search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vilathikulam"

    • சோலைமலையான்பட்டியில் புதிய சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது.
    • விழாவில் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கீழவிளாத்திகுளம் ஊராட்சி சோலைமலையான்பட்டி கிராமத்தில் 15-வது நிதிக்குழு ஒன்றிய நிதியில் இருந்து ரூ. 9.92 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் துரைராஜ், கீழ விளாத்திகுளம் ஊராட்சி தலைவர் நவநீத கண்ணன், துணைத்தலைவர் செண்பகராஜ், ஊராட்சி செயலர் செந்தில், ரவிச்சந்திரன், செண்பகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எத்திலப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நல கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • பணிகளை கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எத்திலப்ப நாயக்கன்பட்டி, தலை காட்டுப்புரம், நீராவி புதுப்பட்டி, ராமனூத்து உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் களம் முகாம் நடைபெற்றது.

    முகாமில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்கண்டேயன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் எத்திலப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நல கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நீராவி புதுப்பட்டி-பருவக்குடியில் ரூ.198 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை, ராம னூத்து-பருவக்குடியில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பணியை கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக ்கொண்டார்.

    நிகழ்ச்சியில் விளாத்தி குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்தி ஒன்றிய செய லாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன் ராஜ், எட்டயபுரம் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் சுந்தர், ராமனூத்து ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், இம்மானுவேல், சமூக வலைதள பொறுப்பா ளர் ஸ்ரீதர் உட்பட கலந்து கொண்டனர்.

    • 21 வகையான பொருட்களால் நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது.
    • ரிஷப வாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விளாத்திகுளம்:

    ஆனி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நேற்று பால், சந்தனம், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் மீனாட்சி சுந்தரே ஸ்வரர் கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழாவில், விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் வீரசோலை, இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் ராம ரவிக்குமார், மாநில பொருப்பாளர் ஈசான சிவம், ராகவேந்திரா, ராஜா சுவாமிகள், அனுஷராஜா, கோவில் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) வெள்ளைச்சாமி, கோவில் எழுத்தர் மகாராஜன், திருக்கோவில் பணியாளர்கள் உட்பட ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • உருமி மேள கலைஞர் பாரதமணியின் குடும்பம் வறுமையில் இருந்து வந்தது.
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாரதமணிக்கு புதிய உறுமி வழங்கப்பட்டது.

     விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டி கிராமத்தை சேர்ந்த உருமி மேள கலைஞர் பாரதமணி. இவரது குடும்பம் வறுமையில் இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு உருமி வாங்குவதற்கு போதிய பொருளாதார வசதியின்றி இல்லை என்று மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு ஒன்றை பாரதமணி கொடுத்தார். இந்நிலையில் மனு கொடுத்த 2 நாட்களில் இது குறித்து நடிவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உருமி மேள கலைஞர் பாரதமணிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய உறுமியை வழங்கினார்.

    அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நிகழ்ச்சிக்கு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் ஏஞ்சல் விஜய நிர்மலா தலைமை தாங்கினார்.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 119 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிளை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள நாகலா புரம் உமறுப்புலவர் அரசினர் தொழிற் பயிற்சி மையத்தில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    தொழில் பயிற்சி நிலைய முதல்வர் ஏஞ்சல் விஜய நிர்மலா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 119 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிளை வழங்கினார்.

    நிகழ்சியில் புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள், பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சின்ன மாடு பிரிவில் 9 மாடுகள் பங்கேற்றது.
    • 5 கிலோமீட்டர் தூரம் கொண்ட பூஞ்சிட்டு பிரிவில் முதல் பரிசு ரூ.15 ஆயிரத்தை ஏ.எம். பட்டியை சேர்ந்த ஜெயசூர்யா மாட்டு வண்டி பெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தில் உள்ள சந்தன மாரியம்மன், மாடசாமி கோவில் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் விருசம்பட்டி-விளாத்திகுளம் சாலையில் நடத்தப்பட்டது. மாட்டுவண்டி பந்தயத்தை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சின்ன மாடு பிரிவில் 9 மாடுகள் பங்கேற்றது. இதில் முதல் பரிசு ரூ.20 ஆயிரத்தை சக்கம்மாள்புரத்தை சேர்ந்த கமலா மாட்டுவண்டியும், 2-வது பரிசு ரூ.15 ஆயிரத்தை மாமுநயினார்புரத்தைசேர்ந்த முஜின் பிரணவ் மாட்டு வண்டியும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரத்தை ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த முகிலன் மாட்டு வண்டியும், 4-வது பரிசு ரூ.5 ஆயிரத்தை சக்கம்மாள்புரம் தாவீது- அரசரடி கதிர்வேல் பாண்டியன் மாட்டுவண்டியும் பெற்றது.

