விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம்

21 வகையான பொருட்களால் நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. ரிஷப வாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம்
Published on

விளாத்திகுளம்:

ஆனி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நேற்று பால், சந்தனம், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் மீனாட்சி சுந்தரே ஸ்வரர் கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவில், விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் வீரசோலை, இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் ராம ரவிக்குமார், மாநில பொருப்பாளர் ஈசான சிவம், ராகவேந்திரா, ராஜா சுவாமிகள், அனுஷராஜா, கோவில் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) வெள்ளைச்சாமி, கோவில் எழுத்தர் மகாராஜன், திருக்கோவில் பணியாளர்கள் உட்பட ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com