search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker murder"

    • செல்போன் பறிக்கும் முயற்சியில் தொழிலாளியை கொன்று உடலை கடலில் வீசிய சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • காசிமேடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    ராயபுரம்:

    ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 45). இவர் சென்னை காசிமேடு பகுதியில் தங்கி மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் காசிமேடு பழைய மீன்வார்ப்பு பகுதியில் உள்ள கடலில் லோகேஸ்வரன் பிணமாக கிடந்தார். அவரது உடலில் ரத்த காயங்கள் காணப்பட்டன. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டு உடலை கடலில் வீசி இருப்பது தெரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து லோகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக காசிமேடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து காசிமேடு அண்ணாநகர் குடிசை பகுதியை சேர்ந்த சாமுவேல் (வயது 21), சஞ்சய் (21) ஆகியோர் தப்பி செல்வது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் சேர்ந்து செல்போன், பணம் பறிக்கும் முயற்சியில் லோகேஸ்வரனை அடித்து கொன்று விட்டு உடலை காசிமேடு கடலில் வீசி விட்டதாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சாமுவேல், சஞ்சய் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    காசிமேடு கடற்கரையில் மது குடித்துக் கொண்டிருந்த லோகேஸ்வரனை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றோம். ஆனால் அவர் பணம்-செல்போனை கொடுக்க மறுத்து தப்பி ஓட முயன்றார். கடற்கரையில் ஓடியபோது லோகேஸ்வரன் தவறி கீழே விழுந்தார்.

    ஆத்திரத்தில் இருந்த நாங்கள் அருகில் கிடந்த உடைந்த ஓடு மற்றும் கல்லால் லோகேஸ்வரனின் தலை, முகத்தில் தாக்கினோம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்தில் இறந்து போனார். உடனே அவரிடம் இருந்த செல்போன், பணத்தை எடுத்துக்கொண்டோம். பின்னர் லோகேஸ்வரனின் உடலை கடல் தண்ணீரில் வீசிவிட்டு தப்பி சென்றோம். உடல் வேறு இடத்தில் கரை ஓதுங்கிவிடும் என்பதால் போலீசாரிடம் இருந்து தப்பி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் அதே பகுதியில் உடல் கரை ஒதுங்கியதால் போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கைதானவர்களிடம் இருந்து லோகேஸ்வரனின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கொலையுண்ட லோகேஸ்வரன் அப்பகுதிக்கு எதற்காக வந்தார் என்று தெரியவில்லை. மேலும் அவரை பற்றிய வேறு எந்த விபரமும் இல்லை. இதைத்தொடர்ந்து ஆந்திரா போலீசாருக்கு லோகேஸ்வரன் பற்றி தகவல் தெரிவித்து உள்ளனர். அவரது செல்போனில் கடைசியாக பேசிய நபர்கள் குறித்த விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.

    செல்போன் பறிக்கும் முயற்சியில் தொழிலாளியை கொன்று உடலை கடலில் வீசிய சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலை சம்பவம் தொடர்பாக 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • தாக்குதலை தடுக்க வந்த மிஸ்ராவின் நண்பருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி ஷஹபாத் பால் பண்ணை பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற துணை ஆணையாளர் ரவி குமார் சிங் தலைமையிலான போலீசார், அந்த உடலை கைப்பற்றினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் சஞ்சய் மிஸ்ரா (வயது 35) என்பதும், பீடி தகராறில் கொலை நடந்ததும் தெரியவந்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    மகாதேவ் சௌக் அருகே உள்ள காலி பகுதி வழியாக சஞ்சய் மிஸ்ரா தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்யவான் என்பவர் மிஸ்ராவிடம் பீடி கேட்டுள்ளார். இதற்கு மிஸ்ராவும், அவரது நண்பரும் திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சத்யவான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிஸ்ராவின் உடலில் பல இடங்களில் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த மிஸ்ராவின் நண்பருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. உடலில் பல இடங்களில் காயம் அடைந்த சஞ்சய் மிஸ்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    • வேலையை முடித்து விட்டு சேகரும், புருஷோத்தமனும் மதுகுடித்தனர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய புருஷோத்தனை தேடிவருகின்றனர்.

