை பெற்றோரிடம் பேசி அழைத்து வந்து அங்கன்வாடி களில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி மாவட்ட அளவில் சுமார் 50 ஆயிரம் குழந்தைகளை கூடுதலாக அங்கன் வாடிகளில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அங்கன்வாடிகள் செயல்படுகிறது. இது குறித்து ஒருங்கி ணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர் முருகேஸ்வரி கூறியதாவது:-

    மாவட்ட அளவில் அங்கன்வாடிகள், நர்சரி பள்ளிகளை விட சிறப்பாக செயல்படுகிறது. நல்ல பாடத்திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். பெற்றோர்களின் வாட்ஸ் அப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதில் அங்கன்வாடி களின் தினசரி நடவடிக்கை, பாடம், பயிற்சி, உணவு குறித்த விவரங்கள், குழந்தைகளின் செயல்பாடுகள் காண்பிக்கப்படுகிறது. அங்கன்வாடிகளில் மின் விசிறி வசதிகள் இருக்கிறது. சில இடங்களில் தனியார் நிதியுதவி மூலமாக டி.வி வாங்கி வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு செயல் வழி கற்றல், விளையாட்டு மூலமாக கல்வி கற்பித்து வருகிறோம். இதில் படிக்கும் குழந்தைகள் நல்ல செயல் திறனில் இருக்கி றார்கள். குழந்தைகளின்உடல் எடை நல்லமுறை யில் கண்காணிக்கப்படுகிறது.

    மாவட்ட அளவில் அங்கன்வாடிகளுக்கு வரும் குழந்தைகளில் 3 வயது வரையுள்ள 89,989 பேர் நல்ல உடல் திறனில் இருக்கிறார்கள். 3 முதல் 5 வயது வரையில் 65,115 பேர் நல்ல உடல் திறனில் இருக்கிறார்கள். 98 குழந்தைகள் மட்டுமே உடல் எடை குறைவாக இருப்பதும், 95 குழந்தைகள் அதிக உடல் எடையில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.அங்கன்வாடியில் சில கட்டிடங்கள் வாடகை யில் இயங்கி வருகின்றன. இதற்கு அரசு கட்டிடங் கள் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கிறோம்.

    45 அங்கன்வாடிகள் தரம் உயர்த்தப்பட்டது. தின மும் ஒரு வகை உணவு வழங்கப்படுகிறது. செவ் வாய்க்கிழமை சுண்டல் வகைகளும், வெள்ளிக்கிழமை கிழங்கு வகையும் வழங்கப்படுகிறது. மற்ற நாட்களில் உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×