search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்- நவம்பர் 28ல் அனைத்துக் கட்சி கூட்டம்

    மழைக்கால கூட்டத்தொடரைப் போன்று குளிர்கால கூட்டத்தொடரிலும் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதிவரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் விதமாக, 28ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின. அதேபோல் குளிர்கால கூட்டத்தொடரிலும் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

    குறிப்பாக, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மீதே அனைவரின் பார்வையும் இருக்கும். இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்தார். இந்த வார இறுதியில், மூன்று சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×