    ஓசூர்:

    வேலூர் மாவட்டம் ஓட்டோரி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது50). அதே பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன்.

    நண்பர்களான இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டபள்ளி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான லாரிக்கு பாடிகட்டும் பட்டறையில் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வேலையை முடித்து விட்டு சேகரும், புருஷோத்தமனும் மதுகுடித்தனர். அப்போது பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த புருஷோத்தன், சேகரை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து முருகன் ஓசூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய புருஷோத்தனை தேடிவருகின்றனர்.

    • வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கிருந்த கட்டையை எடுத்து விஜயராகவனை சரமாரியாக தாக்கினர்.
    • கால்வாயை திறந்து பார்த்த போது உள்ளே வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.

    சூலூர்:

    திருவாரூரை சேர்ந்தவர் ரவி (60). இவரது மகன் விஜயராகவன் (வயது44). இவருக்கு திருமணமாகி விட்டது.

    திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் விஜயராகவனை அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக விஜயராகவன் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் விஜயராகவன் திருவாரூரில் இருந்து கோவை செங்கத்துறைக்கு வந்தார்.

    அங்கு தனது தந்தை ரவி மற்றும் நண்பர் ஸ்டாலின் (45) ஆகியோருடன் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களுடன் திருவாரூரை சேர்ந்த மேலும் சிலரும் தங்கி இருந்தனர்.

    இவர்கள் அனைவரும் ஒன்றாகவே வேலைக்கு செல்வது, குடிப்பது வழக்கம். தினமும் குடித்து விட்டு தகராறில் ஈடுபடுவதும், பின்னர் அவர்களே சமாதானம் அடைவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    நேற்று விடுமுறை என்பதால் முந்தைய நாள் இரவு விஜயராகவன், அவரது தந்தை ரவி, ஸ்டாலின் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக மதுகுடிக்க சென்றனர்.

    டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தனர். பின்னர் அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றனர்.

    அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த போது, அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கிருந்த கட்டையை எடுத்து விஜயராகவனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    அவர் இறந்து போனதால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விஜயராகவனின் உடலை அங்கிருந்து சாக்கடை கால்வாய்க்குள் தூக்கி வீசி விட்டு உடல் வெளியில் தெரியாத படி பலகையை போட்டு மூடி விட்டு தப்பியோடி விட்டனர்.

    நேற்று ஓட்டல் திறக்க வந்த ஊழியர்கள், கடையின் முன்பு ரத்தக்கறை படிந்து இருந்ததாலும், அருகே உள்ள கால்வாய் திடீரென மூடப்பட்டிருந்ததாலும் அதிர்ச்சி அடைந்தனர்.

    கால்வாயை திறந்து பார்த்த போது உள்ளே வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். உடனே இதுகுறித்து அவர்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டனர்.

    பின்னர் அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கால்வாயில் கிடந்தது விஜயராகவன் என்பதும், அவரை அவரது நண்பர்கள் அடித்து கொன்று சாக்கடையில் வீசியதும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் கொல்லப்பட்ட விஜயராகவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார் விஜயராகவனை மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் அடித்து கொன்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்டாலின் உள்பட அனைவரும் திருவாரூரை சேர்ந்தவர்கள். இதனால் இவர்கள் அங்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் அவர்களை பிடிப்பதற்காக திருவாரூக்கு விரைந்துள்ளனர். அவர்கள் பிடிபட்ட பின்னரே கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • பாலமுருகனின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வழிந்து காணப்பட்டது.
    • பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலமுருகன் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் கணேசபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி போதுமணி (40). இவர்களுக்கு சூர்யா (24), சுகன் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வீட்டில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலமுருகன் அவரது வீட்டிலேயே இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து சித்தாபட்டி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

    ஆனால் பாலமுருகனின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வழிந்து காணப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலமுருகன் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    தினமும் குடித்து விட்டு தகராறு செய்ததால் அவரது கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்ததாக அவர்கள் ஒத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் போதுமணி மற்றும் அவரது மகன்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    • ஜாமினில் வெளிவந்த முனியசாமி பின்னர் கடந்த 2 வருடமாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
    • மஞ்சம்பாக்கம் அருகே பதுங்கி இருந்த முனியசாமியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    கொளத்தூர்:

    கொளத்தூர், கண்ணகி நகரை சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா (வயது49). தொழிலாளி. இவர், கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி மாதவரம் ரவுண்டனா அருகே அவரது மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை மாதவரம் போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 4 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி அஸ்லாம் பாஷா உயிரிழந்தார்.

