search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child care center"

    • அரசு ஊழியர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது.
    • குழந்தைகள் கவனிப்பு மையம் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அரசு ஊழியர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொலைக்காட்சி வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட கவனிப்பு மையத்தினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அரசின் சார்பில் மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு விடுப்பு முடிந்து பணியில் சேரும், ஒரு குடும்பத்தில் கணவன். மனைவி அல்லது இருவரும் அரசு ஊழியர்களாக பணிபுரியும் பட்சத்தில் அவர்களின் குழந்தைகளை கவனித்து கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது.

    இந்த சூழ்நிலையை தவிர்ப்பதற்காக, மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் என மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்திற்கு உட்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அரசு பெண் ஊழியர்களின் நலன் கருதி, அவர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் பராமரிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 3-வது தளத்தில் குளிரூட்டப்பட்ட மற்றும் தொலைக்காட்சி வசதியுடன் கூடிய குழந்தைகள் கவனிப்பு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதக்கட்டணமாக ரூ.500 மட்டும் செலுத்தப்பட வேண்டும்.

    குழந்தைகள் கவனிப்பு மையம் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். குழந்தைகளுக்கு தொலைக்காட்சி மூலம் அறிவு சார்ந்த குறும்படங்கள், விளையாட்டு குறும்படங்கள் ஒளிபரப்பப்படும். மேலும், கல்வி கற்பிக்கும் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்களுடன், குழந்தைகளை கண்காணித்துக் கொள்ள 2 அங்கன்வாடி பணியாளர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மையத்தில் குழந்தைகளுக்கு பால் மற்றும் பழங்கள் தினசரி வழங்கப்பட உள்ளது. வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு சுழற்சி முறையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடி மருத்துவ தேவைக்காக, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் மருத்துவரை அழைத்து மருத்துவம் மேற்கொள்ளவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

    • நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு துள்ளுப்பட்டியில் அங்கன்வாடி மையம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 11 லட்சம் அங்கன்வாடி மையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    நிலக்கோட்டை :

    நிலக்கோட்டை பேரூரா ட்சிக்குட்பட்ட 4-வது வார்டு துள்ளுப்பட்டியில் அங்கன்வாடி மையம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்று தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 11 லட்சம் அங்கன்வாடி மையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார். அதற்கான பூமி பூஜை தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, திண்டுக்கல் முன்னாள் எம்.பி. உதய குமார், அம்மையநாயக்க னூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகரச் செயலாளர் சேகர், முன்னாள் மாநில பொது க்குழு உறுப்பினர் சர வணன், நகர பொருளாளர் பூக்கடை சரவணன், பேரூராட்சி 4 வது வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் கருப்பையா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×