என் மலர்
இந்தியா

டிசம்பர் 1-ம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
- டிசம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பப் பணிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் இந்த குளிர்கால கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத் தொடரின்போது, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் தேவை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பப் பணிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






