search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய பாராளுமன்ற கட்டிடம்"

    • கலவரத்தை ஏற்படுத்துதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • 109 போராட்டக்காரர்கள் உள்பட 700 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ் பூசன் சரண்சிங் உள்ளார்.

    இவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி இருந்தனர். பிரிஜ் பூசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மாதம் 23-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அவர் மீது போக்சோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்த போதிலும் அவரை கைது செய்யக் கோரி போராட்டம் தொடர்கிறது.

    இந்த நிலையில் மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நேற்று பாராளுமன்ற கட்டிடம் முன்பு போராட்டம் நடத்த ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர்.

    தடுப்புகளை அகற்றி விட்டு வீரர், வீராங்கனைகள் செல்ல முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில வீராங்கனைகள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பஜ்ரங்புனியா, வினேஷ் போகட், அவரது சகோதரி சங்கீதா போகட், சாக்ஷி மாலிக் ஆகிய பிரபல மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதில் வினேஷ் போகட்டை மற்றும் விடுவித்தனர்.

    மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகளும் போராட்டத்தில் குதித்தனர். புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு எதிரே போராட்டத்துக்காக புறப்பட்ட அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 109 போராட்டக்காரர்கள் உள்பட 700 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.


    இந்த நிலையில் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், சங்கீதா போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கலவரத்தை ஏற்படுத்துதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் ஆவார்கள்.

    பஜ்ரங் புனியா 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளியும், ஒரு வெண்கல பதக்கங்களும் பெற்றுள்ளார். மேலும் ஆசி விளையாட்டு, காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று முத்திரை பதித்துள்ளார்.

    30 வயதான சாக்ஷி மாலிக் 2016 பிரேசில் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்றார். காமன் வெல்த் விளையாட்டிலும் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வென்று இருந்தார். 28 வயதான வினேஷ் போகத் ஆசிய விளையாட்டு மற்றும் காமன் வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற முத்திரை பதித்துள்ளார். சங்கீதா போகத் தேசிய போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.

    இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு பிறகு ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கி இருந்த கூடாரத்தை டெல்லி போலீசார் முற்றிலும் அகற்றினர். கட்டில், மெத்தை, மின் விசிறி, ஏர்கூலர், தார்பாய்களை ஆகியவற்றை அங்கிருந்து அகற்றினர்.

    சில மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தருக்கு திரும்பினார்கள். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். மல்யுத்த வீரர், வீராங்களைகள் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினரும், விளை யாட்டு பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    • மல்யுத்த வீரர்களின் 'போராட்ட அமைப்பாளர்கள்' மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • ஒரு சில மல்யுத்த வீரர்கள் இரவில் ஜந்தர் மந்தருக்கு போராட்டம் கைது தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க சென்றனர்.

    பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தடையை மீறி பாராளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேலும், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் போராட்ட அமைப்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதைதொடர்ந்து, ஒரு சில மல்யுத்த வீரர்கள் நேற்று இரவில் வீரர்கள் கைது தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க சென்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    அப்போது செய்தியாளர்களிடம் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறியதாவது:-

    பாராளுமன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவர் கலந்து கொண்டது துரதிர்ஷ்டவசமானது.

    எங்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு சில மணிநேரமே ஆனது. ஆனால் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய 7 நாட்கள் ஆனது.

    வீடு திரும்ப விருப்பமில்லை. மற்ற மல்யுத்த வீரர்களை நான் சந்திப்பேன். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
    • பிரதமர் மோடி திறந்துவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்தன.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என்றும், பிரதமர் மோடி திறந்துவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்தன.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற திறப்புவிழா குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்றம் என்பது மக்களின் குரல். புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்துள்ள பிரதமர் மோடி, இது தனக்கான முடிசூட்டும் நிகழ்ச்சியாக நினைத்துக் கொள்கிறார் என பதிவிட்டுள்ளார்.

    • 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.970 கோடி செலவில் புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
    • 4 தளங்களுடன், 1,224 பேர் அமரும் வகையில் புதிய பாராளுமன்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிட வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இன்று பகிர்ந்துள்ளார். அதில்

    பாராளுமன்றத்தின் உட்புறக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, புதிய பாராளுமன்ற கட்டிடத்தால் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் தொடர்பான எண்ணங்களை, உங்கள் பின்னணி குரலுடன் இந்த வீடியோவை அதிகம் பகிரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும், சுமார் 4 தளங்களுடன், 1,224 பேர் அமரும் வகையில் புதிய பாராளுமன்றம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    64,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.970 கோடி செலவில் புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.

    தகவல் மையம், பொதுமக்கள் காத்திருக்கும் பகுதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 




    • புதிய பாராளுமன்ற கட்டிட பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
    • மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்.

