search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic damage"

    • பைக்காரா அருவி அருகே உள்ள 2 பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தன.
    • பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், ஊட்டி- கூடலூா் சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணியில் வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அங்கு பலத்த காற்று வீசியது. இதில் பைக்காரா அருவி அருகே உள்ள 2 பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தன.

    இதையடுத்து நெடுஞ்சாலை மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு கிடந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அதேபோல கூடலூா் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் உள்ள சூண்டி பகுதியில் சாலையோரம் நின்ற ஒரு பெரிய மரம் ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் ஓவேலி-கூடலூா் இடையே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

    கூடலூர் மண்வயல் பகுதியிலும் ரோட்டோரம் நின்ற பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அந்த சாலை துண்டிக்கப்பட்டது. எனவே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் மரத்தை அறுத்து அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.

    • சேலம், சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே பஸ் சென்ற போது, அந்த வழியாக எதிரே சேலத்தை நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது.
    • அப்போது, லாரி பிரேக் பிடிக்காமல் எதிரே வந்த அரசு பஸ்சில் உரசி, ரவுண்டான சுவரில் மோதி நின்றது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை நாமக்கல்லுக்கு அரசு பஸ் சென்று கொண்டி ருந்தது. சேலம், சீலநா யக்கன்பட்டி ரவுண்டானா அருகே பஸ் சென்ற போது, அந்த வழி யாக எதிரே சேலத்தை நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது, லாரி பிரேக் பிடிக்காமல் எதிரே வந்த அரசு பஸ்சில் உரசி, ரவுண்டான சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    விபத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில், லாரியின் பிரேக் திடிரென பழுதானதால், சுதாரித்துக் கொண்ட லாரி டிரைவர், பஸ் மீது மோதாமல் இருக்கு ஓரமாக நிறுத்த முயன்றபோது, பஸ்சில் உரசியது தெரியவந்தது. இந்த விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.
    • போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தாமிரபரணி ஆற்றில் தண்ணீரும் குறைவான அளவே வருவதால் 500-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையில் தாமிரபரணி ஆற்றில் வல்லநாடு பகுதியில் இருந்து 3-வது மற்றும் 4-வது பைப் லைன் திட்டம் மூலம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வல்லநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடந்த 1 மாதமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த வல்லநாடு பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் வல்லநாடு பஜார் பகுதியில் நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தடுப்புகளை உடைத்து எதிர் திசையில் பாய்ந்த லாரி
    • டிரைவர் கட்டுபாட்டை இழந்தது

    வேலூர்:

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியில் இயங்கி வரும் கார் நிறுவனத்தில் இருந்து 7 கார்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் தொழிற்சாலைக்கு கன்டெய்னர் லாரி பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே வந்து கொண்டிருந்தபோது இடது புறத்தில் இன்று பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென வலது புறம் வந்தது. இதனைக் கண்ட லாரி டிரைவர் லாரியை வலது புறமாக திருப்பி பிரேக் பிடித்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிரே உள்ள சாலைக்கு பாய்ந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் லாரியை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • விமல் சென்னையில் மின் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
    • கார் ஓட்டி வந்த விமல் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது 35). சாப்ட்வேர் என்ஜினியர். இவர் சென்னையில் மின் பொறியாளராக பணிபுரிந்து வரும் நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து தனது காரில் புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடு கட்டையை உடைத்துக் கொண்டு எதிர் திசை நோக்கி பறந்து சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்து நடந்த போது கார் ஓட்டி வந்த விமல் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர் பேட்டை போலீசார் விமலை மீட்டு போலீசாரின் நெடுஞ் சாலை ரோந்து வாகனத்தில் உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காற்றாலை விசிறியின் இறக்கைகளை அதிக நீளமான 6-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றிக்கொண்டு சென்றது.
    • போலீஸ் செக்போஸ்ட் எதிரே ஒன்றன் பின் ஒன்றாக 6 லாரிகளில் காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு சென்றனர்.

    பரமத்தி வேலூர்:

    சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு பகுதியில் இருந்து மதுரை பகுதிக்கு சுமார் 360 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கைகளை அதிக நீளமான 6-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி க்கொண்டு சென்றது. போலீஸ் செக்போஸ்ட் எதிரே ஒன்றன் பின் ஒன்றாக 6 லாரிகளில் காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு சென்றனர்.

    அதன் காரணமாக மிகவும் நீளமான இறக்கைகளை லாரிகளில் கொண்டு செல்வதால் அந்த லாரிக்கு பின்னால் வரிசையாக காவிரியாற்று பாலத்தின் வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள், வேன்கள் இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    நீண்ட நேரத்திற்கு பிறகு காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு சென்ற லாரிகள் மிகவும் மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக தவிட்டுப்பாளையம் மேம்ப்பாலத்தின் வழியாக சென்றது. இதனால் பரமத்தி வேலூர் போலீஸ் செக் போஸ்ட் முதல் காவிரி ஆற்று பாலம் அருகே மேம்பாலம் வரை ஏராளமான வாகனங்கள் இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரியின் பின்னால் அணிவகுத்து சென்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் காற்றாலை விசிறி ரெக்கைகளை கொண்டு செல்லும் லாரிகள் இரவு முழுவதும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தி வைத்துவிட்டு மறுநாள் பகல் 12 மணிக்கு மேல் இந்த சாலை வழியாக செல்கின்றன.

