search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruppur"

    திருப்பூரில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர்-ஆண்டிபாளையம் சோதனை சாவடியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களின் ஆவணங்களை சோதனையிட்டனர். அவர்களின் நடவடிக்கை குறித்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த ஆஷிக்அலி (வயது 19) மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரத்தினமுத்து (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி திருப்பூர் மங்கலம் ரோடு ஜான் ஜோதி கார்டன் பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (52) என்பவரின் வீட்டில் புகுந்து, அவருடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2½ பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் பெறுபவர்கள் கணக்கெடுப்பு மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாரத பிரதமரின் கிஸான் திட்டம் மற்றும் சிறு, குறு விவசாயிகளின் விபரங்களை கணினியில் உள்ளீடு செய்யும் பணி மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு ஒரு முறை சிறப்பு நிதி உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்குதல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் சுதாதேவி தலைமையில் தாங்கினர்.

    கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் மற்றும் கலெக்டர் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 10-ந்தேதி சட்ட மன்ற பேரவை விதி எண்.110-ன் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு ஒரு முறை சிறப்பு நிதி உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்குதல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மற்றும் பாரதப் பிரதமரின் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினர்.

    முன்னதாக, மேலாண்மை இயக்குநர் மற்றும் கலெக்டர் ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி, காங்கயம் தாசில்தார் அலுவலகம், காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற்று வரும் சிறு, குறு விவசாயிகள் குறித்து கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், தாராபுரம் சப்-கலெக்டர் கிரேஷ் பச்சாவு, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி கமி‌ஷனர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    திருப்பூர் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கோவில்வழியில் இருந்து பெருந்தொழுவு பகுதிக்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் புறப்பட்டனர்.

    அமராவதிபாளையம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    காரில் வந்தவர்கள் காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வீரபாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 வாலிபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பலியானவர்கள் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கணேசன் (வயது 34), பனியன் தொழிலாளி அய்யாசாமி (45) ஆகியோர் என்பதும் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்றவர்களை தேடி வருகிறார்கள்.

    திருப்பூரை சேர்ந்த மெக்கானிக் கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் முகேஷ் குமார் (35). மெக்கானிக். இவர் தென்னம்பாளையத்தில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் முகேஷ் குமார் மாயமானார். அவர் தனது மனைவி உஷா ராணிக்கு போன் செய்து தன்னை கடத்தி சென்று விட்டதாகவும், தாராபுரம் அருகே உள்ள காட்டு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நடைபெறும் இடத்தில் விட்டு சென்றதாகவும் கூறி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உஷாராணி தனது தம்பியுடன் தாராபுரம் வந்தார். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தனது கணவரை கடத்தி சென்றது குறித்து புகார் அளித்தார்.

    இது தொடர்பாக திருப்பூரில் தான் புகார் அளிக்க வேண்டும் என முதலில் கூறிய தாராபுரம் போலீசார் பின்னர் தாங்கள் விசாரிப்பதாக கூறினார்கள்.

    அதன்படி மாயமான முகேஷ் குமாரை தேடி வருகிறார்கள்.

    திருப்பூரில் ஆயுர்வேத டாக்டர் மற்றும் அவரது மனைவியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆண்டிப்பாளையம் காமாட்சி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (75) ஆயுர் வேத டாக்டர். இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் சிறிய கிளினிக் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி சாஜி தேவி (70). இவர்கள் இருவரும் தனியாக தான் வசித்து வருகிறார்கள். நேற்று இரவு ஸ்ரீதரன் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.

    நள்ளிரவு 12 மணியளவில் வீட்டிற்குள் பதுங்கி இருந்த 3 பேர் கும்பல் திடீரென எழுந்தனர்.

    அவர்கள் முகமூடி, கையுறை அணிந்து இருந்தனர். கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்து இருந்தனர்.

    அக்கும்பல் சாஜி தேவியை பிடித்து அங்குள்ள அறையில் தள்ளி பூட்டினார்கள். பின்னர் ஸ்ரீதரன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம், நகை எங்கு உள்ளது என கேட்டனர்.

