search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி-வீதி நாடகம்
    X

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அணி சார்பில் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்த போது எடுத்த படம்.

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி-வீதி நாடகம்

    • இன்ஸ்பெக்டர் சுதா, மாணவிகளிடையே 'ஊழல் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
    • மாணவர்கள் "ஊழலை மறப்போம் தேசத்தை காப்போம்" என்னும் கருத்து அமைந்த விழிப்புணர்வு வீதி நாடகத்தினை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்த ம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் 49, 50 மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரோடு இணைந்து சர்தர் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஊழல் ஒழிப்பு வார விழாவினை நடத்தியது.

    உறுதிமொழி

    நம் நாட்டின் பொருளா தாரம், அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் முக்கிய தடையாக உள்ளதை உணர்ந்து ஒவ்வொரு குடிமகனும் நேர்மை. கண்ணியத்துடன் ஊழலை ஒழிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை கல்லூரி முதல்வர் பொ. ஜெயந்தி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதா மற்றும் அனிதா ஆகியோர் முன்னிலையில் மாணவிகள் லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன் என்றும், மக்கள் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும் உறுதிமொழி எடுத்தனர்.

    தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுதா, மாணவிகளிடையே 'ஊழல் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் மாணவிகளிடம் ஊழல் சார்ந்த புகார்களை தெரிவிக்கும் வழிமுறைகளை குறித்த துண்டு பிரசாரத்தை காவல்துறையினர் வழங்கினர்.

    வீதி நாடகம்

    பின்னர் கல்லூரியின் வேதியியல்துறை மற்றும் தமிழ்த்துறை மாணவிகள் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் "ஊழலை மறப்போம் தேசத்தை காப்போம்" என்னும் கருத்து அமைந்த விழிப்புணர்வு வீதி நாடகத்தினை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால்துரை, சப்-இன்ஸ்கெ்டர் தளவாய் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் மா. ஜான்சி ராணி முனைவர் ரெ. சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×