search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiruchendur"

    • 80 இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் நடமாடும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
    • கோவில் வளாகத்தில் 4 இடங்களில் அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவி லில் கந்தசஷ்டி திருவிழா 13-ந் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந் தேதியும், திருக்கல்யாணம் 19-ந் தேதியும் நடக்கிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    ஆலோசனை கூட்டம்

    எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று கோவில் இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு கோவில் அறங்காவலர் குழுத்தலை வர் அருள்முருகன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாசில்தார் வாமணன், அறங்காவலர் செந்தில்முருகன், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில் இணை ஆணையர்கள் கார்த்திக் வரவேற்று பேசினார்.

    பக்தர்களுக்கு குடிநீர்

    கூட்டத்தில் திருவிழாக்காலங்களில் பக்தர்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கி விரதமிருப்பதற்காக கோவில் வளாகத்தில் 21 தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கொட்டகைகளின் உள் பகுதியில் மழைநீர் பாதுகாப்பு கருதி சுமார் ஒரு அடி உயரத்தில் பலகைகள் மூலம் சிறிய மேடை அமைக்கப்படும். அருகில் தற்காலிக கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.

    2,500 போலீசார்

    13 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, மேலும் 80 இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் நடமாடும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். பக்தர்கள் பாதுகாப்பு கருதி 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தயார் நிலையில் மருத்துவகுழுவும், கோவில் வளாகத்தில் 4 இடங்களில் அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். கடல் காவல் படை மற்றும் மீன்வளத்துறை மூலம் கடலில் பக்தர்கள் ஆழத்திற்கு செல்லாமல் தடுத்திடும் வகையில் மிதக்கும் வகையில் தடுப்பு கயிறுகள் போடப்பட்டு வீரர்கள் ரோந்து செல்வர்.

    தடையின்றி மின்சாரம்

    திருவிழா காலங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்கவும், பக்தர்கள் விரதமிருக்கும் கொட்டகை களில் மின் கசிவு ஏற்படாதவண்ணம் பாது காப்பான முறையில் மின் தடங்கள் அமைக்கப்படும்.

    சாலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் பிடித்து கோசா லையில் ஒப்படைக்கப்படும். தெருநாய்கள் பக்தர்களை தாக்காத வகை யில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப் படும்.

    இந்த முறை கடற்கரையில் சூரசம்ஹாரம் பார்க்கும் இடங்களில் இரும்பு குழாய்கள் மூலம் பாதைகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கப்படவுள்ளது. கோவிலில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடை பெறும் இடங்களில் யாரும் நுழையாதவாறு பாது காப்பு பலப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கோவில் கண்காணிப்பாளர்கள் ரவீந்திரன், ஆனந்தராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் சிவநாதன், செயற்பொறியாளர்கள் முருகன், சந்தானகிருஷ்ணன், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்ரவி, டாக்டர் நஸ்ரின்பாத்திமா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், கோவில போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கணேச மணிகண்டன், நகராட்சி ஆணையர் கண்மணி, தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜமூர்த்தி, மின் வாரிய இளநிலை பொறியாளர் முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் தாசில்தார் வாமணன் கலந்துகொண்டு, கல்விக்கடன் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.
    • மாணவர்கள் சாந்தகுமார், பாலகுமரன் ஆகியோர் திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர மதிப்பீடு குழு தலைமையில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்விக்கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி மற்றும் கல்வி அமைச்சகத்தின் கீழ் வித்தியலட்சுமி இணைய வாயிலாக மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்விக்கடன் பெறும் வசதி தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    உள்தர மதிப்பீடு குழு ஒருங்கிணைப்பாளர் ஜீம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்றார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். அரசு சார்பில் திருச்செந்தூர் தாசில்தார் ப.வாமணன் கலந்து ெகாண்டு, கல்விக்கடன் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். தாவரவியல் துறைத்தலைவர் சி.பா.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கல்விக்கடன் திட்ட செயல்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கான திட்டம் குறித்து விளக்கி பேசினார். மாணவர்கள் சாந்தகுமார், பாலகுமரன் ஆகியோர் திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினர். கல்வி கடன் திட்டத்தின் நோடல் அதிகாரி பேராசிரியை க.பார்வதி தேவி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சிரில் அருண், திருச்செல்வன், செந்தில்குமார், அண்டனி முத்து பிரபு, ராஜபூபதி ஆகியோர் ெசய்திருந்தனர்.

    • இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க பொதுக்குழு கூட்டம் திருச்செந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க பொதுக்குழு கூட்டம் திருச்செந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார் .இந்துமுன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் மணலி மனோகர், இந்துமுன்னணி மாநில பொதுச்செயலாளர்கள் டாக்டர் த.அரசுராஜா, நா.முருகானந்தம், மாநில துணை பொதுச் செயலாளர் சக்தி வேலன், மாநில இணை அமைப்பாளர் கே.கே.பொன்னையா, நெல்லை கோட்ட தலைவர் தங்கமனோகர், ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் இந்து ஆட்டோ முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் மணி, செல்வகணேஷ்,மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்தர் மற்றும் ஆட்டோ தொழிலாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள், பாலிடெக்னிக் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • பேச்சு, கவிதை, குழு நடன போட்டி ஆகியவற்றுக்கும் தனித்தனியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், தொழில் கல்வி படிக்கும் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்தும் பொருட்டு மாநில அளவில் அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டிகள், தமிழ்-ஆங்கிலத்தில் பேச்சு போட்டி, கவிதை போட்டிகள் மற்றும் குழு நடன போட்டிகள் நடைபெற்றது.

    இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள், பாலிெடக்னிக் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. இதில் ஏராளமான பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் தி.வெங்கட்ராம்ராஜ் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்ததுடன், சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார். கல்லூரி செயலாளர் செள.நாராயணராஜன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி துடிசியா நிறுவன மேலாளரும், கல்லூரி முன்னாள் மாணவருமான எஸ்.மரிய சந்தான ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். பேராசிரியர் எஸ்.டார்வின் வரவேற்று பேசினார். மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் எஸ்.சிவனணைந்த பெருமாள் நன்றி கூறினார்.

    பரிசு

    பள்ளிகளுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சபரிவாசன், நித்தீஷ்குமார் ஆகியோர் முதல் பரிசும், சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி 2-வது பரிசும், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 3-வது பரிசும் பெற்றன. கமலாவதி மேல்நிலைப்பள்ளி, எலியட் டக்ஸ்போர்டு, காஞ்சி ஸ்ரீசங்கரா, சின்மயா வித்யாலயா, செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆறுதல் பரிசு பெற்றன.

    பாலிெடக்னிக் கல்லூரிகளுக்கான போட்டியில் நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல் 2 பரிசுகளையும், சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி 3-வது பரிசையும் பெற்றன. பேச்சு, கவிதை, குழு நடன போட்டி ஆகியவற்றுக்கும் தனித்தனியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    பயிற்சி பட்டறை

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை ஐ.இ.இ.இ. மாணவர்கள் பிரிவு சார்பில் ஐ.இ.இ.இ. மெட்ராஸ் பிரிவு போட்டானிக்ஸ் அமைப்பின் நிதியுதவியுடன் 'உருவகப்படுத்துதல் கருவிகளை பயன்படுத்தி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் போட்டானிக்ஸ் அமைப்பில் வடிவமைப்பு திறன் மேம்பாடு' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடைபெற்றது. பயிற்சி ஒருங்கிணைப்பாளர், இணை பேராசிரியர் இரா.மஞ்சித் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக திருச்சி கே.ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மூத்த உதவி பேராசிரியர் வினோத், மென்பொருள் பயிற்சி வழங்கினார். ராபீட் செமிகன்டைகர் தொழில்நுட்பத்தின் இணை நிறுவனர் கார்த்திகேயன் குறைகடத்தி தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் குறித்து செய்முறை பயிற்சி வழங்கினார். துறை தலைவர் பெனோ வாழ்த்துரை வழங்கினார். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இன்ஸ்பெக்டர் சுதா, மாணவிகளிடையே 'ஊழல் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
    • மாணவர்கள் "ஊழலை மறப்போம் தேசத்தை காப்போம்" என்னும் கருத்து அமைந்த விழிப்புணர்வு வீதி நாடகத்தினை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்த ம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் 49, 50 மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரோடு இணைந்து சர்தர் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஊழல் ஒழிப்பு வார விழாவினை நடத்தியது.

    உறுதிமொழி

    நம் நாட்டின் பொருளா தாரம், அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் முக்கிய தடையாக உள்ளதை உணர்ந்து ஒவ்வொரு குடிமகனும் நேர்மை. கண்ணியத்துடன் ஊழலை ஒழிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை கல்லூரி முதல்வர் பொ. ஜெயந்தி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதா மற்றும் அனிதா ஆகியோர் முன்னிலையில் மாணவிகள் லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன் என்றும், மக்கள் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும் உறுதிமொழி எடுத்தனர்.

    தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுதா, மாணவிகளிடையே 'ஊழல் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் மாணவிகளிடம் ஊழல் சார்ந்த புகார்களை தெரிவிக்கும் வழிமுறைகளை குறித்த துண்டு பிரசாரத்தை காவல்துறையினர் வழங்கினர்.

