search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trash"

    • நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற, சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் விஜயகுமார் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
    • கோம்பு பள்ளம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற, சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் விஜயகுமார் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோம்பு பள்ளம் பகுதியில் உள்ள குடியிருப்பு, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட வணிக நிறுவனத்தார் குப்பைகளை கோம்பு பள்ளத்தில் கொட்டி வருவதால் அடிக்கடி கழிவுநீர் செல்ல தடை ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி பொக்லின் மூலம் அகற்றப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் கோம்பு பள்ளம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் இங்கு குப்பை கொட்டுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மக்கும் குப்பைகளைக்கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்க மக்கும் குப்பைகளை பிரிப்பதற்கு எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
    • கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உபதலை ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

    ஊட்டி:

    உபதலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சுமார் 27.25 லட்சம் மதிப்பீட்டில் மக்கும், மக்காத குப்பைகளை பிரிக்க கூடாரம் அமைத்து மக்கும் குப்பைகளைக்கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்க மக்கும் குப்பைகளை பிரிப்பதற்கு எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த எந்திரத்தின் சோதனை ஒட்டம் தொடங்கியது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், உதவியாளர் ஜெயந்தி, தூய்மைபாரத ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், ஊராட்சி செயலாளர் சுரேஷ்குமார், உபதலை ஊராட்சிமன்ற தலைவர் சி.பாக்கியலட்சுமி சிதம்பரம் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    அனைத்து வார்டு உறுப்பினர்களையும் தூய்மை காவலர்களையும் அழைத்து எந்திரத்தை இயக்கி, கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உபதலை ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

    • மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வுகளை கலைக்குழுவினர் செய்து காண்பித்தனர்.
    • மக்காத குப்பையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எமன் வேடம் அணிந்த ஒருவர் செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொ) ராஜகோபாலன், நகர் மன்றத் துணைத் தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், நகர்மன்ற உறுப்பினர்கள் முபாரக், பாஸ்கரன், ஜெயந்திபாபு, கஸ்தூரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வுகளை கலைக்குழுவினர் செய்து காண்பித்தனர். மேலும் மக்காத குப்பையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எமன் வேடம் அணிந்த ஒருவர் செயல் விளக்கம் செய்து காண்பித்தார். முன்னதாக நகர்மன்றத் தலைவர் துர்கா ராஜசேகரன் சிறப்புரையாற்றினார். இதில் நகராட்சி பணியாளர்கள், மகளிர் குழுவினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆவடி நகராட்சி பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது.

    ஆவடி:

    ஆவடி நகராட்சியில் ஆவடி, பருத்திப்பட்டு, விளிஞ்யம்பாக்கம், திருமுல்லைவாயல், தண்டுரை, சேக்காடு, அண்ணனூர், பட்டாபிராம், கோவில்பாதாகை, மிட்டின மல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகள் உள்ளன.

    இங்கு சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் நகராட்சி பகுதிகளில் சுமார் 140 டன் குப்பைகள் சேர்கின்றன.

    இவ்வாறு நகராட்சி முழுவதும் 4200டன் குப்பைகள் மாதந்தோறும் சேருகின்றன. குப்பைகளை 170 நகராட்சி ஊழியர்கள் மற்றும் 700 ஒப்பந்த ஊழியர்கள் அள்ளி வருகின்றனர். மேலும், அந்த குப்பைகளை ஊழியர்கள் சேக்காட்டில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நகராட்சி பகுதிகளில் குப்பைகள் சரி வர அள்ளப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “முக்கிய சாலைகள், தெருக்களில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. பல இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து வழிகிறது.

    அந்த குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் சிதறி கிடக்கின்றன. அச்சாலைகளில் வேகமாக வாகனங்கள் செல்லும் போது குப்பைகள் காற்றில் பறந்து கடைகள், வீடுகளுக்குள் விழுகிறது.

    சாலை, தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகிவருகிறது.

    தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சிய போக்கால் ஆவடி நகராட்சி பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் மெத்தனமாகவே உள்ளனர். இது தொடர்பாக பொது நலச்சங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல முறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை.

    எனவே, நகராட்சி உயர் அதிகாரிகள் குப்பைகளை உடனுக்குடன் அள்ளவும், சுகாதார சீர்கேட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    எஸ்.பட்டினம் ஊராட்சியில் தெருக்களில் தேங்கிக்கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    தொண்டி:

    திருவாடானை யூனியன் எஸ்.பி.பட்டினம் ஊராட்சியில் 9 வார்டுகளும், 25-க்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. இங்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் அடிப்படை சுகாதாரம் பாதுகாக்கப்படாத நிலையில் தொற்று நோய்களின் பிறப்பிடமாக இருந்து வருகிறது.

    இதனால் அடிக்கடி டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்புகளுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முகமது முக்தார் கூறியதாவது:- திருவாடானை யூனியனில் எஸ்.பி.பட்டினம் ஊராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். இதனால் இங்கு அதிகஅளவில் குப்பைகள் சேருவது வழக்கம். இந்த குப்பைகளை சேகரிக்க தினமும் துப்புரவு பணியாளர்கள் வீதி வீதியாக சென்றால் பொதுமக்கள் தெருவில் கொட்டாமல் பணியாளர்களிடம் கொடுப்பார்கள்.

    ஆனால் இந்த ஊராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததுடன் குப்பைகளை சேகரிக்க வாகனங்களும் இல்லாமல் உள்ளது. இதனால் தூய்மை காவலர்கள் இங்குள்ள குப்பைகளை சேகரிக்க வாரம் ஒரு முறைதான் ஒரு வீதிக்கு வருகின்றனர். இதன் காரணமாக வீடுகளில் சேரும் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி விடுகின்றனர். குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டிய ஊராட்சி நிர்வாகம் அதனை சரியாக செய்வதில்லை.

    இனிமேல் அதிகாரிகளை நம்பி பயனில்லை என்பதால் எஸ்.பி.பட்டினத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்துவரும் பொது நல சங்கங்கள் மூலம் குப்பைகளை சேகரித்து அப்புற படுத்தவும், பொதுசுகாதாரத்தை பாதுகாக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம். மாவட்ட கலெக்டர் எஸ்.பி.பட்டினத்திற்கு நேரில் வந்து இங்குள்ள அடிப்படை சுகாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    தமிழக வனப்பகுதியில் குப்பைக்கழிவுகளை கொட்டிய கேரள கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் குமுளி மலைச்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கம்பம் மேற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் அதிக அளவு குப்பைக் கழிவுகள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பொதுமக்களிடம் விசாரித்த போது கேரள பகுதியான குமுளியில் ஏராளமான ஓட்டல், லாட்ஜ்கள் உள்ளன. இங்கிருந்தும் குடியிருப்பு பகுதியில் இருந்தும் அதிக அளவு குப்பைகளை தமிழக வனப்பகுதியில் கொட்டிச் செல்வதாக ஆதங்கம் தெரிவித்தனர். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட எஸ்.பி. உத்தரவிட்டார்.

    அதன்படி தனிப்படை போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறம் வனப்பகுதியில் 2 பேர் குப்பைகளை கொட்டியுள்ளனர்.

    அவர்களை மடக்கி பிடித்த போலீசார் விசாரித்ததில் அந்த நபர்கள் குமுளியைச் சேர்ந்த வர்க்கீஸ் (வயது 53), ரபீக் (20) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்து வருகின்றனர்.

    குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

    கடற்கரையில் குப்பைகளை வீசினாலோ, பொது இடத்தில் சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்க நேரிடும் என்று கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். #PondicherryGovernor #Kiranbedi

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி விட்டு செல்கின்றனர். அவ்வாறு வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பாறை குவியல்களுக்குள் சிக்கி கொள்கின்றன.

    மேலும் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் (கேரி பேக்குகள்) காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் கலக்கிறது.

    அதோடு கடற்கரை பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கலந்து அலங்கோலமாக காட்சி அளிப்பது அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. இதனால் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி நேற்று அதிகாலை கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடற்கரை சாலை முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக துப்புரவு தொழிலாளர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை வரவழைத்து துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து 3 மணி நேரம் கவர்னர் கிரண்பேடி துப்புரவு தொழிலாளர்களுடன் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    புதுவையில் தூய்மை, பாதுகாப்பு, பராமரிப்புக்காக கடற்கரையில் இனி கூடுதலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரையில் கூடுதலாக ஸ்வட்ச் பாரத் துப்புரவு தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.

    கடற்கரையில் குப்பைகளை வீசாமல் இருக்க, ரோந்து செல்லும் போலீசார் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்வார்கள். அதனையும் மீறி குப்பைகளை வீசினாலோ, பொது இடத்தில் சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்க நேரிடும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #PondicherryGovernor #Kiranbedi
    எவரெஸ்ட் சிகரத்தில் ஆண்டுதோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. #Everest #Trash
    காட்மாண்டு:

    இமயமலைத்தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரம் கொண்டது. உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் என்ற பெருமையை பெற்ற இதன் உச்சியில் கால்பதிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்கள் சிகரத்தில் ஏறி வருகின்றனர். இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஆண்டுதோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.