    5 கிலோமீட்டர் தூரம் கொண்ட பூஞ்சிட்டு பிரிவில் முதல் பரிசு ரூ.15 ஆயிரத்தை ஏ.எம். பட்டியை சேர்ந்த ஜெயசூர்யா மாட்டு வண்டியும், 2-வது பரிசு ரூ.10 ஆயிரத்தை இந்திரா நகர் பாப்பா -பல்லாகுளம் சஷ்டிகா தங்கப்பாண்டி மாட்டுவண்டியும், 3-வது பரிசு ரூ.8 ஆயிரத்தை விளாத்திகுளம் காசிலட்சுமி- ராமச்சந்திராபுரம் மதுமிதா மாட்டு வண்டியும் பெற்றது. மாட்டுவண்டி பந்தயத்தை காண சாலை ஓரங்களில் கூடி நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    • விளாத்திகுளத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் தனியார் மகாலில் நடைபெற்றது.
    • ஒரு மனிதனின் வெற்றி என்பது வேளாண் சார்ந்த மரங்கள் எவ்வளவு வளர்க்கிறோமோ அது தான் வெற்றியாக நான் கருதுகிறேன் என்று மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசினார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் தனியார் மகாலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    எப்போதும் முதன்மை யான விவசாயி யாகவே வாழ வேண்டும் என மனதில் எண்ணி உள்ளேன். 20 ஏக்கரில் மிளகாய், 30 ஏக்கரில் கால்நடைகளுக்கான தீவணம் சோளப்பயிர்கள், வீட்டுக்கு தேவையான உளுந்து, பாசி, எள், சூரியகாந்தி, வரகு, கேழ்வரகு போன்ற அனைத்து எண்ணை வித்துக்கள், தானியங்களை நாங்களே உற்பத்தி செய்கிறோம்.

    நவதானியங்களும், எண்ணை வித்துக்களும் மட்டும் பயிர் செய்த எங்கள் பகுதியில், மானாவாரியில் வெங்காய பயிரை, வியாபார ரீதியாக வெற்றி பெற வை த்தது விளாத்திகுளம் தான். ஒரு ஏக்கரில் ஊடு பயிராக தான் வெங்காயம் பயிரிடு கிறோம். இங்கு வெங்காய பயிருக்கு யாரும் மருந்து தெளிப்பது கிடையாது.

    இப்பகுதியில் சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக முண்டு மிளகாய் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்ப டுகிறது. இதற்கு யாரும் மருந்து தெளிப்பதில்லை. மருந்து கம்பெனிகள் அதிகரித்துள்ள நிலையில், மருந்து தெளிக்க வில்லை யென்றால் செடிகள் வளராது என்ற நிலையை தாண்டி, மருந்து தெளிக்க வில்லை யென்றாலும் மிளகாய் செடிகள் வளரும் என விவசாயிகள் நம்பியு ள்ளனர். இது இந்தியாவிலேயே ஒரு மைல் கல்லாக தான் நாம் பார்க்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் விளாத்திகுளம் முண்டு வத்தலுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க ப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்துள்ளார். இதற்காக அனைத்து விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த 2 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டும் 1 லட்சம் தென்னை மரக்கன்றுகளை அரசு வழங்கி உள்ளது. ஒரு தென்னை மரம் 4-வது ஆண்டில் பலன் கொடுக்க தொடங்கிவிடும்.

    மாவட்டத்தில் சுமார் 20 லட்சம் மக்கள் தொகை இருக்கலாம். இதில், ஒரு லட்சம் தென்னங்கன்றுகளை சரியாக பராமரித்தால், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வெளியே இருந்து தேங்காய் வாங்க வேண்டி அவசியம் இல்லாத ஒரு தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உருவாகும்.