    பகல் நேரங்களில் இந்த வாகனங்கள் செல்வதால் அடிக்கடி தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு செல்லும் லாரிகளை இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 3 ஷிப்டுகளில் பணி செய்து வருகின்றனர்.
    • தொழிலாளர்கள் யாரும் உள்ளேயும் செல்ல முடியவில்லை. வெளியேயும் வரமுடியவில்லை.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே புளிச்சப்பள்ளம் பகுதியில் தனியார் பிஸ்கட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 3 ஷிப்டுகளில் பணி செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்காக பல்வேறு தொழிற்சங்கங்கள் இயங்கி வருகிறது. இதில் தே.மு.தி.க. தொழிற்சங்கமும் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் உள்ளவர்களுக்கு அடிக்கடி ஷிப்ட் மாற்றுவது, செக்ஷன் மாற்றுவது போன்ற நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், இதே நிலை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளிவில் தே.மு.தி.க. தொழிற்சங்க தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் ஊழியர்கள் தொழிற்சாலை வாயிலில் கூடினர். தங்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே, மற்ற ஊழியர்கள் வேலைக்கு செல்லவேண்டுமென கூறி மறியலில் ஈடுபட்டனர். இதனால் தொழிலாளர்கள் யாரும் உள்ளேயும் செல்ல முடியவில்லை. வெளியேயும் வரமுடியவில்லை. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தே.மு.தி.க. மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அருள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அதேபோல வானூர் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, நிர்வாகத்துடனும், தே.மு.தி.க. நிர்வாகிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இது தொடர்பாக விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. இதனை அடுத்து தே.மு.தி.க. தொழிற்சங்கத்தினர் மறியலை கைவிட்டு வேலைக்கு சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்ததால் நகர் முழுதும் மின்தடை ஏற்பட்டது.
    • பிரதான சாலையில் பெரிய அளவிலான ராட்சத மரம் விழுந்ததால் அங்கு ஒரு வழிபாதையில் போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    எடப்பாடி:

    கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு ஏதும் இன்றி வறண்ட வானிலை நிலவி வந்தது. பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், நகர் முழுவதும் அனல் காற்று வீசியது.

    இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை இரவு) திடீரென இடி, மின்னலுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. அதனை தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பலத்த காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல், எடப்பாடி அடுத்த கேட்டுக்கடை பகுதியில் எடப்பாடி-சேலம் பிரதான சாலையின் குறுக்கே ராட்சத மரம் முறிந்து விழுந்தது. உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்ததால் நகர் முழுதும் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் எடப்பாடி நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையின் குறுக்கே விழுந்த மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரதான சாலையில் பெரிய அளவிலான ராட்சத மரம் விழுந்ததால் அங்கு ஒரு வழிபாதையில் போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நகரின் பல இடங்களில் மின் பாதைகளில் பழுது ஏற்பட்டதால் தொடர்ந்து நள்ளிரவு வரை நகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

    • 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது
    • குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை குரும்பாடி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.

    குன்னூர்

    நீலகிரியில் பெய்த கனமழையால் மரங்கள் விழுந்தன. இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளது. மேலும் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நீங்கி உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி, நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக நேற்று அதிகாலை 3 மணியளவில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை குரும்பாடி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செல்போன் சிக்னல் கிடைக்காத பகுதி என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் மரம் சாலையில் இருந்து அகற்றப்பட்டது. மலைப்பாதையில் மரம் விழுந்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். மண் சரிவு இதேபோல் குன்னூர் பெட்போர்டு, கோத்தகிரி-வட்டப்பாறை சாலையில் நள்ளிரவில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அகற்றினர். மேலும் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.

    இதற்கிடையில் நேற்று மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஊட்டியில் கனமழை பெய்தது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு சென்றிருந்த, சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்கு சென்றனர். சிலர் குடைகளுடன் வலம் வந்தனர். ஊட்டியில் கடும் குளிர் நிலவியதால் பூங்காக்களை கண்டு ரசிக்க முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நீலகிரியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- குன்னூர்-68, பாலகொலா-69, கிண்ணக்கொரை-62, குந்தா-55, பர்லியார்-48, கோத்தகிரி-47, ஊட்டி-10 மழை பதிவானது. நீலகிரியில் சராசரியாக 23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    • ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    ஆம்பூர்: 

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் (மின்னூர்) ெரயில்வே கேட்டின் வழியாக கல் குவாரி லாரிகள் 24 மணி நேரமும் செல்கிறது.

    இந்த ெரயில் பாதை ஓரு மணிநேரத்தில் 3 ெரயில்கள் செல்கின்றன. இதனால் ெரயில்வே கேட் தினசரி அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு முறை திறந்து மூடும் போது காலதாமதம் ஏற்படுகிறது.

    இதனால் கேட் திறந்தும் வரிசையில் 20 லாரிகள் போட்டி போட்டு கேட் வழியாக சென்று வரும் போதும் ஓரு சில நேரங்களில் ெரயில் பாதை தண்டவாளத்தில் லாரி சிக்கிய போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    நேற்று இரவு இது போன்று ஒரு சம்பவம் நடந்தது லாரிகள் மீது ெரயில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று மாலை பீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு திடீரென சாலையில் அமர்ந்து கொண்டார்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியவரை பிடித்து சென்றனர்.

    இது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதில் பஸ்சிற்குள் ஷேர் ஆட்டோ புகுந்து பலத்த சேதம் ஏற்பட்டது.
    • இந்த விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    விழுப்புரத்தில் இருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த அரசு பஸ் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக ஷேர் ஆட்டோ பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தபோது திடீரென்று அரசு பஸ் பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் பஸ்சிற்குள் ஷேர் ஆட்டோ புகுந்து பலத்த சேதம் ஏற்பட்டது. அப்போது ஷேர் ஆட்டோவில் இருந்த டிரைவர் உள்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ஷேர் ஆட்டோவில் இருந்த 2பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலூரில் முக்கியசாலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பஸ்சிற்குள் சிக்கி இருந்த ஷேர் ஆட்டோவை பாதுகாப்பாக மீட்டு சாலை ஓரத்தில் நிறுத்தினர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டன. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×