search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகரமாங்குடி ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    சிமெண்டு சாலை அமைக்கபட்டுள்ளதை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    அகரமாங்குடி ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • அங்காடியில் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு.
    • மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து ஆய்வு.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் அகரமாங்குடி ஊராட்சியில் உள்ள பொது வினியோக திட்ட
    அங்காடியில் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அகரமாங்குடி ஊராட்சியில் உள்ள அரசு துணை சுகாதார மையத்தை பார்வையிட்டார்.

    இதேப்போல் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், பாரத பிரதமரின்
    அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய வீட்டின் கட்டுமான பணிகள், அனைத்து கிராம அண்ணா
    மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடந்த சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

    இதேபோல் மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து ஆய்வு நடத்தினார்.
    அகரமாங்குடி ஊராட்சியில் நெற்களம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×