    ஆனால், நடவு செய்த கன்று களை வளர்த்து ள்ளோமா என்பதை பார்க்க வேண்டும். ஒரு மனிதனின் வெற்றி என்பது வேளாண் சார்ந்த மரங்கள் எவ்வளவு வளர்க்கிறோமோ அது தான் வெற்றியாக நான் கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் பழனி வேலாயுதம், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் தேரடி மணி, கோவி ல்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வேளா ண்மை, வேளாண் பொறி யியல், தோட்டக்கலைத்துறை தொடர்பாக திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர்.

    • 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பக்கத்து கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பெ ற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பாமல் உள்ளனர்.
    • அரசின் இலவச ஆடு, மாடுகள் தொடங்கி 100 நாட்கள் வேலைத்திட்டம், அரசின் தொகுப்பு வீடு, முறையான குடிநீர் வசதி செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது தொப்பம்பட்டி என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் சாலை வசதி, மின்விளக்கு, மயானம், கழிவுநீர் கால்வாய், அங்கன்வாடி மையம் என அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தொப்பம்பட்டி கிராமமக்கள் கூறியதாவது:-

    எங்கள் ஊரின் பெயர் பலகை கூட இல்லை. மெயின் ரோட்டில் இருந்து தொப்பம்பட்டி கிராமத்திற்கு செல்வதற்கான சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் தான் கிராம மக்கள் சென்று வருகின்றனர். அதிலும், மின்விளக்கு வசதி எதுவும் இதுவரை செய்து தரப்படாததால் இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். இக்கிராமத்தில் கால்வாய் வசதி தற்போது வரை செய்து தரப்படாமல் உள்ளது.

    கிராமத்து குழந்தைகளுக்கு ஒரு அங்கன்வாடி மையம் கூட கட்டப்படாததால், 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பக்கத்து கிராம த்திற்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பெ ற்றோர்கள் தங்கள் குழந்தை களை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பாமல் உள்ளனர். இங்குள்ள மக்கள் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீட்டி லும், ஓட்டு வீடுகளிலுமே தங்களது வாழ்க்கையை நடத்து கின்றனர்.

    தொப்பம்பட்டி கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு கால்வாய் வசதி, மின் விளக்கு, சாலை வசதி, நூலகம், மயானம், பொது குளியல் தொட்டி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும்படி ஊராட்சிமன்றத் தலை வரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நிதியில்லை என கூறி அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் உள்ளார்.

    மேலும் அரசின் இலவச ஆடு, மாடுகள் தொடங்கி 100 நாட்கள் வேலைத்திட்டம், அரசின் தொகுப்பு வீடு, முறையான குடிநீர் வசதி என எதுவுமே செய்துதராமல் தவிர்த்து வருகிறார். அரசு அதிகாரிகளும் எங்கள் கிராமத்தை புறக்கணித்து வருகிறார்கள்.

