search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wrestler Bajrang Punia"

    • மல்யுத்த வீரர்களின் 'போராட்ட அமைப்பாளர்கள்' மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • ஒரு சில மல்யுத்த வீரர்கள் இரவில் ஜந்தர் மந்தருக்கு போராட்டம் கைது தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க சென்றனர்.

    பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தடையை மீறி பாராளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேலும், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் போராட்ட அமைப்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதைதொடர்ந்து, ஒரு சில மல்யுத்த வீரர்கள் நேற்று இரவில் வீரர்கள் கைது தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க சென்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    அப்போது செய்தியாளர்களிடம் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறியதாவது:-

    பாராளுமன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவர் கலந்து கொண்டது துரதிர்ஷ்டவசமானது.

    எங்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு சில மணிநேரமே ஆனது. ஆனால் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய 7 நாட்கள் ஆனது.

    வீடு திரும்ப விருப்பமில்லை. மற்ற மல்யுத்த வீரர்களை நான் சந்திப்பேன். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×