என் மலர்

  நீங்கள் தேடியது "issues whip"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து எம்பிக்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். #TripleTalaqBill #BJP #Congress #RajyaSabha
  புதுடெல்லி:

  கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 27-ம் தேதி கூடியபோது, மக்களவையில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
   
  மாநிலங்களவையில் நேற்று முன்தினம் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.  இதற்கிடையே, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா வரும் 31-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

  இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் அனைத்து எம்.பிக்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். #TripleTalaqBill #BJP #Congress #RajyaSabha
  ×