search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaccination"

    • 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் சிகிச்சை.
    • சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    வேதாரண்யம்:

    நாகைமண்டல இணை இயக்குனர் விஜயகுமார், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோரின் அறிவுரையின் பேரில் வேதாரண்யம் தாலுக்கா மணக்குடி ஊராட்சியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது

    முகாமில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை குடற்புழு நீக்கம் பெரியம்மை தடுப்பூசி போடுதல் ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடபட்டன.

    மேலும் சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பரிசுகள் வழங்க ப்பட்டன முகாமில் கால்நடை உதவி மருத்துவர் ஸ்ரீதர் பாபு கால்நடை ஆய்வாளர் செல்விஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது.
    • 16 லிட்டர் பவர் ஸ்ப்ரேயர்களை பின்னேர்ப்பு மானிய அடிப்படையில் வழங்கினார்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வட்டாரம் பாலாஜி கோட்டை பஞ்சாயத்தில் வேளாண் துறை மற்றும் கால்நடை துறையுடன் இணைந்து கால்நடை பாதுகாப்பு முகாம் நடைபெற்றது.

    இதில் 15 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கால்நடைகளுடன் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மற்றும் ஆலோசனைகளை டாக்டர் ரூபவாஹினியிடம் பெற்றுக் கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து பாலாஜி கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் பாலாஜி கோட்டை கிராமத்தை சேர்ந்த 19 விவசாயிகளுக்கு வேளாண் துறையின் மூலம் 16 லிட்டர் பவர் ஸ்ப்ரேயர்களை பின்னேர்ப்பு மானிய அடிப்படையில் வழங்கினார்.

    வேளாண் உதவி இயக்குனர் திலகவதி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் அட்மாதிட்ட அலுவலர் ராஜு ஆகியோர் முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு பவர்ஸ்பிரேயர்களை வழங்கியதுடன் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிற திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினர்.

    முன்னோடி விவசாயிகள் அடைக்கலம் ராஜேந்திரன் வடுவம்மாள் மற்றும் தீபிகா திருஞானம் உள்ளிட்ட விவசாயிகள் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்கள் தங்கள் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கால்நடை மருந்தக வளாகத்தில் மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம் அறிவுரையின் பேரில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா 2022 -23-ம் ஆண்டு திட்டம் சார்பில் வெறிநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வட்டார கால்நடை மருத்துவர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

    முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார்.

    இதில் கால்நடை மருத்துவர்கள் மகேந்திரன், ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர்கள் முருகேஷ், சாந்தி, நிர்மலா, கால்நடை உதவியாளர்கள் வீரமணி, சண்முகம், பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, செல்வராஜ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிருந்து பொதுமக்கள் தங்கள் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    இதில் பேரூராட்சி கவுன்சிலர் லட்சுமி செல்வம், அப்பகுதி பிரதிநிதிகள் செல்வம், பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மேலவஸ்தாசாவடியில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைய உள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் எஸ்.பி.சி.ஏ.க்கு சொந்தமாக கட்டிடம் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.சி.ஏ. ( மிருகவதை வதை தடுப்பு சங்கம் ) சங்கத்திற்கு சொந்தமான மாதாக்கோட்டையில் உள்ள செல்லப் பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.

    இந்த முகாமை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    இதில் செல்லப்பிராணி களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாதாக்கோ ட்டையில் எஸ்.பி.சி.ஏ. சங்கத்திற்கு கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக சொந்தமாக கட்டிடம் கட்டப்பட்டது.

    தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் எஸ்.பி.சி.ஏ.க்கு சொந்தமாக கட்டிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வரக்கூடிய நாட்களில் நாய் ஷோ நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் சுமார் 40 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

    நகராட்சிக்கு சமமான அளவில் இந்த ஊராட்சி விளங்குகிறது. நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மேலவஸ்தாசாவடியில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைய உள்ளது. அதன் பிறகு சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் தமிழ் செல்வன், உதவி இயக்குனர் சையது அலி, தாசில்தார் சக்திவேல், நாஞ்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது.
    • 3 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தங்கள் செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளி–யிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தஞ்சை மாவட்ட எஸ்.பி.சி.ஏ. சங்கத்திற்கு சொந்தமான மாதாக்கோட்டையில் உள்ள செல்லப்பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த தடுப்பூசி போடப்படுகிறது. இதனை நான் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறேன்.

    எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி 3 மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தங்கள் செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தி, கொடிய நோயில் இருந்து தங்கள் செல்லப்பிராணிகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைக்கிறார்.
    • முகாமில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை வட்டார கால்நடைதுறை மருத்துவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முத்துப்பேட்டை கால்நடை மருந்தக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி ராஷ்டிரிய கிருஷிவிகாஸ் யோஜனா 2022-23-ம் ஆண்டு திட்டம் சார்பில் வெறிநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நாளை (29-ந்தேதி) நடைபெறுகிறது.

    முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைக்கிறார். இதில் திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார், ஒன்றியக்குழு தலைவர் கனியமுதா, துணைத்தலைவர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இதில் பொதுமக்கள், விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • விவசாயிகள் தங்க ளது கால்நடைகள் கட்டப் பட்டிருக்கும் கொட்டகை மற்றும் தரைத்தளத்தில் கொசுவை ஒழிக்க கொசு மருந்தை அடிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    இந்தியாவில் வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் வேலூர், விழுப்பரம், திருவண்ணா மலை, தருமபுரி, ஈரோடு, சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களில் கால்நடை களுக்கு தோல் கழலை நோய் பரவி வருகிறது.

    இந்நோய் பரவாமல் தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறை மூலம் அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் உள்ள கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தொடர்பான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்நோய் கூலக்ஸ் என்ற கொசு கடிப்பதன் மூலமும் கடிக்கும் பூச்சிகள் மற்றும் உண்ணிகள் மூலம் கால்நடைகளுக்கு பரவும் ஒரு தொற்று நோயாகும். எனவே விவசாயிகள் தங்க ளது கால்நடைகள் கட்டப் பட்டிருக்கும் கொட்டகை மற்றும் தரைத்தளத்தில் கொசுவை ஒழிக்க கொசு மருந்தை அடிக்க வேண்டும்.

    கண்ணில் நீர் வடிதல், சளி ஒழுகுதல், கடுமையான காய்ச்சல், உடல் முழுவதும் வீக்கம் மற்றும் உருண்டையான கட்டிகள் உடைந்து சீழ் வெளியேற்றம், கால்களில் வீக்கம், மாடுகள் சோர்வாக காணப்படுவது போன்றவை தோல் கழலை நோயின் அறிகுறிகள் ஆகும்.

    நோய் தாக்கம் ஏற்பட்டு உள்ள கால்நடைகளுக்கு உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்தவர்களை அணுகி உரிய ஆலோசனை பெற்று நோய்க் கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தங்கள் கிராமத்தில் நடக்கும் தோல் கழலை நோய் தொடர்பான முகாம்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்

    • அங்காடியில் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு.
    • மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து ஆய்வு.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் அகரமாங்குடி ஊராட்சியில் உள்ள பொது வினியோக திட்ட
    அங்காடியில் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அகரமாங்குடி ஊராட்சியில் உள்ள அரசு துணை சுகாதார மையத்தை பார்வையிட்டார்.

    இதேப்போல் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், பாரத பிரதமரின்
    அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய வீட்டின் கட்டுமான பணிகள், அனைத்து கிராம அண்ணா
    மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடந்த சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

    இதேபோல் மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து ஆய்வு நடத்தினார்.
    அகரமாங்குடி ஊராட்சியில் நெற்களம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆடு மற்றும் கோழி தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
    • முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடை பயன்பெற்றன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாதாணிக்கோட்டகம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை முகாம் நடைபெற்றது.

