சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நகர பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரியில் கிராமசபை கூட்டம் நடந்தது. 
சிங்கம்புணரியில் கிராமசபை கூட்டம் நடந்தது. 
Published on

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நகர பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. 1-வது வார்டில் நடைபெற்ற நகர பகுதி சபை கூட்டத்திற்கு சிங்கம்புணரி நகர் சேர்மனும் 1-வது வார்டு உறுப்பினருமான அம்பலமுத்து தலைமை தாங்கினார். செயல் அதிகாரி ஜான் முகமது முன்னிலை வகித்தார். இதில் 1-வது வார்டு பொதுமக்கள் திரளான அளவில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பொது மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு அதற்கான தீர்வுகள் செய்து தருவதாக சேர்மன் அம்பலமுத்து உறுதியளித்தார். அதை தொடர்ந்து அந்த வார்டு பொதுமக்கள் கூறுகையில், அங்கன்வாடி மையம் சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த சமுதாயக்கூடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மின்சார வசதி கிடையாது. ஆகவே சமுதாய கூடத்தை சிறந்த முறையில் பராமரிப்பு செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும். அப்போது பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து அங்கன்வாடி மையம் உடனடியாக சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com