search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "travel"

    • சில பஸ்களில் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வார்கள்.
    • வேனுக்குள் அளவுக்கு அதிக சத்தமாக பாடல்களை ஒலிக்க செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இங்கு மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பின்னர் அரசு பஸ்களில் ஏறுவதற்காக மாணவிகள் கூட்டம் அலைமோதும். அப்போது சில பஸ்களில் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வார்கள். இதை யடுத்து அங்கு போலீசார் நிறுத்தப்பட்டு பஸ்சுக்குள் ஏறி சென்று பயணிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதே நேரத்தில் பஸ்களில் கூட்டம் அதிக மாக இருப்பதாலும், குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாலும் தென்காசி மாவட்டத்தில் இருந்து வரும் மாணவிகள் தனியார் வேன்களில் வந்து செல்கின்றனர். அவ்வாறு மாணவிகளை ஏற்றி வரும் வேன்கள் மிகுந்த வேகத்து டன் வருவதாகவும், வேனுக்குள் அளவுக்கு அதிக சத்தமாக பாடல்களை ஒலிக்க செய்வதாகவும் சமூக ஆர்வ லர்கள் புகார் கூறுகின்றனர்.

    மேலும் வேனுக்குள் போதிய இருக்கைகள் உள்ள போதிலும் மாணவி கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யாமல், படிக்கட்டுகளில் நின்று கொண்டும், பாடல்களுக்கு ஆடிக்கொண்டும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். எனவே மாணவிகளை ஏற்றி செல்லும் வாகன ங்களின் டிரைவர்கள், மாணவிகளை இருக்கையில் அமரச்செய்து கல்லூரிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேசிய அளவிலான தேக்வோண்டோ போட்டி நடைபெற்றது.
    • அமிர்தா ஆச்சார்யா பொறியியல் கல்லூரி, மற்றும் சிராக் ராகவேந்திரா ஆகியோர் தேர்வாகி தேசிய போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

    புதுச்சேரி:

    40-வது தேசிய ஜூனியர் தேக்வோண்டோ குறுகி மற்றும் 13-வது தேசிய பூம்சே போட்டிகள் கர்நாடக மாநிலம் சிமோகாவில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் 3 நாட்கள் நடைபெறுகிறது.

    இப்போட்டி புதுவை விளையாட்டு நலத்துறை மற்றும் பாண்டிச்சேரி ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தால் நடந்து முடிந்த மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற ஜூனியர் மாணவ-மாணவிகள் முறையே தேர்ந்தெடுக்கப்பட்ட சிவபிரசாத் அமலோற்பவம் பள்ளி, ரமணன் சங்கர வித்யாலயா பள்ளி, பீஷ்மர் மற்றும் பிரவீன் குமார் வாசவி இண்டர்நேஷனல் பள்ளி, மனோஜ் வித்யா நிகேதன் பள்ளி, ஹேமச்சந்திரன் மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரி, அகல்யா மற்றும் வைஷ்ணவி சவராயலு நாயக்கர் பள்ளி, பிருந்தா செவன்த்டே பள்ளி, மிஸ்ரா சுசிலாபாய் பள்ளி, அமிர்தா ஆச்சார்யா பொறியியல் கல்லூரி, மற்றும் சிராக் ராகவேந்திரா ஆகியோர் தேர்வாகி தேசிய போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

    சர்வதேச பயிற்சியாளர் பகவத்சிங் தலைமை பயிற்சியாளராகவும், கீர்த்தனா மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் பயிற்சியாளர்களாகவும் தக்ஷிணபிரியா அரவிந்த் செல்வன் ஆகியோர் தேசிய நடுவர்களாகவும் உடன் செல்கின்றனர்.

    புதுவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற வழி அனுப்பும் விழாவில் புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தின் நிறுவனத் தலைவர் மாஸ்டர் ஸ்டாலின் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி பேசி உபகரணங்கள் வழங்கி வழி அனுப்பி வைத்தார் உடன் பொதுச் செயலாளர் மஞ்சுநாதன் பொருளாளர் அரவிந்த், அமைப்பு செயலாளர் நந்தகுமார், மற்றும் சங்க நிர்வாகி மதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • காலை 10.45 மணிக்கு பதிலாக 55 நிமிடங்கள் முன்னதாக காலை 9.50 மணிக்கு புறப்படும்.
    • பகல் 12.30 மணிக்கு பதிலாக 50 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும்.