    இதேபோல் ஜூன் மாதம் 3-ந் தேதி நள்ளிரவு ரெட்டேரி பாலம் அருகே மூலக்கடையைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் மர்மஉறுப்பில் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து முனியசாமி (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கையின் போது அவர் சைக்கோபோல் இது போன்று தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த முனியசாமி பின்னர் கடந்த 2 வருடமாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரைப் பிடிக்க பொன்னேரி விரைவு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    இதைத் தொடர்ந்து கொளத்தூர் துணை கமிஷனர் சக்திவேல் ஆலோசனையின்படி மாதவரம் உதவி கமிஷனர் ஆதிமூலம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் முனியசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே மஞ்சம்பாக்கம் அருகே பதுங்கி இருந்த முனியசாமியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

    • உடலை கைப்பற்றி இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • கைதான இருவர் மீதும் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் வெங்கடேஸ்வரா நகர் கழுகா சலபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார்(வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் கடந்த 18-ந்தேதி இரவு புதியம்புத்தூர் தட்டப்பாறை செல்லும் சாலையில் கற்கூரணி குளத்தின் தெற்கே மேற்கு நோக்கி செல்லும் காத்தாடி மண் பாதையில் 100 மீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ரத்தக் காயங்களுடன் சாலையில் இறந்த நிலையில் கிடந்தார்.

    அவரது உடலை கைப்பற்றி இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் வரும் போது அங்கு குடிபோதையில் நின்ற மேல தட்டப்பாறையை சேர்ந்த ஹரிகரன் (23), வெங்கடேஷ்( 22) ஆகிய இருவரும் வழிமறித்து லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.

    அவர்களை இறக்கி விடும்போது சதீஷ்குமாரிடம் பணம் இருக்குமா என கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் இல்லை என்று கூறியதும் ஆத்திரத்தில் அவர்கள் இருவரும் சதீஷ்குமாரை பிடித்து கீழே தள்ளி அடித்து உதைத்து மிதித்துள்ளனர். இதனால் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டு புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் (பொறுப்பு) விசாரணை நடத்தி சதீஷ்குமாரை அடித்து கொன்ற ஹரிஹரன், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தார். கைதான இருவர் மீதும் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த கல்லை எடுத்து ரஞ்சித் குமாரின் தலையில் தாக்கினார்.
    • தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை ராஜா நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 40). கூலித்தொழிலாளி.

    இவரிடம், நவீனா கார்டன் பகுதியை சேர்ந்த கண்ணன் (45) என்பவர் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை நீண்ட நாட்கள் ஆகியும் கண்ணன் திருப்பி கொடுக்கவில்லை. இது தொடர்பாக கண்ணனிடம் அடிக்கடி சென்று ரஞ்சித்குமார், தனது பணத்தை தருமாறு கேட்டுள்ளார். நேற்று இரவும் கண்ணனின் வீட்டுக்கு சென்று ரஞ்சித்குமார் பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த கல்லை எடுத்து ரஞ்சித் குமாரின் தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    • பெரிய மாரியப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டன் காலில் வெட்டி உள்ளார்.
    • சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் பெரிய மாரியப்பன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி பெரிய மாரியப்பன் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரிய மாரியப்பன் (வயது 55). கட்டிட தொழிலாளி . அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (42). பெயிண்டர்.

    இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணி அளவில் விஜயாபுரி சமுதாயக்கூடம் அருகே மது அருந்தி உள்ளனர்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் பெரிய மாரியப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டன் காலில் வெட்டி உள்ளார்.

    சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் பெரிய மாரியப்பன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி பெரிய மாரியப்பன் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பெரிய மாரியப்பன் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரிய மாரியப்பன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காலில் வெட்டுக்காயங்களுடன் அப்பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பின்னர் மணிகண்டனை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாலாட்டின் புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக அவரது தம்பி பழனிசாமி கொளத்தூர் போலீசில் புகார் செய்தார்.
    • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது கணவரை விஷம் கொடுத்து கொன்றதாக மனைவி தெரிவித்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே உள்ள காரைக்காடு வீரகாரன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி புகழரசி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மனைவி புகழரசி, தனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் தெரிவித்தார். பின்னர் உறவினர்கள் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.

    இதனிடையே சக்திவேல் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தம்பி பழனிசாமி கொளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சக்திவேலின் மனைவி புகழரசி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது கணவரை விஷம் கொடுத்து கொன்றதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் சக்திவேல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்தார். இதனிடையே எனக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த முத்துக்குமார் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். இந்த கள்ளக்காதல் விஷயம் எனது கணவர் சக்திவேலுக்கு தெரியவந்தது. இதனால் அவர் என்னை கண்டித்தார்.

    மேலும் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி என்னிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இது பற்றி கள்ளக்காதலன் முத்துகுமாரிடம் தெரிவித்தேன். அப்போது, அவர் உனது கணவரை கொன்று விடு, அதன் பிறகு நாம் இருவரும் எந்த இடையூறும் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம், உனக்கும், உனது குழந்தைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து தருவதாக கூறினார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி இந்த கொலையை எப்படி செய்வது மற்றும் மறைப்பது குறித்தும் திட்டம் தீட்டினோம்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடிபோதையில் எனது கணவர் சக்திவேல் வீட்டுக்கு வந்தார். அவருக்கு முதலில் 10 தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தேன். ஆனால் அவர் அதில் உயிர் பிழைத்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் மீண்டும் தேனீர் போட்டு, அதில் தோட்டத்திற்கு வைத்திருந்த விஷத்தை கலந்து கொடுத்தேன். எனினும் அவர் பிழைத்துக்கொண்டால் என்ன செய்வது என்று எண்ணிய நான், மீண்டும் சாப்பாட்டில் விஷத்தை கலந்து அவருக்கு ஊட்டி விட்டேன். தொடர்ந்து விஷம் ஏறியதால், அவர் துடிதுடித்து இறந்து விட்டார்.

    தொடர்ந்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்ய, முத்துக்குமாரை போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரும்படி கூறினேன். நள்ளிரவில் வீட்டுக்கு வந்த முத்துக்குமார், சக்திவேல் இறந்ததை உறுதி செய்த பின்பு, அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதைத்தொடர்ந்து எனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினேன். எனினும் போலீஸ் விசாரணையில் உண்மையை ஒத்துக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, புகழரசியையும், அவரது கள்ளக்காதலன் முத்துக்குமாரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட், அவர்கள் இருவரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி போலீசார் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலில் புகழரசியையும், சேலம் மத்திய ஜெயிலில் முத்துக்குமாரையும் அடைத்தனர்.

    குடும்ப தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
    வேளச்சேரி:

    சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் வசித்து வந்தவர். சுந்திரமூர்த்தி (வயது 37), மனைவி சுகந்தி(32). டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    நேற்று இரவு அவர், பெரும்பாக்கம் நேதாஜி நகர் மெயின் ரோடு அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சுந்தர மூர்த்தியை அரிவால், கத்தியுடன் வழிமறித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் விரட்டிச்சென்ற மர்மநபர்கள் சுந்தரமூர்த்தியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பெரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தரமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. குடும்ப தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
    களக்காடு சமையல் தொழிலாளி கொலையில் தலைமறைவான அ.தி.மு.க. நிர்வாகியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 43). சமையல் தொழிலாளி. கடந்த 22-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வயலுக்குச் சென்ற போது அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

     இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிங்கி குளத்தை சேர்ந்த ஐகோர்ட் ராஜா(34), ராமச்சந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கோதைசேரியை சேர்ந்த சுரேஷ் என்ற சொக்கலிங்கம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான அ.தி.மு.க. பிரமுகர் வானமாமலை என்ற சுரேஷ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

    அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ×