search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Winter Session"

    • குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது.
    • மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

    இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. டிசம்பர் 29-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும்.

    இந்தத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

    இதற்கிடையே, கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இரு அவைகளின் அரசியல் கட்சி குழு தலைவர்களுக்கு பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    இதில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
    • இதில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    இந்தக் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    • ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
    • இதனால் அவர் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டுள்ளதால் ராகுல் காந்தி பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலால் டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

    பாராளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகின.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என கூறப்படுகிறது.

    அதன்படி நடப்பு ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 7-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய பாராளுமன்றத்திற்கான கட்டட பணிகள் இன்னும் நிறைவடையாததால், இந்த ஆண்டும் வழக்கம் போல் பாரம்பரிய பாராளுமன்ற கட்டிடத்திலேயே குளிர்கால கூட்டத்  தொடர் நடைபெறும் என தெரிகிறது.

    • புதிய பாராளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடியின் லட்சிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
    • நவம்பர் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம்.

    டெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப் பட்டதாகும். 1927-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து வருகிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    தற்போதைய பாராளுமன்றம் அருகிலேயே ரூ.977 கோடி செலவில் புதிய பாராளுமன்றம் கட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ந் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். டாடா நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டும் பொறுப்பை ஏற்றுள்ளது.

    13 ஏக்கர் பரப்பளவில் 4 மாடிகளுடன் உருவாகி வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் சமயத்தில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற கட்டுமான பணிகளில் தாமதமும், கூடுதல் செலவீனமும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நவம்பர் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. எஞ்சியுள்ள பணிகளுக்காக மிர்சாபூரில் இருந்து கையால் நெய்யப்பட்ட குஷன் கம்பளங்களும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களும் பயன்படுத்தப் படுகின்றன.மகாராஷ்டிராவில் இருந்து தேக்கு மர சாமான்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுவதை உறுதி செய்ய முழு முயற்சி எடுத்து வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய பாராளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடியின் லட்சிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த மாதம், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. 

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
    • ஜனாதிபதி தேர்தல் முடிவு 21-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    மேலும், 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என தெரிகிறது.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
    • இத்தொடரில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலும் நடைபெறுகிறது.

    புதுடெல்ல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடக்க உள்ளது.

    ஜனாதிபதி தேர்தலுடன் இந்தக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற வளாகத்தில் நடந்த இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற குழு தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்கு ஒத்துழைக்கும்படியும், பிரச்சினைகளை விவாதித்து முடிவு செய்யலாம் என வலியுறுத்தப்பட்டது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், அக்னிபத், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம் என தெரிவித்தார்.

    பாஜக எம்.பி.க்கள் தவறாமல் கூட்டத்தொடரில் பங்கேற்கவேண்டும், எதிர்க்கட்சிகளின் விவாதங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இக்கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை  ரத்து செய்யும் மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. 

    குறிப்பாக வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சி தலைவர்கள் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும்படி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம் என தெரிகிறது. எதிர்க்கட்சிகளின் விவாதத்தை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான பாஜக தயாராகி வருகிறது. 

    இந்நிலையில், பாஜக எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பது வழக்கம். ஆனால் இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய மந்திரியும், பாஜக மக்களவை குழு துணை தலைவருமான ராஜ்நாத் சிங், மாநிலங்களவை குழு தலைவர் பியூஷ் கோயல், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ், முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பாராளுமன்றம்

    இக்கூட்டத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாஜக எம்.பி.க்கள் தவறாமல் கூட்டத்தொடரில் பங்கேற்கவேண்டும், எதிர்க்கட்சிகளின் விவாதங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    முக்கியமான பிரச்சினைகளில் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்காமல் இருப்பதற்கு, பாஜக எம்பிக்கள் அனைவரும் வருகை தருவது முக்கியம் என்று ஜே.பி.நட்டா கூறினார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து முக்கியப் பிரச்சினைகளுக்கும் பதிலளிக்க கட்சி எம்.பி.க்கள் நன்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் நட்டா வலியுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்,  மத்திய அரசு செய்த நல்ல பணிகளை, குறிப்பாக கடினமான கொரோனா காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை முன்னிலைப்படுத்துமாறு எம்.பி.க்களிடம் நட்டா கூறியிருக்கிறார்.

    இதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டமும் நடைபெற்றது. இதில், கூட்டணி கட்சிகளின் பாராளுமன்ற குழு தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியது அவசியம் என அனைவரும் வலியுறுத்தினர். பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படும் பிரச்சினைகள் குறித்த விவாதத்திற்கு முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும்  என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறி உள்ளார்.
    பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என பட்ஜெட் உரையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான புதிய சட்ட மசோதா உள்பட 26 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    குறிப்பாக 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்காக, வங்கி சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.  இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு, வங்கி நிறுவனங்களின் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டங்கள் 1970 மற்றும் 1980ல் திருத்தம் செய்வதுடன், வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949ல் தற்செயலான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம். குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அறிமுகம் செய்வதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 

    பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என பட்ஜெட் உரையில் நிதி மந்திரி நிர்மலா  சீதாராமன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இது தவிர, குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான மசோதா, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (திருத்தம்) மசோதா-2021 ஆகும்.
    மழைக்கால கூட்டத்தொடரைப் போன்று குளிர்கால கூட்டத்தொடரிலும் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதிவரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் விதமாக, 28ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின. அதேபோல் குளிர்கால கூட்டத்தொடரிலும் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

    குறிப்பாக, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மீதே அனைவரின் பார்வையும் இருக்கும். இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்தார். இந்த வார இறுதியில், மூன்று சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து எம்பிக்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். #TripleTalaqBill #BJP #Congress #RajyaSabha
    புதுடெல்லி:

    கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 27-ம் தேதி கூடியபோது, மக்களவையில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
     
    மாநிலங்களவையில் நேற்று முன்தினம் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.



    இதற்கிடையே, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா வரும் 31-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் அனைத்து எம்.பிக்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். #TripleTalaqBill #BJP #Congress #RajyaSabha
    எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இனி கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து 27ம் தேதி மாநிலங்களவை கூடும். #RajyaSabhaAdjourned #ChristmasHolidays
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    எம்.பி.க்கள் பலர் பாராளுமன்ற வளாகத்திலும் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    மாநிலங்களவை இன்று காலை கூடியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து நின்று காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடப்பதை கண்டித்துக் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையே, நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணித்து தகவல்களை ஆய்வு செய்ய 10 அமைப்புகளுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.


     
    இந்நிலையில், மாநிலங்களவை இன்று மதியம் மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஐ டி தொடர்பான அறிவிக்கையை கண்டித்து கோஷங்க்ள் எழுப்பினர். தொடர்ந்து அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

    இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையை சபாநாயகர் நாள் முழுவதும் அவையை ஒத்திவைத்தார்.

    வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் என தொடர்ந்து 5 நாட்கள் மாநிலங்களவை செயல்படாது. இனி டிசம்பர் 27-ம் தேதி மக்களவை கூடும். #RajyaSabhaAdjourned #ChristmasHoliday
    ×