    வீரர்கள் தங்குவதற்கான கூடாரங்கள், ஏறுவதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மனித கழிவுகள் குப்பைகளாக எவரெஸ்ட் சிகரத்தை ஆக்கிரமித்து உள்ளன.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகளை அகற்ற முடிவு செய்த நேபாள அரசு அதற்காக நவீன யுக்தியை கையாண்டது. அதாவது மலையேற்றம் செல்லும் குழுவினர் சுமார் ரூ.2,64,000-ஐ வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். பின்பு சிகரத்தில் இருந்து கீழே இறங்கும்போது ஒவ்வொரு வீரரும் தலா 8 கிலோ குப்பைகளை தன்னுடன் எடுத்து வந்து செலுத்திய தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம்.

    இதன்படி கடந்த ஆண்டு மட்டும் சுமார் 25 டன் குப்பைகளும், 15 டன் மனித கழிவுகளும் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டது.

    இந்த ஆண்டும் மலையேற்ற வீரர்கள் டன் கணக்கில் குப்பைகளை கீழே கொண்டு வந்தாலும் சிகரத்தில் தொடர்ந்து குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு கவலை தெரிவித்துள்ளது.  #Everest #Trash
    கூடலூர் பகுதியில் அகற்றப்படாத குப்பையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கூடலூர்:

    கூடலூர் நகராட்சி பகுதியில், பொதுமக்கள் பயன்படுத்திய குப்பை கழிவுகள், கழிவுப் பொருட்கள், தெருக்களில் இருந்து அள்ளப்படும் சாக்கடை கழிவுகள், இறைச்சிக்கழிவு, காய்கறி கழிவுகள் அனைத்தும் துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காகுப்பை என தரம் பிரித்து நகராட்சி டிராக்டர், மற்றும் மூன்று சக்கர சைக்கிள்களில் எடுத்துச் சென்று பெத்துக்குளம் பகுதியிலுள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு காலியிடமாகக் கிடந்த பெத்துக்குளம் சுற்றுப்பகுதி தற்போது காந்திகிராமம், சவுடம்மன் கோவில் தெருப்பகுதி, புதுக்குளம் முருகன் கோவில் பகுதி என குடியிருப்புப் பகுதிகளாக மாறியுள்ளது. பலஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் இங்கு மலைபோல் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

    எனவே குப்பை கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் செய்ததால் நகராட்சி அதிகாரிகள் கூடலூர் பெருமாள்கோவில் புலம் பகுதியில் குப்பை கொட்டும் வகையில் 5 ஏக்கர் தரிசுநிலத்தை தேர்வு செய்தனர். ஆனால் இப்பகுதியில் குப்பை கொட்டினால் விளைநிலங்கள் மாசுபடும்.

    பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குப்பை கழிவுகள் கம்பம் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழைபெய்து வருவதால் குப்பை கிடங்கிற்கு உள்ளே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடலூரிலிருந்து கம்பத்தில் கொண்டுவந்து குப்பைகள் கொட்ட கம்பம் நகராட்சி அனுமதி மறுத்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கூடலூர் நகர் பகுதியில் சேகரமாகி உள்ள குப்பைக்கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கிறது. இதனால் தெருப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு நோய்பரவும் அபாயமும் ஏற்பட்டள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இவ்வி‌ஷயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கூடலூரில் கர்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டிய மருந்து குப்பையில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவு இருந்தும் டாக்டர்கள் வராத காரணத்தால் அது நடைமுறையில் இல்லாமல் உள்ளது. பெரும்பாலான டாக்டர்கள் தங்கள் கிளீனிக்கிலேயே இருந்து விடுகின்றனர். வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போட்டு மற்ற நாட்களில் வரும் நோயாளிகளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுகின்றனர்.

    இதனிடையே 8-வது வார்டு நடுத்தெரு பகுதியில் கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்புக்கரைசல் மருந்து ஏராளமான அளவு குப்பையில் வீசப்பட்டு இருந்தது.

    இந்த மருந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் இலவச கரைசல் ஆகும். அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய காலத்தில் வழங்கப்படாமல் காலாவதியாகி விட்டதால் அவை குப்பையில் வீசப்பட்டு இருந்தன. இந்த மருந்துகளின் பயன்பாடு கடந்த பிப்ரவரி மாதத்திலேயே முடிந்து விட்டது. உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு வழங்காமல் வீணாக குப்பையில் வீசப்பட்டதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சென்றனர்.

    இது குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×