search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voter list"

    • வருகிற 18-ந் தேதி, 19-ந் தேதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.வும் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 18-ந் தேதி, 19-ந் தேதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி ஜூலை மாதம் 1-ந் தேதி, அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம். மேற்படி முன்னதாக வரப்பெற்ற படிவங்கள் சேர்க்கப்பட்டு அவை அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாத வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

    சிறப்பு முகாம் நடக்கும் நாளன்று வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக படிவம் 8-ஐ விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் படிவம் 7-ஐ விண்ணப்பிக்க வேண்டும்.

    இதுதவிர https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற செயல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2971110, கட்டணமில்லா தொலைபேசி 1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

    தாராபுரம், காங்கயம், அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அந்தந்த தாசில்தார்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாகவும், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி உதவி ஆணையாளர், உதவி வாக்காளர் பதிவு அலுவலராகவும் உள்ளனர். இதுதவிர தாராபுரம், காங்கயம் தொகுதிக்கு தாராபுரம் ஆர்.டி.ஓ., அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம் தொகுதிக்கு திருப்பூர் சப்-கலெக்டர், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.வும் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்து கொள்ளலாம்.
    • முகாம் நாளை நடைபெறுவது போல் 5, 18, 19 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    சென்னை:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

    இதற்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த அக்டோபர் 27-ந் தேதி துவங்கப்பட்டது. இந்த பணி டிசம்பர் 9-ந் தேதி வரை நடக்க உள்ளது.

    வரும் 2024-ம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் முதல் தேதியில் 18 வயது பூர்த்தியாக உள்ளவர்களும், இதற்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் பெயர் நீக்கமும் செய்து கொள்ளலாம்.

    இதற்கான சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் நாளை (4-ந் தேதி) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

    வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, திருத்தங்களை மேற்கொள்ள voter helpline app nvsp.in மற்றும் voters.eci.gov.in ஆகிய இணைய சேவைகளின் மூலம் தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இந்த முகாம் நாளை நடைபெறுவது போல் 5, 18, 19 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்கும் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் பணிகள் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் டிச.9 வரை நடைபெறும். இதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும்.

    • திருப்பூா் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், மாநகா் மாவட்ட அவைத்தலைவா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
    • திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை தொகுதி பூத் முகவா்கள் மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குமாா் நகரில் நடைபெற்றது.

     திருப்பூா்:

    திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை தொகுதி பூத் முகவா்கள் மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குமாா் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். திருப்பூா் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், மாநகா் மாவட்ட அவைத்தலைவா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினரும், திருப்பூா் மாநகா் மாவட்ட பூத் கமிட்டிபொறுப்பாளருமான செ.தாமோதரன் பேசியதாவது:-

    பாஜக., கூட்டணியில் இருந்து விலகியுள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் திமுக., வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறது. தோ்தலில் நாம் சரியான முடிவைத்தான் எடுத்துள்ளோம்.

    தற்போது வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால், கட்சி நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று வாக்காளா் பட்டியலை சரிபாா்க்க வேண்டும். மேலும், புதிய வாக்காளா்களை சோ்க்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.

    இதைத் தொடா்ந்து, சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவரும், மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில், வாக்காளா் சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக., நிா்வாகிகள் இந்த முகாமில் பங்கேற்க வேண்டும். லஞ்சம், ஊழலில் தலைசிறந்த மாநகராட்சியாக திருப்பூா் உள்ளது என்றாா்.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்யும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வாக்காளர் பட்டியலில் துல்லியத்தன்மை கொண்டு வரும் முயற்சியாக புதிய வாக்காளர்களுக்கு, ஓட்டளிக்கும் உரிமையை வழங்க தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. அதற்கேற்ப வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்யும் வகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    பூத் ஏஜென்ட்கள் வாயிலாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மேற்கொள்ள கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது. வார்டு வாரியாக கட்சியை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள் பெயர், இரட்டைப்பதிவு அதிக அளவில் உள்ளது. வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முந்தைய காலங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவர். தற்போது அத்தகைய பணிகள் நடப்பதில்லை என்றனர்.

    தி.மு.க.வினர் கூறுகையில், பூத் ஏஜென்டுகள் வாயிலாக, புதிய வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது. இறந்தவர், இரட்டை பதிவு உள்ளோர் விவரங்களை சேகரித்து அவற்றை நீக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினாலும், அவர்கள் அந்த பணியை செய்வதில்லை. இறந்தவர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களது குடும்பத்தினரிடமும் இல்லை என்றனர்.

    அ.தி.மு.க.வினர் கூறுகையில், வார்டு வாரியாக உள்ள பூத் ஏஜென்ட்களிடம் வரைவு வாக்காளர் பட்டியல் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அவற்றை சரிபார்க்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இறப்பு மற்றும் இரட்டை பதிவுகள் அதிகம் உள்ளன. அவை சரிசெய்யப்பட வேண்டும் என்றனர்.

    • சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் -2024யை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி இன்று காலை வெளியிட்டார்.
    • வரைவு வாக்காளர் பட்டியலின் விவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 24 ஆயிரத்து 748 வாக்காளர்கள் உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சிப்பிக் கூடத்தில் அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் -2024யை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி இன்று காலை வெளியிட்டார்.

    தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    வரைவு வாக்காளர் பட்டியலின் விவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 24 ஆயிரத்து 748 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 97 ஆயிரத்து 945 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 26 ஆயிரத்து 593 பேரும் உள்ளனர், இதர வாக்காளர்கள் 210 பேர் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்ட்ராங் ரூமில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
    • சுருக்கமுறை திருத்தத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தங்கள் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், 23.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் 27 -ந் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படுகிறது.

    முன்னதாக, கடந்த ஜூன் மாதம் முதல் திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக 7 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு மாவட்ட மொத்த ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 2,520 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்ட்ராங் ரூமில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, வரும் 27-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெறுகின்றன.

    அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், நவம்பர் மாதம் 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் சுருக்கமுறை திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    சுருக்கமுறை திருத்தத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தங்கள் நடைபெறுகிறது. இதற்காக, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர், தாசில்தார்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில், சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும்.

    Voters.eci.gov.in என்கிற இணையதளம், VSP மொபைல் செயலி வாயிலாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்து வரும் 2024 ஜனவரி 5ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான பட்டியல் என்பதால், இந்தாண்டுக்கான வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி முக்கியத்துவம் பெறுகிறது.

    வீடுவீடாக செல்லும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்காக, இறந்தோர் விவரங்கள், பெயர் சேர்ப்பதற்காக புதியவர் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    வருகிற 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் ஒட்டப்படும். வாக்காளர்கள் தவறாமல் வரைவு பட்டியலை பார்வையிடவேண்டும். குடும்ப உறுப்பினர்களின் பெயர், புகைப்பட விவரங்கள், முகவரி, தொகுதி சரியாக உள்ளனவா என சரிபார்க்க வேண்டும். மாறுதல்கள் இருப்பின் சுருக்கமுறை திருத்த காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை சேர்ப்பதில், தேர்தல் கமிஷன் அதிக கவனம் செலுத்திவருகிறது. இதற்காக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 1-ந் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளைஞர்கள், தவறாமல், தங்களை வாக்காளராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்கவேண்டும்.
    • வாக்காளர் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6 பி-யில் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    இந்திய தேர்தல் ஆணையம் 29.5.2023 அன்று, 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தங்களை மேற்கொள்வதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி வெளியிடப்படுகிறது. ஏற்கனவே 17-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்க அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு முகாம்கள் வருகிற நவம்பர் மாதம் 4, 5, 18, 19-ந்தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

    திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கான தீர்வு வருகிற டிசம்பர் மாதம் 26-ந்தேதி வெளியிடப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 5-ந்தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது.

    மேற்சொன்ன நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலங்களிலும், சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும், அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடமும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்கவேண்டும். 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைப்பேசி செயலி மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    1.1.2024, 1.4.2024, 1.7.2024, 1.10.2024 ஆகிய தேதிகளில் 18 வயதை பூர்த்தி அடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

    வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ-வை நேரில் அளிக்க வேண்டும் அல்லது அதிகாரிக்கு தபாலில் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6 பி-யில் விண்ணப்பிக்கலாம்.

    அதேபோல், நபரின் பெயரை சேர்க்க ஆட்சேபனைக்கான வாக்காளர் விண்ணப்பப் படிவம், வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்குதல் ஆகியவற்றுக்கு படிவம் 7-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

    வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால், குடியிருப்பை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றுதல், நடப்பு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்தல், மாற்றுத்திறனாளிகளை குறிப்பது, மாற்று புகைப்பட அடையாள அட்டை பெறுவது ஆகியவற்று படிவம் 8-ல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    • குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
    • விவரங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த 21-7-2023 முதல் தொடங்கப்பட்டு 21-8-2023 முடிய நடைபெறவுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க, 1-1-2024 -ஐ தகுதி நாளாகக் கொண்டு தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2024-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக முன் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்காக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பது, பெயர் நீக்கம் செய்வது, அனைத்து திருத்தங்கள் மேற்கொள்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அத்துடன் வாக்குச்சாவடிகளை பிரிப்பது, இடமாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் போன்ற பணிகள் நடைபெறவுள்ளது.

    முதற்கட்ட பணியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் பணிகள் கடந்த 21-7-2023 முதல் தொடங்கப்பட்டு 21-8-2023 முடிய நடைபெறவுள்ளது.

    இப்பணியினை சிறப்பாகவும் விரைவாகவும் முடித்து தூய வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு பொது மக்கள் தங்கள் பகுதிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 5-1-2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட உள்ள சுருக்க முறை திருத்தத்துக்கான முந்தைய திருத்த பணிகள் இன்று முதல் தொடங்கின.
    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது.

