என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிர்கால கூட்டத் தொடர்"

    • மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
    • பொதுப் பிரச்சினைகள் குறித்த ஜனநாயக விவாதங்களை அனுமதிக்காதது தான் நாடகம்

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்திற்கு முன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி கூட்டத்தொடரை நாடகத்திற்கான மேடையாக மாற்றாதீர்கள் என்று எதிர்கட்சிகளை விமர்சித்தார்.

    இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

    இந்நிலையில் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி, கூட்டத்தொடரின் போது SIR மற்றும் டெல்லி மாசுபாடு போன்ற முக்கியமான பிரச்சினைகளை எழுப்புவது எப்படி நாடகமாகும்.

    பொது நலன் சார்ந்த விஷயங்கள். இந்தப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைகள் குறித்து எந்த விவாதமும் இல்லாதபோது பாராளுமன்றத்தின் பயன் என்ன?

    கடந்த 11 ஆண்டுகளாக பாராளுமன்ற அமைப்பையே மத்திய அரசு சீர்குலைத்துள்ளது.

    கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் மட்டுமே குறைந்தது 12 மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன.

    சில மசோதாக்கள் வெறும் 15 நிமிடங்களிலும், சில மசோதாக்கள் எந்த விவாதமும் இல்லாமலும் நிறைவேற்றப்பட்டன.

    விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், ஜிஎஸ்டி போன்ற மசோதாக்களை பாராளுமன்றத்தில் புல்டோசர் மூலம் நீங்கள் எப்படி கொண்டு வந்தீர்கள் என்பதை முழு நாடும் பார்த்தது.

    பணிச்சுமையால் SIR பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.

    அவையில் இவற்றை பற்றி பேசுவதையோ அல்லது பொதுப் பிரச்சினைகளை எழுப்புவதையோ நாடகம் என்று அழைப்பது சரியல்ல. பொதுப் பிரச்சினைகள் குறித்த ஜனநாயக விவாதங்களை அனுமதிக்காதது தான் நாடகம்" என்று தெரிவித்தார். இதற்கிடையே எதிர்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் இன்று 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. 

    • பாராளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலால் டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

    பாராளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகின.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என கூறப்படுகிறது.

    அதன்படி நடப்பு ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 7-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய பாராளுமன்றத்திற்கான கட்டட பணிகள் இன்னும் நிறைவடையாததால், இந்த ஆண்டும் வழக்கம் போல் பாரம்பரிய பாராளுமன்ற கட்டிடத்திலேயே குளிர்கால கூட்டத்  தொடர் நடைபெறும் என தெரிகிறது.

    • விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இடம்பெறவில்லை.

    பாாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி இம்மாதம் 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் வன்முறை குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

    இந்த வரிசையில், கடந்த 12-ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி இந்த மசோதா இன்று (டிசம்பர் 16) தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படாது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த வார இறுதியில் மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மக்களவையின் இன்றைய அலுவல் அட்டவணையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இடம்பெறவில்லை. எனினும், மக்களவை சபாநாயகர் அனுமதியுடன் கடைசி நேரத்தில் துணை பட்டியல் மூலம் இந்த மசோதாவை கொண்டுவரவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

    • ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வந்தது.
    • நேற்று இந்த மசோதா தாக்கல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.

    மக்களவையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சி என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், சமீபத்தில் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது. அதன்படி நேற்று இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக இந்த வார இறுதி நாட்களில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று இந்த மசோதா தாக்கல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மக்களவையில் பகல் 12 மணிக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்து உரையாற்ற இருக்கிறார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில் அதனை கூட்டுக்குழு விசாரணைக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்றைய பாராளுமன்ற நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு கொறாடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய பாராளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடியின் லட்சிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
    • நவம்பர் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம்.

    டெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப் பட்டதாகும். 1927-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து வருகிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    தற்போதைய பாராளுமன்றம் அருகிலேயே ரூ.977 கோடி செலவில் புதிய பாராளுமன்றம் கட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ந் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். டாடா நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டும் பொறுப்பை ஏற்றுள்ளது.

    13 ஏக்கர் பரப்பளவில் 4 மாடிகளுடன் உருவாகி வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் சமயத்தில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற கட்டுமான பணிகளில் தாமதமும், கூடுதல் செலவீனமும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நவம்பர் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. எஞ்சியுள்ள பணிகளுக்காக மிர்சாபூரில் இருந்து கையால் நெய்யப்பட்ட குஷன் கம்பளங்களும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களும் பயன்படுத்தப் படுகின்றன.மகாராஷ்டிராவில் இருந்து தேக்கு மர சாமான்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுவதை உறுதி செய்ய முழு முயற்சி எடுத்து வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய பாராளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடியின் லட்சிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த மாதம், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. 

    ×