search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.11 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம்
    X

    புலிப்பாறைபட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை கலெக்டர் மேகநாதரெட்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ரூ.11 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம்

    • புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ரூ.11 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
    • பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாயில்பட்டி, கல்லம நாயக்கன்பட்டி, புலிப்பாறைப்பட்டி, குண்டாயிருப்பு, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திட்டப்பணிகள்

    தாயில்பட்டி ஊராட்சி யில் கலைஞர் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தி கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மயான பணிகளையும், கல்லமநாயக்கன்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.10 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள நூலக கட்டிடத்தையும் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    மேலும், புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ஜெ.ஐ.சி.ஏ. திட்டத்தின் கீழ் ரூ.11.56 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.

    பின்னர் குண்டா யிருப்பு ஊராட்சி, சுப்பிர மணியபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சேவை மையத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டப்பட உள்ள பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி இயக்குநர் (தணிக்கை) அரவிந்த், வட்டாட்சியர் ரங்கநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×