    குறிப்பாக அடிப்படை வசதிகள் கூட இல்லாத தொப்பம்பட்டி கிராமத்திற்கு திருமண சம்பந்தம் பேச வரும் பிற ஊர்களை சேர்ந்த வர்கள் பெண் கொடுக்கவும், பெண் எடுக்கவும் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர அதிகாரிகள் முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • கமலாபுரம் ஊராட்சியில் 15-வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.6.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடையை அமைச்சர் கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்கண்டேயன் தலைமை தாங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், கமலாபுரம் ஊராட்சியில் 15-வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.6.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்கண்டேயன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்றத்தலைவர் சூர்யா அய்யன்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் விஜயலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி, உட்பட தி.மு.க. நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
    • விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த கபடி போட்டியில் இறுதி ஆட்டத்தில் வேம்பார் - சிலுவைபுரம் அணியினர் மோதிக்கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் பொதுக்கூட்டங்கள், சிறப்பு மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடியில், கலைஞர் நூற்றாண்டு விழாவைமுன்னிட்டு விளாத்திகுளம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிழக்கு ஒன்றியம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட கபடி அணிகள் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து கபடி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த கபடி போட்டியில் இறுதி ஆட்டத்தில் வேம்பார் - சிலுவைபுரம் அணியினர் மோதிக்கொண்டனர். இதில் சிலுவைபுரம் அணியினர் முதல் இடத்தைப் பெற்று பரிசு கோப்பையை வென்றனர். அதேபோன்று 2,3 இடங்களை வேம்பார் மற்றும் பெரியசாமிபுரம் கபடி அணிகள் தட்டி சென்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் மிக்கேல் நவமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் மருதகனி, சுப்பிரமணியன், செந்தூர்பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் பால்பாண்டியன், ராமசுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி எப்ரோ மீனா மேரி, ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணியன், புனிதா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் கனகராஜ், துணை அமைப்பாளர் ராஜா, வேல்முருகன், ஒன்றிய தொண்டர் அணி பாலமுருகன், ஆதித்யன், ஒன்றிய சிறுபான்மை அணி தர்மநேச செல்வின், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி பாரதிதாசன், கிளை செயலாளர்கள் சடையாண்டி, சுந்தர், ஆறுமுகம், சரவணன், ஹரிகிருஷ்ணன், கந்தசாமி, நல்லமுத்து, முனியசாமி, சந்திரசேகரன், சூரங்குடி கூட்டுறவு சங்க தலைவர் சண்முகசுந்தரம், தூத்துக்குடி மாவட்ட ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கரண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டியை ஏராளமான கபடி ரசிகர்கள் கூடியிருந்து கண்டுகளித்தனர்.

    • மாற்றுத்திறன் மாணவர்களுக்கான புதிய பள்ளி கட்டிடம், புனரமைக்கப்பட்ட கட்டிடம், புதிய பொது சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.
    • விளாத்திகுளம் பஸ் நிலையம் உட்புறத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட ஆண், பெண் இருபாலருக்குமான பொது சுகாதார வளாகத்தையும் அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம் சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான புதிய பள்ளி கட்டிடம், புனரமைக்கப்பட்ட கட்டிடம், புதிய பொது சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. மார்கண்டேயன் தலைமை தாங்கினார். அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் பிறப்பு முதல் 14 வயதுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குக்கான விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய கல்வி மைய கட்டிடத்தையும், ரூ.25 லட்சம் மதிப்பிலான பள்ளியின் அனைத்து புணர் அமைப்பு செய்யப்பட்ட கட்டிடத்தையும், விளாத்திகுளம் பஸ் நிலையம் உட்புறத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட ஆண், பெண் இருபாலருக்குமான பொது சுகாதார வளாகத்தையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சியில் ஜே.எஸ்.டபிள்யூ திட்ட மேலாளர் தென்னவன், மண்டல மேலாளர் பாரதி பழனிச்சாமி, அலுவலர் சுப்பிரமணி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார் பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி, தாசில்தார் ராமகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அயன் ராஜ், துணைத்தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு சின்ன மாரிமுத்து, புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, மாவட்ட கவுன்சிலர்கள் ராமலிங்கம், நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், வார்டு கவுன்சிலர்கள் ,வார்டு செயலாளர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜிவ் நகரில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் சேதமடைந்துள்ளது.
    • பழுதடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் இருந்து மதுரை செல்லும் பிரதான சாலையில் பல மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து, ஆபத்தான நிலையிலும் இருந்து வருகிறது. விளாத்திகுளத்தின் பிரதான சாலையாக விளங்கி வரும் மதுரை ரோட்டில், அம்பாள் நகர் ஆர்ச் அருகில், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் அருகில், பெருநாழி விலக்கு அருகில் என வரிசையாக பல மின்கம்பங்கள் காலாவதியாகி எப்போதும் விழலாம் என்ற ஆபத்தான நிலையில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

    ராஜிவ் நகரில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரும் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் விளாத்திகுளம் மின்வாரிய அதிகாரிகள், மின் பொறியாளர்கள் பொதுமக்களின் நலன் கருதி துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக விளாத்திகுளம் பகுதி முழுவதும் பழுதடைந்து காணப்படும் மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் மாற்றி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×