search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tsunami"

    • நிலநடுக்கம் 63 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் வெளியாகவில்லை.

    பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் இன்று 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கம் 63 கிமீ ஆழத்தில் இருந்ததாகவும், நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் வெளியாகவில்லை.

    கடந்த மாத தொடக்கத்தில், தெற்கு பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

    நவம்பர் 17 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சாரங்கனி, தெற்கு கோடாபாடோ மற்றும் டாவோ ஒக்சிடென்டல் மாகாணங்களில் இறப்புகள் பதிவாகின. அதே நேரத்தில் 13 பேர் காயமடைந்தனர். இது ஏராளமான மக்களை பீதிக்குள்ளாக்கியது மற்றும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமானது.

    • பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியின் போது பல்வேறு உயிர்காப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    முக்கூடல்:

    முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி யில் தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் பேரிடர் மீட்புப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் பாலகன் ஆறுமுகச்சாமி, கல்லூரி முதல்வர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை தாங்கினர். சேரன்மகாதேவி தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அரக்கோ ணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் தேஸ்வால் தலைமையிலான 16 வீரர்கள் கலந்து கொண்டு மழை, வெள்ளம், இயற்கை சீற்றங்கள், பேரிடர், பூகம்பம், சுனாமி காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்புப் பணிகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது, வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்பது, தக்க வைப்பது, மாரடைப்பு ஏற்படும் போது உடனடியாக உயிர் காப்பது எப்படி?, விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவது, ஆம்புலன்சை வரவழைப்பது உள்ளிட்ட பல்வேறு உயிர்காப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

    இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரி யர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுச்சேரியில் மட்டும் கடல் உள் வாங்கி சென்று விட்டது.
    • 5 உற்சவர்கள் உள்ளனர்

    இந்திய கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கிய போது தமிழக கடலோர பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஆனால் புதுச்சேரியில் மட்டும் கடல் உள் வாங்கி சென்று விட்டது.

    பக்கத்து மாவட்டங்களில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊருக்குள் கடல் தண்ணீர்பொங்கி வந்து விட்ட நிலையில் புதுச்சேரியில் மக்கள் சலனமின்றி இருந்தனர். புதுச்சேரியில் அன்று கடல் உள் வாங்கிச் சென்றதற்கு மணக்குள விநாயகரின் அருள்தான் காரணம் என்று புதுச்சேரி மக்கள் சொல்கிறார்கள்.

    சுனாமி பேரழிவில் இருந்து விநாயகர் தங்களை காப்பாற்றியதாக இன்றும் பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

    கேது கிரகத்துக்கு உரியவர்

    மணக்குள விநாயகர் கேது கிரகத்துக்கு உரியவர் ஆவார். கேது கிரக அமைப்பில் பிறந்த குழந்தைகளை இவரிடம் கொண்டு வந்து பிராத்தனை செய்வது வழக்கமாக உள்ளது. இப்படி பிரார்த்தனை செய்தால் அந்த குழந்தை நீண்ட ஆயுள் பெறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    5 உற்சவர்கள்

    மணக்குள விநாயகர் ஆலயத்தில் இரு மூலவர்கள் இருப்பது போல 5 உற்சவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

    1. மணக்குள விநாயகர்

    2. லட்சுமி கணபதி

    3. சித்தி-புத்தி விநாயகர்

    4. நர்த்தன விநாயகர்

    5. சக்தி விநாயகர்.

    இந்த 5 உற்சவர்களில் மணக்குள விநாயகர்தான் அதிக உற்சவங்களில் கலந்து கொள்வார். மற்ற 4 உற்சவர்களும் அவர்களுக்குரிய விழாக்கள் வரும் போது வீதி உலா சென்று வருவார்கள். ஆவணி பிரம்மோற்சவத்தின் போது 5-ம் நாள் திருக்கல்யாணம் நடத்தப்படும். அப்போது சித்தி-புத்தி விநாயகர் வீதி உலா செல்வார்.

