என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் இரும்பு கம்பியால் தொழிலாளி அடித்துக்கொலை
- வேலையை முடித்து விட்டு சேகரும், புருஷோத்தமனும் மதுகுடித்தனர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய புருஷோத்தனை தேடிவருகின்றனர்.
ஓசூர்:
வேலூர் மாவட்டம் ஓட்டோரி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது50). அதே பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன்.
நண்பர்களான இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டபள்ளி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான லாரிக்கு பாடிகட்டும் பட்டறையில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வேலையை முடித்து விட்டு சேகரும், புருஷோத்தமனும் மதுகுடித்தனர். அப்போது பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த புருஷோத்தன், சேகரை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து முருகன் ஓசூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய புருஷோத்தனை தேடிவருகின்றனர்.






