என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி அருகே தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை- பெயிண்டர் வெறிச்செயல்
    X

    பெரிய மாரியப்பன்

    கோவில்பட்டி அருகே தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை- பெயிண்டர் வெறிச்செயல்

    • பெரிய மாரியப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டன் காலில் வெட்டி உள்ளார்.
    • சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் பெரிய மாரியப்பன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி பெரிய மாரியப்பன் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரிய மாரியப்பன் (வயது 55). கட்டிட தொழிலாளி . அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (42). பெயிண்டர்.

    இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணி அளவில் விஜயாபுரி சமுதாயக்கூடம் அருகே மது அருந்தி உள்ளனர்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் பெரிய மாரியப்பன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டன் காலில் வெட்டி உள்ளார்.

    சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் பெரிய மாரியப்பன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி பெரிய மாரியப்பன் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பெரிய மாரியப்பன் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரிய மாரியப்பன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காலில் வெட்டுக்காயங்களுடன் அப்பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பின்னர் மணிகண்டனை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாலாட்டின் புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×