    ஆவணி திருமஞ்சன நாளில் நர்த்தன விநாயகர் வீதி உலா செல்வார். தை, ஆடி, அமாவாசை நாட்களிலும், மாசி மகத்திலும் கடலில் தீர்த்தவாரி நடைபெறும். அதிலும் உற்சவர்கள் கலந்து கொள்வார்கள்.

    • நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக அந்த நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
    • உலக அளவில் இயற்கை சீற்றங்களை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக வானூட்டு உள்ளது.

    தென் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு வானூட்டு. சுமார் 80 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் மேடான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக அந்த நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

    உலக அளவில் இயற்கை சீற்றங்களை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக வானூட்டு உள்ளது. நிலநடுக்கங்கள், புயல்கள், வெள்ளம், சுனாமி என அந்த நாடு அடிக்கடி இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் நாடாக உள்ல்ளதாக உலக பேரிடர் அறிக்கையின் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

    • கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்புகலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • நெமிலியில் இருந்து கடலூர் வரையிலான பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சுனாமி ஆழிப்பேரலை கடந்த 2004ம் ஆண்டு ஏற்படுத்திய பேரழிவை காலத்துக்கும் நம்மால் மறக்க முடியாது.

    அந்த அளவுக்கு இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளில் திடீரென கடலுக்குள் ஏற்பட்ட சுனாமி கரையோர பகுதிகளை வாரி சுருட்டியது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

    தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோரப் பகுதிகள் அனைத்தையும் சுனாமி ஆழிப்பேரலை துவம்சம் செய்தது. தமிழகத்தில் மட்டும் சுனாமியின் கோரத்தாண்டவத்திற்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    2004ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி தாக்குதல் ஏற்பட்டதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலோரப் பகுதிகளில் அரசியல் கட்சியினர் கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் நினைவு அஞ்சலியை செலுத்தினார்கள்.

    ஆழிப்பேரலையின் கோரப் பசிக்கு உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்கள் தற்போதும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மீண்டும் இதுபோல் எப்போதும் ஒரு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே அனைவரின் வேண்டுதல்களாகவே இருந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சுனாமி எச்சரிக்கை சில நேரங்களில் விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரிய அளவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது போன்று பாதிப்பு எங்கேயும் ஏற்படவில்லை.

    இதற்கிடையே மீண்டும் சுனாமி தாக்குதல் ஏற்பட்டால் சென்னையையொட்டிய கடலோரப் பகுதிகளில் 2 கிலோ மீட்டர் தூரம் வரையில் கடல்நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் ஆகியவற்றின் ஆய்வில் மேற்கண்ட தகவல் தெரியவந்துள்ளது.

    இந்த ஆய்வில் எந்தெந்த பகுதிகளில் மீண்டும் சுனாமி தாக்குதல் ஏற்பட்டால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பது பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்புகலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நெமிலியில் இருந்து கடலூர் வரையிலான பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாமல்லபுரம் கல்பாக்கம் பெரிய குப்பம் உள்ளிட்ட இடங்களில் 4 மீட்டர் வரையில் தண்ணீர் உட்புக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னையில் ராயபுரம், கடற்கரை ரெயில் நிலையம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளிலும், நேப்பியர் பாலம், அடையாறு பாலம் ஆகியவற்றை சுற்றி உள்ள பகுதிகளிலும் கடல்நீர் உள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

    இதேபோன்று இந்திய கடலோரப் பகுதிகளில் சுமார் 7500 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பல்வேறு நிலப்பரப்புகளை அடிப்படையில் எச்சரிக்கை தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    2004ம் ஆண்டு சுனாமி தாக்குதல் ஏற்பட்டபோது கடலூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் 3 கிலோ மீட்டர் வரை கடல்நீர் ஊருக்குள் புகுந்து உள்ளது.