    ஐதராபாத்:

    தலைநகர் டெல்லியில் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் புதிய பாராளுமன்றத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். கடந்த மாதம், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை அவர் திறந்து வைத்தார். தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் தெலுங்கானா மாநில சட்டசபையில் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பி.ஆர்.அம்பேத்கர் பெயரை வைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அந்த தீர்மானத்தை முன் மொழிந்த மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரை புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்றார்.

    இதேபோல் மத்திய அரசு முன்மொழிந்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநில எரிசக்தி துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி, இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த மசோதா விவசாயிகள், ஏழைப் பிரிவினர் மற்றும் மின்துறை ஊழியர்களின் நலன்களுக்கு எதிரானது என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

    • புதிய பாராளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடியின் லட்சிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
    • நவம்பர் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம்.

    டெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப் பட்டதாகும். 1927-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து வருகிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    தற்போதைய பாராளுமன்றம் அருகிலேயே ரூ.977 கோடி செலவில் புதிய பாராளுமன்றம் கட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ந் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். டாடா நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டும் பொறுப்பை ஏற்றுள்ளது.

    13 ஏக்கர் பரப்பளவில் 4 மாடிகளுடன் உருவாகி வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் சமயத்தில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற கட்டுமான பணிகளில் தாமதமும், கூடுதல் செலவீனமும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நவம்பர் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. எஞ்சியுள்ள பணிகளுக்காக மிர்சாபூரில் இருந்து கையால் நெய்யப்பட்ட குஷன் கம்பளங்களும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களும் பயன்படுத்தப் படுகின்றன.மகாராஷ்டிராவில் இருந்து தேக்கு மர சாமான்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுவதை உறுதி செய்ய முழு முயற்சி எடுத்து வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய பாராளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடியின் லட்சிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த மாதம், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. 

    • தேசிய சின்னத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது.
    • கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பங்கு நம் நினைவில் இருக்கும்.

    தலைநகர் டெல்லியில் ரூ.971 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தால் ஆன 6.5 மீ உயரம் உள்ள தேசிய சின்னத்தின் எடை சுமார் 9500 கிலோ ஆகும். இதை தாங்கும் வகையில் சுமார் 6500 கிலோ எடையுள்ள எஃகு தூண்கள் நான்கு புறங்களிலும் கட்டப்பட்டுள்ளன.

    இந்த தேசிய சின்னத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். முன்னதாக அங்கு நடைபெற்ற பூஜையிலும் அவர் கலந்து கொண்டார். 

    பாராளுமன்ற கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பிரதமர் உரையாடினார்.இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் பதிவில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் உரையாடினேன். அவர்களுடைய முயற்சிகள் கண்டு நாம் பெருமை அடைகிறோம். நமது நாட்டிற்கான அவர்களின் பங்கு என்றும் நம் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில், தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தது தொடர்பாக, காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் மற்றும் ஏஐஎம்ஐஎம் போன்ற எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இது அரசியலமைப்பு மீறல் என்று அந்த கட்சிகள் கூறியுள்ளன. இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைமை செய்தித் தொடர்பாளரும் தேசிய ஊடகப் பொறுப்பாளருமான அனில் பலுனி தெரிவித்தார்.

    புதிய பாராளுமன்றத்திற்கு அடித்தளம் அமைத்தது மோடி என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் வெளியிட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும், அவர் குறிப்பட்டார். கட்டுமான பணிகள் முடிந்ததும், கடடிடம், பாராளுமன்ற நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    திறப்பு விழாவை கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள், நிர்வாக செயல்முறையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பாராளுமன்றத்தின் வடிவமைப்பு முதல் நிதி மற்றும் கட்டுமான மேற்பார்வை வரை, முழு வேலைகளும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் வரம்பிற்கு உட்பட்டது என்றும் பலூனி குறிப்பிட்டார்.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்தில் தேசிய சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    • அந்த தேசிய சின்னத்தை இன்று காலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடம் மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிடம் ரூ.971 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் அமைகிறது.

    எதிர்காலத்தில் இரு அவைகளையும் விரிவாக்கம் செய்ய வசதியாக மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரத்தக்க வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது. இந்தக் கட்டிடத்தின் பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும்.

    பாராளுமன்ற கட்டிடத்தில் இந்திய ஜனநாயகத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகிற வகையில் பெரிய அரங்கம் ஒன்று அரசியல் சாசன அரங்கம் என்ற பெயரில் அமையும். நூலகம், கட்சி அலுவலகங்கள், பல்வேறு நிலைக்குழு அலுவலகங்கள், உணவு உண்ணும் அரங்குகள், வாகன நிறுத்துமிடங்கள் என அளவில்லா வசதிகளைக் கொண்டிருக்கும்.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று காலை 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்தில் உருவான தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×