    வீதி நாடகம்

    பின்னர் கல்லூரியின் வேதியியல்துறை மற்றும் தமிழ்த்துறை மாணவிகள் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் "ஊழலை மறப்போம் தேசத்தை காப்போம்" என்னும் கருத்து அமைந்த விழிப்புணர்வு வீதி நாடகத்தினை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால்துரை, சப்-இன்ஸ்கெ்டர் தளவாய் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் மா. ஜான்சி ராணி முனைவர் ரெ. சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர்,பரமன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது.
    • செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு சாலையில் மழைநீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    திருச்செந்தூர்:

    வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில் திருச்செந்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, ஆலந்தலை, கல்லாமொழி, காயாமொழி, தளவாய்புரம், குமாரபுரம், இராணிமகாராஜபுரம், அடைக்கலாபுரம், நடு நாலுமூலைகிணறு, கீழநாலுமூலைகிணறு, பரமன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூரில் பெய்த மழையால் பகத்சிங் பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது. மேலும் டி.பி ரோட்டில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி, செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு சாலையில் மழைநீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலையில் தேங்கி உள்ளது. அவற்றை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கலா குலசை கோவிலுக்கு சென்று விட்டு திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை செல்ல கூடிய தனியார் பஸ்சில் ஏறினார்.
    • அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர்.

    பெண்ணிடம் நகை பறிப்பு

    இந்நிலையில் நெல்லை மாவட்டம் தேவர்குளத்தை சேர்ந்த கலா (வயது38) என்பவர் குலசை கோவிலுக்கு சென்று விட்டு திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல நெல்லை செல்ல கூடிய தனியார் பஸ்சில் ஏறினார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பஸ்சில் இருந்து இறங்கி சென்று திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலை யத்திற்கு சென்று புகார் செய்தார்.

    செல்போன் பறிப்பு

    இதே போல் திருச் செந்தூரில் உள்ள நகைக்கடையில் வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பஸ்சில் சென்றுள்ளார். அவரிடமும் கூட்ட நெரிசலை பயன் படுத்தி அவரது செல் போனை பறித்து சென்றனர்.

    இதுபோல் நேற்று பஸ்சில் ஏறிய சுமார் 10 பேரின் செல்போன் பறிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்த னர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • சாம்பியன் பட்டம் வென்ற டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக 18-வது மண்டல விளையாட்டு ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

    2-வது இடத்தை தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரி அணியும், 3-வது இடத்தை சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி அணியும் பிடித்தது. சாம்பியன் பட்டம் வென்ற டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் தேவராஜூ ஆகியோரை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • திருச்செந்தூர் ஒன்றிய அளவிலான அமுத கலச யாத்ரா வீரபாண்டிபட்டினம் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்றது.
    • தொடர்ந்து நடைபெற்ற எனது மண் எனது தேசம் நிகழ்ச்சியில் பஞ்ச் பிரான் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    75 ஆண்டு சுதந்திர அமுதப்பெருவிழாவை முன்னிட்டும், இந்திய படை வீரர்களை போற்றும் வகையிலும் இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவில் எனது மண் எனது தேசம் நிகழ்ச்சியானது நடைபெறுகிறது.

    அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட நேரு யுவ கேந்திரா, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அணி எண். 44, 48 மற்றும் திருச்செந்தூர் உபகோட்ட இந்திய அஞ்சல் துறையம் இணைந்து திருச்செந்தூர் ஒன்றிய அளவிலான அமுத கலச யாத்ரா வீரபாண்டிபட்டினம் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளியப்பன் முன்னிலை வகித்தார். கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் கவிதா வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் நிகழ்ச்சி அமைப்பாளர் இசக்கி விழாவின் நோக்கம் குறித்து பேசினார்.

    நிகழ்ச்சியில் அஞ்சல் துறை திருச்செந்தூர் உபகோட்டம் அஞ்சலக உதவி கண்காணப்பளர் ஐடா எபனேசர் ராஜாபாய், கல்லூரி பேராசிரியர்கள் வேலாயுதம், பாலு, பசுங்கிளி பாண்டியன் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஊராட்சி கள் துறை முதன்மை வள பயிற்றுநர் ஆறுமுகம், சமூக ஆர்வலர் பிரவீன்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். ஒன்றிய அளவிலான கலச யாத்ரா ஊர்வலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அஞ்சலக அலுவ லர்கள், நேரு யுவ கேந்திரா இளைஞர் மன்றத்தினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நடைபெற்ற எனது மண் எனது தேசம் நிகழ்ச்சியில் பஞ்ச் பிரான் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கலச யாத்திராவில் திருச்செந்தூர் உப கோட்டம் அஞ்சல் துறை அலுவலர்கள் மூலமாக அனைத்து கிராமங் களில் சேகரிக்கப்பட்ட மண் கலசங்களை மாணவ, மாணவிகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஒன்றிய அளவில் உள்ள கலசத்தில் மண்ணை கலந்தனர்.