    அப்போது சென்னையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கும் விசாகப்பட்டினத்தில் ஒரு மீட்டர் தூரத்துக்கும் மட்டுமே தண்ணீர் புகுந்தது. கடலை ஒட்டிய நிலப்பரப்பு சம தளமாக இருந்தால் கடல்நீர் உள் புகுவது அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வில் கணிக்கப்பட்டு உள்ளது.

    அதே நேரத்தில் கரையில் இருந்து சற்று உயரமான பகுதிகளில் கடல் நீர் புகுவது குறைவாகவே உள்ளது என்றும் கண்டறியப்பட்டு உள்ளது.

    கிழக்கு கடற்கரை சாலை பகுதியை பொருத்தவரையில் உத்தண்டி முதல் முட்டுக்காடு வரையிலும் பனையூர் பகுதியும் மீண்டும் சுனாமி ஏற்பட்டால் பாதிப்பை சந்திக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.

    இந்த பகுதியில் சுமார் 500 மீட்டர் தூரம் வரையில் தண்ணீர் ஊருக்குள் வரலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் மற்றும் சலவன் குப்பம் பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையில் கடல் நீர் ஊருக்குள் வரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடலின் இயற்பியல் அம்சங்களை ஆய்வு செய்து என்னென்ன பாதிப்புகள் எந்தெந்த பகுதியில் ஏற்படலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு உள்ளனர்.

    கடலுக்கு அடியில் சில இடங்களில் சாய்வான பகுதிகள் இருந்தால் அங்கு அதிகளவு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுனாமி தாக்குதலை பொறுத்தவரையில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அது ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

    1881-ம் ஆண்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுனாமி ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு கடந்த 2004-ம் ஆண்டு தான் மீண்டும் சுனாமி தாக்குதல் கடலோரப் பகுதிகளை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    எனவே மீண்டும் உடனடியாக ஒரு சுனாமி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்கிற ஆறுதல் செய்தியையும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே உடனடியாக சுனாமி வந்து விடுமோ என்று யாரும் பீதி அடைய தேவையில்லை.

    • கொட்டில்பாடு குழந்தை ஏசு காலனியில் இருந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது.
    • கல்லறை தோட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    கன்னியாகுமரி:

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு கடலில் ஏற்பட்ட சுனாமி பேரலை கடற்கரை கிராமங்களை புரட்டி போட்டது.

    குமரி மாவட்டத்திலும் சுனாமி ஆழி பேரலை ஏற்படுத்திய கோர தாண்டவத்தில் ஏராளமானோர் பலியானார்கள். குளச்சல் பகுதியில் 414 பேர் சுனாமிக்கு இறந்தனர். அவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. அதே போல் கொட்டில்பாடு மீனவர் கிராமத்தில் பலியான 199 பேர் உடல்களும் ஒரே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன.

    சுனாமியால் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் நினைவு ஸ்தூபிகளும் அமைக்கப்பட்டன. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் 26-ந் தேதி, பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கொட்டில்பாடு பகுதியில் உள்ள நினைவு ஸ்தூபியில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக இன்று காலை கொட்டில்பாடு குழந்தை ஏசு காலனியில் இருந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மவுன ஊர்வலம், நினைவு ஸ்தூபி வரை சென்றது. அங்கு மலர் தூவியும் மலர் வளையம் வைத்தும் ஊர்வலத்தில் வந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து புனித அலெக்ஸ் சர்ச்சில், நினைவு திருப்பலி நடந்தது.

    பங்குத் தந்தை ராஜ் தலைமையில் பங்குந்தந்தைகள் சர்ச்சில், ஜேசுதாஸ், ஜிந்தோ ஆகியோர் திருப்பலியை நடத்தினர். இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொட்டில்பாடு நினைவு ஸ்தூபியில் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபியிலும் இன்று ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பயிற்சி கலெக்டர் குணால் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் சுனாமியால் பலியானவர்களின் நினைவாக இன்று காலை திருப்பலி நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் அங்குள்ள கல்லறை தோட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    • ஆண்டுதோறும் சுனாமி தினத்தை அனுசரிக்கும் வகையில் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • சுனாமி தினமான இன்று வங்க கடலோரம் அமைந்துள்ள வைரவன்குப்பம் மீனவ கிராம கடலோரப் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த, பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் 2004-ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமியால் பலர் உயிர் இழந்தனர். ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது.

    இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் சுனாமி தினத்தை அனுசரிக்கும் வகையில் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி சுனாமி தினமான இன்று வங்க கடலோரம் அமைந்துள்ள வைரவன்குப்பம் மீனவ கிராம கடலோரப் பகுதியில் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு பால்குடம் ஏந்தி வந்து கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி மௌன நிலையில் நின்று கண்ணீர் மல்க பால் குடத்தை கடலில் கரைத்து அஞ்சலி செலுத்தினர்.

    • சுனாமியால் உறவுகளை இழந்தவர்கள் சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
    • பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மீனவர்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

    சென்னை:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலை புரட்டிப்போட்டது.

    இந்தியா உள்பட 14 நாடுகளில் கடலோர பகுதிகளில் வசித்த மக்களையும் கடற்கரைகளுக்கு வேடிக்கை பார்க்க சென்றவர்களையும் திடீரென வந்த ஆழிப்பேரலை வாரிசுருட்டி இழுத்துச்சென்றது. இதில் 14 நாடுகளிலும் சேர்த்து 2½ லட்சம் பேர் பலியானார்கள்.

    தமிழகத்தில் சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகளை துவம்சம் செய்த சுனாமிக்கு 10 ஆயிரம் பேர் பலியானார்கள். இப்படி சுனாமியால் உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்கள் இன்னமும் சோகத்தில் இருந்து மீளாமலேயே உள்ளனர்.

    சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 18-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    தமிழக கடலோர பகுதிகள் முழுவதிலும் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னையிலும் கடற்கரை ஓரங்களில் சுனாமி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. பட்டினப்பாக்கம், காசிமேடு உள்ளிட்ட அனைத்து கடலோர பகுதிகளிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலில் பால் ஊற்றப்பட்டது.

    சுனாமியால் உறவுகளை இழந்தவர்கள் சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மீனவர்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

    இதனால் கடலோர பகுதிகள் இன்று கண்ணீர் கடலாக காட்சி அளித்தது. உதிரி பூக்களை வாங்கி வந்து பலர் கடலில் தூவி மரியாதை செலுத்தினார்கள். மெரினா பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ஊர்வலமாக சென்று மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தி.மு.க. சார்பில் கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மீனவ மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் தாய் இளைய அருணா, ஜே.ஜே.எபினேசர் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் லட்சுமணன், சுற்றுச்சூழல் அணி தீனயாளன், மாவட்ட தலைவர் வெற்றி வீரன், ஆர்.வி.கணேஷ் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை பகுதியான காசிமேடு கடற்கரையில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதே போன்று மற்ற அரசியல் கட்சி தலைவர்களின் சார்பிலும் கடலோர பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு குமரி மாவட்டத்தில் நினைவு தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது.
    • ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த நிலையில் சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்.

    தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

    பெரும்பாலும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், சில நேரங்களில் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

    இந்தநிலையில், சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது.

    நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.

    சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த நிலையில் சாலமன் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பில் பாதாள சாக்கடை கசிந்து கழிவுநீர் வீதிகளில் 5 நாட்களாக ஓடியது.
    • பொதுப்பணிதுறை ஊழியர்களுக்கு மதன் பாபு மற்றும் ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பில் பாதாள சாக்கடை கசிந்து கழிவுநீர் வீதிகளில் 5 நாட்களாக ஓடியது.