    தஞ்சாவூர்:

    திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு முன்பதிவு இல்லா விரைவு ரெயில் (வண்டி எண்: 06880) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை முதல் ( திங்கள் கிழமை ) திருச்சியிலிருந்து வழக்கமாக காலை 10.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 55 நிமிடங்கள் முன்னதாக காலை 9.50 மணிக்கு புறப்படும்.

    இந்த ரெயில் காரைக்காலுக்கு பிற்பகல் 3 மணிக்குப் பதிலாக, 2.05 மணிக்கு சென்றடையும்.

    அதேபோல காரைக்காலில் இருந்து தஞ்சாவூருக்கு இயக்கப்படும் முன்பதிவு இல்லா விரைவு ரெயில் (வண்டி எண்: 06457) நாளை ( திங்கள் கிழமை) முதல் வழக்கமாக பகல் 12.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும்.

    மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • மாடலாக முடிவெட்டி இருந்தால் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறுவோம் என விழிப்புணர்வு செய்தனர்.

    சென்னை:

    சென்னையில் பள்ளி செல்லும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யாதிருத்தல் மற்றும் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்து போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர்.

    புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் சாலையில் வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் போலீசார் சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வர வேண்டும். படிக் கட்டில் பயணம் செய்யக் கூடாது. ஸ்டைலாக முடி வைக்க கூடாது. பெற்றோருக்கும், பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் நோக்கில் நன்கு படிக்க வேண்டும்.

    உலகில் ஒருவருக்கு பெரிய சொத்து என்பது கல்விதான். எனவே கல்வியை நன்றாக கற்க வேண்டும்.

    மாடலாக முடிவெட்டி இருந்தால் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறுவோம் என விழிப்புணர்வு செய்தனர். போலீசாரின் இந்த முயற்சிக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் பாராட்டினர்.

    • விழிப்புணர்வு நடை பயணத்தை அமைச்சர்கள் மூர்த்தி, மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்.
    • அரிய வகை உயிரினங்கள் இந்த பகுதியில் உள்ளன.

    மதுரை

    மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் இடையபட்டி தெற்கு பகுதி அம்முர் உள்ளடக்கிய வெள்ளிமலை ஆண்டவர் கோவில் பகுதியில் சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளை முன்னிட்டு இயற்கை நடைபயணம் நடந்தது. இதனை அமைச்சர்கள் மூர்த்தி, மதிவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    இந்த நடை பயணத்தில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், ஒன்றிய தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர் கலாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் நாளை (22-ந் தேதி) சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாக கடைப்பிடிக் கப்படுகிறது. அதனை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை ஒவ்வொரு ஆண்டும் பல்லுயிர் வாழும் இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு இடைய பட்டியை தேர்வு செய்து இங்கு இந்த விழிப்புணர்வு பயணத்ைத நடத்துகிறோம். இது கடம்ப மரம் உள்ளிட்ட பல மரங்கள் கொண்ட சமவெளி காடு ஆகும்.

    இங்கே பல்லுயிர்கள் இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த நடை பயணத்தை தொடங்கி உள்ளோம். இந்த பகுதியில் பல்வேறு மரங்கள், மூலிகை செடிகள் மற்றும் தேவாங்கு உள்ளிட்ட பல்லுயிர்கள் வாழுகின்ற இடமாக இருக்கிறது.

    தமிழ்நாட்டில் சமவெளி காட்டில் கடம்பவனம் என்பது குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் தான் இருக்கிறது. இங்கு கடம்ப மரம் மட்டுமின்றி உசிலை, குறுந்தம், நெய் குறுந்தம், பூவந்தி போன்ற மரங்களும் இருக்கிறது. இங்கு மருத்துவ குணம் கொண்ட காந்தன், விருது விராலி, மருள், சிறு குஞ்சன் போன்ற மூலிகை செடிகளும் உள்ளன.

