என் மலர்
நீங்கள் தேடியது "philliphines"
- பிலிப்பைன்சில் சுங்கச்சாவடி அருகே வாகனங்கள் வரிசையாக நின்றன.
- அந்த வாகனங்கள் மீது ஒரு பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.
மணிலா:
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
டார்லாக் நகரில் உள்ள சுங்கச்சாவடி அருகே பஸ் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பஸ் முன்னால் வரிசையில் நின்ற ஒரு கார் மீது மோதியது.
இந்த சங்கிலித் தொடர் விபத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது 2 பஸ்களுக்கு இடையில் ஒரு மினி வேன் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த வேனில் இருந்த குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதேபோல், நடுவில் சிக்கிக் கொண்ட ஒரு காருக்குள் இருந்த தம்பதியும் உடல் நசுங்கி பலியாகினர்.
காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் வலியில் அலறி துடித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலநடுக்கம் 63 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் வெளியாகவில்லை.
பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் இன்று 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 63 கிமீ ஆழத்தில் இருந்ததாகவும், நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் வெளியாகவில்லை.
கடந்த மாத தொடக்கத்தில், தெற்கு பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
நவம்பர் 17 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சாரங்கனி, தெற்கு கோடாபாடோ மற்றும் டாவோ ஒக்சிடென்டல் மாகாணங்களில் இறப்புகள் பதிவாகின. அதே நேரத்தில் 13 பேர் காயமடைந்தனர். இது ஏராளமான மக்களை பீதிக்குள்ளாக்கியது மற்றும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமானது.