    இதனை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் தி.மு.க. பொதுமக்கள் சேவை மையம் நிர்வாகி மதன் பாபுவிடம் கோரிக்கை வைத்தனர்

    இதனையடுத்து பொதுப்பணிதுறை பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் வாகனத்தை வைத்து மதன்பாபு சீரமைத்தார். பொதுப்பணிதுறை ஊழியர்களுக்கு மதன் பாபு மற்றும் ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. #Earthquake #PhilippinesEarthquake #MindanaoIsland
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.2 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முதலில் தெரிவித்தது. அதன்பின்னர் 6.9 ரிக்டர் என தெரிவிக்கப்பட்டது.

    ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 59 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதனை ஒட்டியுள்ள பசிபிக் கடற்பகுதியில் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நிலநடுக்க பகுதியில் இருந்து 300 கிமீ தொலைவிற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்பகுதியில் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. ஆனால், அதனை ஒட்டியுள்ள அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Earthquake #PhilippinesEarthquake #MindanaoIsland
    கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு தூணில் பல்வேறு தரப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். #Tsunami #MemorialDay
    கடலூர்:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.

    இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரை யோரம் வசித்து வந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, கிள்ளை, பரங்கிப்பேட்டை, அன்னங்கோயில், புதுகுப்பம் எம்.ஜி.ஆர். திட்டு, பில்லுமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சுனாமி பேரலை தாக்கியது.

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களை கடல் அலை இழுத்துசென்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுனாமியின் கோரத்தாண்டவத்தில் 610 பேர் உயிரிழந்தனர்.

    மேலும் 7 ஆயிரம் கட்டு மரங்கள், பைபர் படகுகள், விசைப்படகுகள், 4 ஆயிரம் மீன்பிடி வலைகள், 650 ஹெக்டேர் நிலங்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் சேதமடைந்தது.

    சுனாமி பேரலை தாக்கி 14-வது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்று சுனாமியால் பலியானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்தது.

    தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி அருகே மீனவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கடற்கரைக்கு கண்களில் கண்ணீரையும், நெஞ்சத்தில் சோகத்தையும் சுமந்தபடி ஆண்கள், பெண்கள் மவுன ஊர்வலமாக பூக்கூடைகளையும், பால் குடங்களையும் ஏந்தியபடி கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் கண்ணீர் மல்க கடலில் பாலை ஊற்றி, கூடைகளில் கொண்டுவந்த பூக்களை கடலில் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    அப்போது இறந்தவர்களை நினைத்து பெண்கள் கதறித்துடித்தனர். இது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் உள்ளது. அங்கு பல்வேறு தரப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கடலூர் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் அந்தப் பகுதி மீனவர்கள் சுனாமி நினைவு தினம் அனுசரித்தனர். இதையொட்டி தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். பெண்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு தினத்தையொட்டி இன்று மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.

    விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், கூனிமேடு, கூனிமேடுகுப்பம், அனுமந்தைகுப்பம், எக்கியார்குப்பம், கீழ்புத்துபட்டு குப்பம் உள்பட 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுனாமி தாக்கியபோது ஏராளமானோர் பலியானார்கள்.

    இதையொட்டி இன்று மரக்காணம் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மீனவர்கள் கடல் பகுதிக்கு சென்று பால் ஊற்றினர். பின்பு கடலில் மலர் தூவி கண்ணீர்அஞ்சலி செலுத்தினர். சுனாமியில் இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர்.

    சுனாமியின்போது காரைக்கால் பகுதியில் உள்ள பட்டனம்சேரி, கீழ் தான்குடி உள்பட 11 கிராமங்களில் உள்ள 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியானார்கள். அவர்களின் நினைவாக கடற்கரையில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

    சுனாமி தினத்தை யொட்டி கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் கலெக்டர் கேசவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதன்பின்பு சுனாமியின்போது இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நன்டலாறு, பட்டினச் சேரி ஆகிய பகுதிகளில் அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது பல பெண்கள் கதறி அழுதனர். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது. #Tsunami #MemorialDay

    ×