    இது தவிர தேவாங்கு, முள் எலி, எறும்புத்தின்னி, புள்ளிமான், காட்டுப்பன்றி போன்ற அரிய வகை உயிரினங்களும் இந்த பகுதியில் உள்ளன.

    எனவே இந்த பகுதியை பாதுகாக்க வேண்டும். இதில் உள்ள முக்கியத்துவம் கருதி இங்குள்ள காட்டு பகுதிகள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும், இங்குள்ள நீர் நிலைகள், மரங்கள், பூச்சிகள் எல்லாமே நாம் வாழுகின்ற உலகத்தில் அனைத்து உயிர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் கூட்ரோடு அருகே சென்ற போது எதிரே வந்த கார் பஸ் மீது மோதியது.
    • இதில் பஸ்சில் பயணம் செய்த புதுவை சுத்திக்கேணி பகுதியைச் சேர்ந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    விழுப்புரம்:

     செஞ்சியில் இருந்து நேற்று காலை அரசு பஸ் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ் கடலாடி குளம் கூட்ரோடு அருகே சென்ற போது எதிரே திருவண்ணா மலை யில் இருந்து செஞ்சி நோக்கி வந்த கார் பஸ் மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த புதுவை சுத்திக்கேணி பகுதியைச் சேர்ந்த சிவபெருமான் மகன் கல்விக்கரசன் (வயது 26) சிவபெருமான் மனைவி ஆதிலட்சுமி வயது( 50), அன்பரசன் மகன் தனிய ரசன் (வயது 30)மண்ணாங் கட்டி மகன் செல்வகுமார் (வயது 43) செல்வகுமார் மனைவி கவுசல்யா (வயது 35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காரில் வந்தவர்கள் திருவண்ணா மலையில் கிரிவலம் முடித்துக் கொண்டு மீண்டும் புதுவைக்கு திரும்பும்போது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை செய்து வருகி றார்கள்.

    • மதுரையில் இருந்து 50 வாகனங்களில் 1500 பேர் பயணம் செய்தனர்.
    • மாநில தலைவர் முத்துக்குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் 40-வது வணிகர் தின விழாவை முன்னிட்டு நாளை (5-ந் தேதி) சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.ஜி.பி. தங்க கடற்கரையில் சுதேசி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் நான் (மைக்கேல்ராஜ்) தலைமை தாங்குகிறேன். சங்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில தலைவர் முத்துக்குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து நாளை காலை 9.30 மணிக்கு கலைநிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து சுதேசி விழிப்புணர்வு மாநாடு கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நலத்திட்ட உதவி களை வழங்கி பேசுகிறார். இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னையில் நடக்கும் இந்த மாநாட்டில் மதுரை மண்டலத்தின் சார்பில் நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்கராஜ், சில்வர் சிவா, குட்டி என்ற அந்தோணி ராஜ், ஸ்வீட் ராஜன், ஜெயக்குமார், தேனப்பன், வக்கீல் கண்ணன், , சுருளி, ஆன்ந்த், அப்பாஸ், ராமர், கரன்சிங், வாசுதேவன், மூங்கில் கடை ரவி, பிச்சைப்பழம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை மண்டலத்தில் இருந்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் 50 வாகனங்களில் 1500-க்கும் மேற்பட்டோர் இன்று மாலை மாநாட்டிற்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • ரெயிலில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.
    • ரெயில் நிலையங்களில் ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் வேதார ண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் போக்குவரத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது. மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக ரூ.480 கோடி மதிப்பீட்டில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    அதனை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் மணீஷ் அகர்வால், செல்வராஜ் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து, ஓ.எஸ் மணியன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், நகராட்சி தலைவர் கவிதா பாண்டியன், வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் அகஸ்தியம்பள்ளிக்கு புறப்பட்ட ரெயிலுக்கு கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர். அந்த ரெயிலில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.

