search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தொடக்கம்
    X

    கோப்புப்படம்

    திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தொடக்கம்

    • நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட உள்ள சுருக்க முறை திருத்தத்துக்கான முந்தைய திருத்த பணிகள் இன்று முதல் தொடங்கின.
    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது.

    திருப்பூர்:

    வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது. வரும் நவம்பரில் சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2024 ஜனவரி மாதம் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இது, தேர்தலுக்கான பட்டியலாக அமையும்.

    நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட உள்ள சுருக்க முறை திருத்தத்துக்கான முந்தைய திருத்த பணிகள் இன்று முதல் தொடங்கின. வருகிற ஆகஸ்டு 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கின்றனர்.

    இப்பணியில் ஈடுபட உள்ள 2,513 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, ஓட்டுச்சாவடி பதிவு அலுவலர்களால் ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பி.எல்.ஓ., ஆப் என்கிற மொபைல் செயலியில் உள்ள ஹவுஸ் டூ ஹவுஸ் என்கிற வசதியை பயன்படுத்தி சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    குறிப்பிட்ட முகவரியில் வாக்காளர் வசிக்கிறாரா, வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படம் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளனவா; இளம் வாக்காளர் பெயர் பட்டியலில் இடம்பெற்றதா என ஆய்வு செய்யப்படும். மேலும், புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது.

    Next Story
    ×