    அதற்கு ஸ்ரீதரன் பதில் அளிக்க மறுத்தார். உடனே கொள்ளை கும்பலில் ஒருவன் ஸ்ரீதரன் கழுத்தில் கத்தியால் லேசாக கீறினான். இந்த நிலையில் அறையில் அடைக்கப்பட்டு இருந்த சாஜி தேவி சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இதனை பார்த்ததும் 3 வாலிபர்களும் தப்பி ஓடினார்கள். அவர்களை பொது மக்கள் துரத்தினர். அவர்களில் ஒருவன் மட்டும் பொதுமக்கள் பிடியில் சிக்கினான்.

    அவனை பிடித்து கயிற்றால் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் திருப்பூர் மத்திய பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    பொதுமக்கள் பிடியில் சிக்கிய வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். பொதுமக்கள் தாக்கியதில் அவனுக்கு காயம் ஏற்பட்டு இருந்ததால் பேச முடியவில்லை.

    அவனது சட்டைபையில் சென்னையில் இருந்து திருப்பூர் வந்ததற்கான டிக்கெட் இருந்தது.

    எனவே அவன் சென்னையை சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தப்பி ஓடிய மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள். தம்பதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் 3 பேரும் ஸ்ரீதரன் வீட்டிற்குள் புகுந்து பதுங்கி இருந்துள்ளனர்.

    அவர்கள் கொள்ளையடிக்க வந்தார்களா? அல்லது ஸ்ரீதரன் மற்றும் அவரது மனைவியை கொலை செய்து அவர்களது சொத்தை அபகரிக்க உறவினர்கள் கூலிப் படையை ஏவினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    தம்பதியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர் அருகே பனியன் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்தி நகர் இ.பி. காலனியை சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவரது மனைவி நித்தா (27). அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் அக்கவுண்டண்ட் ஆக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு நடந்து சென்றார். பழனிசாமி நகரில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நித்தா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர்.உடனே சுதாரித்து கொண்ட நித்தா செயினை இறுக்கி பிடித்தார். இதில் செயின் அறுந்து 3 பவுன் நித்தாவிடமும், மற்ற 3 பவுன் வாலிபர்களிடமும் சிக்கியது. நித்தா சத்தம் போட்டார். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.அதற்குள் 2 வாலிபர்களும் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு நகை பறித்த 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.

    திருப்பூரில் வீடு புகுந்து திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பகுதியில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் நடைபெற்றது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் ஆசாமிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் எஸ்.பள்ளப்பட்டியை அடுத்த சூலங்குறிச்சி பகுதியை சேர்ந்த ரவி (வயது 58) என்பது தெரிய வந்தது.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் சந்திரசேகர் மற்றும் அவினாசியை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் அங்காளஈஸ்வரி ஆகியோரின் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகளை திருடியவர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 21 பவுன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோவை, திருப்பூரில் பன்றி, டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 வாரத்தில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    மேலும் காய்ச்சல் அதிகமுள்ள பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையாக சிகிச்சையை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல், சளி, மூச்சு திணறல் பாதிப்புடன் ஏராளமானோர் தினசரி சிகிச்சைக்கு வருகின்றனர்.

    இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் டாக்டர்கள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    டாக்டர்கள் காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்து பாதிப்பு இருந்தால் அவர்களை சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்கை அளித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் திருப்பூர் தாசப்ப நகரை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி வசந்தா (வயது 63) என்பவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    அங்கு டாக்டர்கள் வசந்தாவின் ரத்தமாதிரியை சோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 31-ந் தேதி அனுப்பி வைத்தனர். வசந்தாவை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு வசந்தா பரிதாபமாக இறந்தார்.

    திருப்பூர் மங்கலம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (57). கேபிள் ஆப்ரேட்டர். இவர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல், சளி மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் கணேசனின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கணேசன் பரிதாபமாக இறந்தார்.

    கோவை வெரைட்டிஹால் ரோட்டை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் அமுதன் (5) என்பவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அமுதனின் ரத்தத்தை டாக்டர்கள் சோதனை செய்த போது அமுதனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவரை டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அமுதன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுமித்ரா (35). இவர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை உறவினர்கள் கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு சுமித்ரா பரிதாபமாக இறந்தார்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும், டெங்கு காய்ச்சலக்கு 4 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 58 பேர் என மொத்தம் 73 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu #Dengue

    திருப்பூரில் விநாயகர் கோவிலில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் குலாளர் பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக மயில் சாமி இருந்து வருகிறார்.