    கரியாப்பட்டினம், குரவப்புலம், தோப்புத்துறை, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி ஆகிய ரெயில் நிலையங்களில் ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அந்தந்த ரெயில் நிலையங்களில் இனிப்பு வழங்கப்பட்டது.இந்த ரெயிலானது, தினசரி காலை 6 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு 6.45 மணிக்கு அகஸ்த்தியம் பள்ளியையும், மீண்டும் காலை 7 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டியை காலை 7.45 மணிக்கும் வந்தடையும். அதேபோல், மாலை 6 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்தும், மீண்டும் 7 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்தும் இந்த இயக்கப்படுகிறது.

    • மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை இருந்தது.
    • வடரெங்கம் வழிதடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியிலிருந்து கொண்டல் வழியாக வடரெங்கத்திற்கு 2 நகர அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது.இதனிடையே பள்ளி நேரங்களில் பேருந்துகளில் அதிகளவு பயணிகள், மாணவர்கள் பயணம் செய்யும் நிலையால் மாணவர்கள் பேருந்து படிகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை இருந்தது.

    இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சீர்காழி கிளை மேலாளர் வடிவேல் உத்தரவின்படி வடரெங்கம் கிராமத்திற்கு பள்ளி நேரத்தில் கூடுதல் அரசுபேருந்து இயக்கப்பட்டது.

    சென்னை மற்றும் புறநகர் செல்லும் மாற்று பேருந்துகளை வடரெங்கம் வழிதடத்தில் இயக்கி மாணவ -மாணவிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதுள்ளது.

    • மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர்.
    • பஸ்கள் சரியான நேரத்தில் வராததால் மாணவர்கள் கடும் அவதி.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினத்திற்கு இடைப்பட்ட ஊர்க ளான முதல்சேரி, பள்ளிக்கொ ண்டான், சேண்டாக்கோட்டை, மாளியக்காடு போன்ற பகுதிகளில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தினமும் தங்கள் அத்தியாவசிய தேவைக்கா கவும், பணி நிமித்தமாகவும் பட்டுக்கோட்டைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்ல இடைநில்லா பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மேற்கண்ட கிராமங்களில் நின்று செல்வதில்லை.

    இதனால் அந்த கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர்.

    அந்த பஸ்களும் சரியான நேரத்தில் வராததால் மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இடைப்பட்ட ஊர்களில் நின்று செல்லும் வகையில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன.
    • கோடையில் பெரும்பாலும் கடற்கரைகள் கவர்ச்சிகரமாக தெரியாது.

    சுற்றுலா பயணங்களை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா விளங்குகிறது. மலைகள், குன்றுகள், பசுமை படர்ந்த மலைக்காடுகள், பரந்து விரிந்த கடற்கரைகள் என இயற்கையின் அத்தனை அழகியல் அம்சங்களையும் தாங்கி நிற்கிறது. அதில் கோடை காலத்தில் இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. அவை வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள உதவுவதோடு மறக்கமுடியாத நினைவுகளையும் மனதில் பதிய வைக்கக்கூடியவை. குளிர்ச்சியான சூழலை உணரவைத்து மனதை குதூகலிக்க வைத்துவிடும். அத்தகைய சில இடங்கள் உங்கள் பார்வைக்கு...

    டார்ஜிலிங்: இயற்கையின் சொர்க்கபுரி

    மேற்கு வங்காளத்தில் அமைந்திருக்கும் டார்ஜிலிங், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரபலமான கோடை வாசஸ்தலமாகும். கடல் மட்டத்தில் இருந்து 8,586 மீட்டர் உயரம் கொண்ட கஞ்சன் ஜங்கா மலைச்சிகரம் கம்பீரமான தோற்றத்துடன் கவர்ந்திழுக்கும். திரும்பிய பக்கமெல்லாம் பச்சை பசேல் என படர்ந்திருக்கும் தேயிலை தோட்டங்கள் எழுப்பும் வாசம் திக்குமுக்காட செய்துவிடும். தேயிலை பானங்களை விரும்பாதவர்கள் கூட அதனை ருசித்து பார்ப்பதற்கு ஆர்வமாகிவிடுவார்கள். இயற்கையின் சொர்க்கபுரியாக விளங்கும் இங்கு சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. இயற்கை நேசர்களுக்கு பிரியமான இடமாக இது விளங்குகிறது.