    இம்முகாம் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் ஆசான் இப்ராகிம் அறிவுரையின் பேரில் நடைப்பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார், கால்நடை உதவி மருத்துவர்கள் சரவணகுமார் , சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை,மலடு நீக்கம், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆடு மற்றும் கோழி தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    இந்த முகாமில் 500 க்கும் மேற்பட்ட கால்நடை பயன்பெற்றன, இதில் சிறந்த கால்நடை கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது மற்றும் சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு மற்றும் மேலாண்மைகான விருது வழங்கப்பட்டன மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கபட்டது.

    இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும வார்டு உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 

    • உம்பளச்சேரி கால்நடை மருந்தகத்திற்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
    • வெறி நோய் தடுப்பூசி முகாமில் 132 நாய்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் உம்பளச்சேரி கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட நத்தப்பள்ளம் ஊராட்சியில் ஒன்றிய அளவிலான வெறிநோய் தடுப்பூசி மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் நாகப்பட்டினம் கோட்டம் உதவி இயக்குனர் அசன் இப்ராஹீம் வழிகாட்டுதல் படி நடைபெ ற்ற முகமாமிற்கு தலைஞாயிறுஒன்றிய குழு தலைவர் தமிழரசிதலைமையில் வதித்தார்.

    ஊராட்சி மன்ற தலைவர் ஆதிரவிச்சந்திரன் முன்னிலையில் வகித்தார் ஊராட்சி செயலாளர் வீரையன் வரவேற்றார்.

    வெறி நோய் தடுப்பூசி முகாமில் 132 நாய்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது.

    மேலும் நீர்முளை புனித சவேரியார் மேல் நிலைப் பள்ளியில் 150 மாணவர்களுக்கு வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் துணை இயக்குனர் டாக்டர் விஜயகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில், ஸ்ரீதர் பாபு, சண்முகநாதன், திவாகர் கால்நடை ஆய்வாளர் கருணாநிதி உதவியாளர் நல்ல தம்பி,மாலா ஊராட்சி துணைத் தலைவர் ரேவதி மற்றும் கிராமக்கள் கலந்து கொண்டனர்.

    • 120-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • பொது–மக்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவிராஜ், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோரின் அறிவுறுத்தல்படி நடைபெற்றது.

    முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கால்நடை உதவி மருத்துவர் பெரோஸ் முகமது, ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கால்நடை உதவி மருத்துவர் முத்துகுமரன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் கால்நடை உதவி மருத்து–வர்கள் பிரியதர்ஷினி, சிவப்பிரியா, அருண், பூபதி ஆகியோர் பொதுமக்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் விலங்குகள் வதை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முகாமில் கட்டுமாவடி, புறாக்கிராமம், தண்டாளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்த 120-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    முகாமில் உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரி, கால்நடை ஆய்வாளர் பாரிவேந்தன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் பள்ளி மாணவர்களுடன் நடைபெற்றது.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் காஸ்மியா மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில் வெறிநாய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    இம்முகாமிற்கு ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் தலைமை வகித்தார். பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சிலர் பாத்திமா ஜான் ராயல் அலி, ஒன்றிய கவுன்சிலர் ரஜியா சுல்தானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சம்பந்தம் வரவேற்று பேசினார்.

    முகாமில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பாபநாசம் ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் மணிச்சந்திரன், ஏஞ்சலா சொர்ணமதி, சங்கமித்ரா, சௌந்தரராஜன், அபிமதி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மதியழகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.

    இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் பள்ளி மாணவர்களுடன் நடைபெற்றது.

    முகாமில் மாவட்ட பிரதிநிதி தமிழ்வாணன், ஒன்றிய துணை செயலாளர் கலிய–மூர்த்தி, பெரிய பள்ளிவாசல் செயலாளர் யூசுப் அலி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அசரப்அலி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்–பாளர் மணி–கண்டன், துணை அமைப்பாளர் மணி–மாறன், வட்டார வளர்ச்சி அலு–வலர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், ஐயப்பன், ராஜகிரி காஸ்மியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்க தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ராஜகிரி ஊராட்சி செயலாளர் ஜெய்குமார் நன்றி கூறினார்.

    ×