    நேற்று இரவு இவர் பூஜை முடித்து கோவிலை பூட்டி சென்றார். இன்று காலை கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் வைக்கப்பட்டு இருந்த 2 உண்டியலின் சீல் உடைக்கப்பட்டு தனியாக கிடந்தது.ஆனால் உண்டியலில் இருந்த பணம் எதுவும் திருட்டு போகவில்லை. கோவில் அலுவலக அறைக்கு சென்ற போது அந்த அறை உடைக்கப்பட்டு அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது.

    அங்கு சாமிக்கு அணிவிக்கப்படும் தங்க தகடு மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தது. அவைகள் திருட்டு போய் இருந்தது. ரொக்கபணம் ஆகியவை திருட்டு போனது.இது குறித்து பூசாரி மயில் சாமி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.கைரேகை நிபுணர்களும் வரவைழக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை. அதனை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கோவிலில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் 2 வாலிபர்கள் கோவிலுக்குள் நுழையும் காட்சி பதிவாகி உள்ளது.

    அந்த காட்சியை வைத்து கொள்ளையர்களை அடையாளம்காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூரில் திருமண மண்டபத்தில் இருந்து தப்பிய புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் ராயபுரம், சூசையாபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 27). பனியன் கம்பெனி ஊழியர். இவருக்கும் பழனியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 27-ந்தேதி திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 26-ந்தேதி இரவு பழனியில் உள்ள திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணும், மணமகனும் வந்தனர். உறவினர்கள் தங்கள் குடும்பத்துடன் இரவில் தங்கினர். காலையில் திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென புதுமாப்பிள்ளை சந்தோஷ் நள்ளிரவில் மாயமாகி விட்டார்.

    அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியபோது அவர் கிடைக்கவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

    இதனால் திருமண மண்டபம் களை இழந்தது. விசாரணையில் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்றும் இது மணமகனுக்கு தெரியவந்ததும் தப்பி ஓடிவிட்டார் என்றும் தெரியவந்தது.

    இதனிடையே இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பெரியோர் தலையிட்டு இதுவரை நடந்த செலவை பாதி பாதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதின்பேரில் இருவீட்டாரும் ஒப்புக்கொண்டனர். பின்னர் மணக்கோலத்திலேயே பெண் வீட்டுக்கு சென்றார்.

    சந்தோசின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் திருப்பூர் வந்தனர். இங்கு வந்து பார்த்தபோது இங்கும் சந்தோஷை காணவில்லை.

    இந்நிலையில் கடந்த 31-ந்தேதி இரவு சந்தோஷ் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் திட்டியதாக தெரிகிறது. எதுவும் பேசாமல் தனது அறைக்கு சந்தோஷ் தூங்க சென்றார்.

    காலை கதவை திறந்து பார்த்தபோது சந்தோஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    திருப்பூரில் பிளஸ்-2 மாணவியை ஆட்டோவில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம், பக்கம் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பெற்றோர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.

    பின்னர் இந்த வழக்கு திருப்பூர் வடக்கு மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் கலையரசி மாணவி மாயமானது குறித்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் மாணவி திருச்சி மாவட்டம் துறையூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான தனிப்படை போலீசார் துறையூர் விரைந்து சென்று மாணவியை மீட்டனர். போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    திருப்பூர் ஆத்துபாலம் பகுதியை சேர்ந்த நாகராஜ்(22) என்ற பனியன் தொழிலாளி மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். இதையடுத்து மாணவியை அடையும் நோக்கத்தில் அவரை கடத்த திட்டமிட்டார். அதன்படி கடந்த 29-ந்தேதி மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட நாகராஜ் தனது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் ஜீவா(20), மணிகண்டன்(20) மற்றும் 17 வயது சிறுவனுடன் சேர்ந்து மாணவியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்தி சென்றனர்.

    காங்கயம் வரை ஆட்டோவில் சென்ற அவர்கள் பின்னர் அங்கிருந்து திருச்சி மாவட்டம், துறையூருக்கு மாணவியை கடத்தி சென்றனர். அப்போது வாலிபர் நாகராஜ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகராஜ் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜீவா, மணிகண்டன், 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். நாகராஜ் உள்பட 3 பேர் கோவை மத்திய சிறையிலும், 17 வயது சிறுவன் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மாணவியை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். #Tamilnews
    ×