    அந்தமான் மற்றும் நிக்கோபார்:

    கடற்கரை கொண்டாட்டம் கோடையில் பெரும்பாலும் கடற்கரைகள் கவர்ச்சிகரமாக தெரியாது. அங்கு காலை, மாலை வேளைகளில் இதமான சூழல் நிலவும். மதிய வேளையில் அனல் காற்று வீசக்கூடும். கோடை காலத்தில் பெரும்பாலும் மாலை வேளைகளில்தான் கடற்கரை காற்றை நுகர்வதற்கு பலரும் விரும்புவார்கள். ஆனால் வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் இந்த எண்ணம் நிச்சயமாக மாறிவிடும். சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்தும் சாகச விளையாட்டுகள் அங்கு ஏராளம் இருக்கின்றன. மணற்பாங்கான கரையோரங்களில் வெயிலை மறந்து ஓய்வெடுக்க தூண்டும் காலநிலை அங்கு நிலவும். நீர்நிலைகள், வெப்பமண்டல மழைக்காடுகள் மற்றும் வரலாற்றுத் தலங்கள் என ஆராய்வதற்கும், பொழுதை போக்குவதற்கும், கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்கும் ஏற்ற இடமாக அந்தமான், நிக்கோபார் தீவுகள் அமைந்திருக்கின்றன. வெப்பமண்டல கால நிலையில் விளையும் பழங்கள் மற்றும் இளநீரை சுவைத்துக்கொண்டே கடற்கரை அழகை ரசித்தபடி கோடை விடுமுறையை அனுபவித்துவிட்டு வரலாம்.

    மணாலி:

    பனி மூடிய மலைகள் இந்தியாவின் பிரபலமான கோடை கால இடங்களில் ஒன்றாக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலி விளங்குகிறது. இங்கு நிலவும் கால நிலையும், இயற்கை அழகும், சாகச பயணங்களும் கோடை விடுமுறையை மறக்க முடியாத நாட்களாக மாற்றிவிடும். இந்த அழகிய நகரம் பனி மூடிய மலை சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. கோடையை குளிர்ச்சியான சூழலில் கொண்டாட காரணமாக அமைந்திருக்கிறது. அங்கு ஓடும் பியாஸ் நதி பசுமை படர்ந்த சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. மலையேற்றம், ரிவர் ராப்டிங், பாராகிளைடிங், சோர்பிங் உள்பட அனைத்து வகையான சாகச அனுபவங்களையும் ஒரே இடத்தில் அனுபவித்து விடலாம். பனிகளுக்கு மத்தியில் உற்சாகமாக விளையாடி பொழுதை இனிமையாக கழிக்கலாம்.

    ஹெலி டூரிசம் தொடங்கிய முதல் 2 நாட்கள் விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகளுக்கு இலவசமாக ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
    சிக்கமகளூரு :

    கர்நாடகத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹம்பி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெலி டூரிசம் அமைக்கப்பட்டுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் ஹெலி டூரிசம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹெலி டூரிசம் தொடங்கிய முதல் 2 நாட்கள் விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகளுக்கு இலவசமாக ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    அதன்படி அப்பகுதி விவசாயிகள், ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணித்து சுற்றுவட்டார பகுதிகளை கண்டு களித்தனர். 2-வது நாளான நேற்றும் ஏராளமானோர் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். இந்த 2 நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 2.30 மணி வரை ஹெலிரைடு நடத்தப்பட்டது. சுமார் 200 விவசாயிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பறந்து சென்றனர்.

    அதேபோல் வாணிவிலாஸ் அணைக்கட்டில் இலவச படகு சவாரியும் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒசநகர் தொகுதி எம்.எல்.ஏ. கூலிகட்டி சேகர் செய்திருந்தார். இதைதொடர்ந்து வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணத்துடன் ஹெலிரைடு நடத்தப்பட உள்ளது.
    ×