என் மலர்
நீங்கள் தேடியது "Winter Session Of Parliament"
- மாநிலங்களவைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றார்
- ஜெகதீப் தன்கருக்கு, பிரதமர் மோடி பாராட்டு
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், மக்களவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவை இன்று தொடங்கியதும் அதன் தலைவராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். இதையடுத்து அவருக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

இந்த அவையின் சார்பாகவும், தேசத்தின் சார்பாகவும் மாநிலங்களவைத் தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கையில் முன்னேறி இந்த நிலையை அடைந்துள்ளீர்கள்.இது நாட்டில் உள்ள பலருக்கு உத்வேகம் அளிக்கும்.
நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன், நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமூகத்தின் விளிம்பு நிலைப் பிரிவைச் சேர்ந்தவர், தற்போது நமது துணைக் குடியரசுத் தலைவர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருக்கு சட்ட விஷயங்களில் அறிவு அதிகம்.
நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தருணத்தில் இந்தியா ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த தருணத்திலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் தொடங்கும்.

தேர்தல் பிரசாரத்துக்கு வசதியாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை தள்ளிப் போடுவது பற்றி டெல்லியில் இன்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தில் ஆலோசனை நடந்தது.
இதில் நவம்பர் மாத இறுதிக்குப் பதிலாக டிசம்பர் மாதம் 3-வது வாரத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதுபற்றி மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன் பிறகு குளிர்கால கூட்டம் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும். #Parliament