    ஒன்றிய அளவிலான கலக்கப்பட்ட மண்ணானது தூத்துக்குடி நேரு யுவ கேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள் மூலம் தேசிய அளவில் டெல்லியில் நடைபெற இருக்கிற நிகழ்ச்சிக்கு கொண்டு செல்ல இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் ஆகிய அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் மற்றும் கழுகுமலை மாடசாமி நாதஸ்வர இசை குழுவினரின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முடிவில் கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலரும், பேராசிரியருமான சத்திய லெட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியானது நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன் ஆலோசனையின் பேரில் நேரு யுவ கேந்திரா நிகழ்ச்சி அமைப்பாளர் இசக்கி மற்றும் தேசிய இளையோர் தொண்டர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • பயிலரங்கிற்கு துறைத் தலைவர் அ.அந்தோணி சகாய சித்ரா தலைமை தாங்கினார்.
    • பேராசிரியர்கள் ம.ரெ.கார்த்திகேயன், மலர்க்கொடி மற்றும் மாணவர்கள் பயிலரங்கத்தில் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை மன்றம் சார்பில் இளைஞர்களுக்கான நிதி சார்ந்த கல்வி என்ற தலைப்பில் 2 நாள் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனைப்படி நடந்த பயிலரங்கிற்கு துறைத் தலைவர் அ.அந்தோணி சகாய சித்ரா தலைமை தாங்கினார். தோவாளை லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குனர் தி.விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் வணிக நிர்வாகிவியல் துறை பேராசிரியர்கள் ம.ரெ.கார்த்திகேயன், மலர்க்கொடி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். வணிக நிர்வாகவியல் துறை மன்ற ஒருங்கிணைப்பாளர் அ.தர்மபெருமாள் நன்றி கூறினார். பயிலரங்க ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    • நிலத்தடி நீரினை பாதுகாத்திடும் வகையில் ஆவுடையார்குளத்தின் கரைகளில் பனைமர விதைகள் நடும் விழா நடைபெற்றது.
    • திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன் பனை மர விதைகளை நட்டு அப்பணியை தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கத்தின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எல்பாஸ் விழிப்புணர்வு இயக்கத்துடன் இணைந்து நிலத்தடி நீரினை பாதுகாத்திடும் வகையில் ஆவுடையார்குளத்தின் கரைகளில் பனை மர விதைகள் நடும் விழா நடைபெற்றது. நாடார் வியாபாரிகள் சங்கத்தலைவர் காமராசு நாடார் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகராட்சி ஆணையர் கண்மணி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் ஆசிரியர் பயிற்றுநர்கள் நபில் புஹாரி, ஜெகதீஸ்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன் பனை மர விதைகளை நட்டு அப்பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பனை விதைகளை நட்டனர்.

    நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச்செயலர் டாக்டர் எஸ்.யாபேஷ், நாடார் வியாபாரிகள் சங்க செயலர் செல்வக் குமார், பொருளாளர் செல்வின், துணைத்தலைவர் அழகேசன், துணைச்செயலர்கள் சத்தியசீலன், பால கிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எல்பாஸ் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல் நன்றி கூறினார்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நேர்காணல் திறன்’ என்ற தலைப்பில் திறன் வளர் பயிலரங்கம் நடைபெற்றது.
    • விவேகம் நிறுவனங்கள் குழுமத்தின் இயக்குனர் முத்துக்குமார் நேர்முக தேர்வின் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பொருளியல் மன்றத்தின் சார்பாக 'நேர்காணல் திறன்' என்ற தலைப்பில் திறன் வளர் பயிலரங்கம் நடைபெற்றது. இளங்கலை பொருளியல் மன்ற துணை தலைவர் பேராசிரியர் சிவ இளங்கோ வரவேற்றார். பேராசிரியர் கணேசன், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். விவேகம் நிறுவனங்கள் குழுமத்தின் இயக்குனர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நேர்முக தேர்வின் முக்கியத்துவம் பற்றியும், நேர்முக தேர்வில் வெற்றி பெறுவதற்கு மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் நேர்முக தேர்வில் பொதுவாக கேட்கப்படும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பதை பற்றியும் விளக்கி கூறினார். முடிவில் மாணவ செயலர் சாமுவேல் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சிவமுருகன், அசோகன், அன்றோ சோனியா, உமா ஜெயந்தி, அமராவதி, பிரியதர்ஷினி மற்றும் 3-ம் ஆண்டு பொருளியல் மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனைப்படி பொருளியல் துறை தலைவர் மாலைசூடும் பெருமாள் மற்றும் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    ×