search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க  விண்ணப்பிக்கலாம்
    X

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

    • இறுதிப்பட்டியல் வெளியானால் வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள8 சட்டசபை தொகுதிகளில் சுருக்கமுறை திருத்த காலத்தில் மொத்தம் 79,373 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இருமுறை பதிவு, விண்ணப்ப பிழைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 1,649 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தம் 77,724 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இறுதிப்பட்டியல் வெளியானால் வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

    சுருக்கமுறை திருத்த காலத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டோர் உள்பட புதிய வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக, www.nvsp.in என்கிற இணையதளம் வாயிலாகவும், voter Helpline என்கிற மொபைல் செயலி வாயிலாகவும், ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பரிசீலிக்கப்பட்டு பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×