    திருப்பூர்:

    வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது. வரும் நவம்பரில் சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2024 ஜனவரி மாதம் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இது, தேர்தலுக்கான பட்டியலாக அமையும்.

    நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட உள்ள சுருக்க முறை திருத்தத்துக்கான முந்தைய திருத்த பணிகள் இன்று முதல் தொடங்கின. வருகிற ஆகஸ்டு 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கின்றனர்.

    இப்பணியில் ஈடுபட உள்ள 2,513 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, ஓட்டுச்சாவடி பதிவு அலுவலர்களால் ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பி.எல்.ஓ., ஆப் என்கிற மொபைல் செயலியில் உள்ள ஹவுஸ் டூ ஹவுஸ் என்கிற வசதியை பயன்படுத்தி சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    குறிப்பிட்ட முகவரியில் வாக்காளர் வசிக்கிறாரா, வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படம் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளனவா; இளம் வாக்காளர் பெயர் பட்டியலில் இடம்பெற்றதா என ஆய்வு செய்யப்படும். மேலும், புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது.

    • 1 லட்சத்து 4 ஆயிரத்து 141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
    • ஜூலை 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

    சென்னை :

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம், ஜனவரி 1-ந் தேதி மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகியவற்றை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்து வருகிறது.

    அந்த அடிப்படையில், ஜூலை 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அதன்படி 1 லட்சத்து 39 ஆயிரத்து 108 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    27 ஆயிரத்து 332 வாக்காளர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம் செய்து உள்ளனர். 3 லட்சத்து 42 ஆயிரத்து 185 வாக்காளர்களின் பெயர்கள் இடமாறுதல், இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டு உள்ளன.

    மேலும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    ஜூலை 10-ந் தேதி வரையிலான கணக்குப்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 316 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 29 ஆயிரத்து 237 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 10 லட்சத்து 2 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 981 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரும்பாலான மாவட்டங்களில் ஆதார் எண் இணைப்பில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க நாளை முதல் 2 நாட்கள் வீடு வீடாக ஆய்வு பணி நடைபெற உள்ளது.

    திண்டுக்கல்:

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருகிறது. வாக்காளர்கள் இடம் மாறி செல்லும்போது பழைய இடத்தில் உள்ள வாக்குரிமையை நீக்காமல் புதிதாக விண்ணப்பித்து பட்டியலில் சேர்ந்து விடுகின்றனர்.

    இதனால் இரட்டை வாக்குரிமை பெறும் சூழல் உள்ளது. இது போன்ற இரட்டைப்பதிவை நீக்குவதற்கு வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்து சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இருந்தபோதும் பெரும்பாலான மாவட்டங்களில் ஆதார் எண் இணைப்பில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 38 லட்சத்து 66 ஆயிரத்து 626 வாக்காளர்கள் கொண்ட சென்னை மாவட்டத்தில் 31.83 சதவீத வாக்காளர்கள் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    மாநில அளவில் ஆதார் இணைப்பு குறித்த பட்டியலில் 38வது கடைசி இடத்தில் சென்னை உள்ளது. அரியலூர் மாவட்டம் 97.12 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கள்ளக்குறிச்சி, தர்மபுரி, நாமக்கல், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதில் 81.88 சதவீத பணி முடிந்து விருதுநகர் மாவட்டம் 6-வது இடத்திலும், 68.06 சதவீதத்துடன் திண்டுக்கல் 21வது இடத்திலும், 66.21 சதவீதத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் 25வது இடத்திலும், 65.85 சதவீதத்துடன் சிவகங்கை 26-வது இடத்திலும், 56.57 சதவீதத்துடன் தேனி மாவட்டம் 31வது இடத்திலும், 54.42 சதவீதத்துடன் மதுரை மாவட்டம் 2வது இடத்திலும் உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க நாளை முதல் 2 நாட்கள் வீடு வீடாக ஆய்வு பணி நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 17 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆதார் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்காளர் பட்டியலில் சேரும்போது ஆதார் விபரங்களை அளித்திருந்தாலும் அவை பட்டியலுடன் இணைக்கப்படவில்லை. முகவரி மற்றும் அடையாள சான்றுக்காக மட்டுமே ஆதார் பயன்படுத்தப்பட்டது.

    வாக்காளர்கள் விருப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் விபரங்களை அளித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும். இதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

    • இறுதிப்பட்டியல் வெளியானால் வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள8 சட்டசபை தொகுதிகளில்  சுருக்கமுறை  திருத்த காலத்தில் மொத்தம் 79,373 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இருமுறை பதிவு, விண்ணப்ப பிழைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 1,649 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தம் 77,724 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இறுதிப்பட்டியல் வெளியானால் வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

    சுருக்கமுறை திருத்த காலத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டோர் உள்பட புதிய வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக, www.nvsp.in என்கிற இணையதளம் வாயிலாகவும், voter Helpline என்கிற மொபைல் செயலி வாயிலாகவும், ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பரிசீலிக்கப்பட்டு பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    ×