search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adithanar College"

    • பயிலரங்கிற்கு துறைத் தலைவர் அ.அந்தோணி சகாய சித்ரா தலைமை தாங்கினார்.
    • பேராசிரியர்கள் ம.ரெ.கார்த்திகேயன், மலர்க்கொடி மற்றும் மாணவர்கள் பயிலரங்கத்தில் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை மன்றம் சார்பில் இளைஞர்களுக்கான நிதி சார்ந்த கல்வி என்ற தலைப்பில் 2 நாள் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனைப்படி நடந்த பயிலரங்கிற்கு துறைத் தலைவர் அ.அந்தோணி சகாய சித்ரா தலைமை தாங்கினார். தோவாளை லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குனர் தி.விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் வணிக நிர்வாகிவியல் துறை பேராசிரியர்கள் ம.ரெ.கார்த்திகேயன், மலர்க்கொடி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். வணிக நிர்வாகவியல் துறை மன்ற ஒருங்கிணைப்பாளர் அ.தர்மபெருமாள் நன்றி கூறினார். பயிலரங்க ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    • ஆதித்தனார் கல்லூரியில் "பனை வளம் காப்போம்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் சார்பாக பனைவிதைகள் விதைக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட அணி 43 மற்றும் 44-வது அணிகளின் சார்பில் "பனை வளம் காப்போம்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணிதிட்ட அணி எண் 44-ன் திட்ட அலுவலர் சத்தியலெட்சுமி வரவேற்று பேசினார்.

    இதில் தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனர் டாக்டர். கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை மரங்களின் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் சார்பாக பனைவிதைகள் விதைக்கப்பட்டது. நாட்டு நலப்பணிதிட்ட அணி எண் 43-ன் திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆஸாத் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வரின் ஆலோசனையின்படி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • வில்சன் பாஸ்கர், வரைபடத்தில் தீர்க்கும் தொகுப்புகள் பற்றி விளக்கம் அளித்து பேசினார்.
    • கருத்தரங்கில் 12 கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் 'தூய மற்றும் பயன்பாட்டு கணிதம்' என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

    கருத்தரங்கில் திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகத்தின் கணிதத்துறை பேராசிரியர் சுரேஷ் சிங், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி கணிதத்துறை பேராசிரியர் வில்சன் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் சுரேஷ்சிங், வரைபட கோட்பாடுகள் பற்றியும், அதன் வாழ்நாள் பயன்பாடுகள் குறித்த வரைபடம் மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் பேசினார். வில்சன் பாஸ்கர், வரைபடத்தில் தீர்க்கும் தொகுப்புகள் பற்றி விளக்கம் அளித்து பேசினார்.

    முன்னதாக சிறப்பு விருந்தினர்களை கல்லூரி கணிதத்துறை தலைவர் பசுங்கிளி பாண்டியன் அறிமுகம் செய்து வைத்து, வரவேற்று பேசினார். இதில், துறை தலைவர்கள் பாலு, வேலாயுதம், கவிதா, அந்தோணி சகாய சித்ரா, ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் மற்றும் பல்துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    இக்கருத்தரங்கில் 12 கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெவ்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் மூலம் 42 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. கருத்தரங்க ஏற்பாடுகளை கணிதத்துறை பேராசிரியர்கள் ெசய்திருந்தனர். கருத்தரங்க அமைப்பு ெசயலாளர் சரண்யா நன்றி கூறினார்.

    • ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை மாணவிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் முதல்வர் கலைகுருசெல்வி சிறப்புரையாற்றினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் நல அமைப்பு சார்பாக 'தனி மனித சுகாதாரம்' என்ற தலைப்பில் முதுகலை மாணவிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் மகேந்திரன் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.நித்தியானந்த ஜோதி வரவேற்று பேசினார். ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் முதல்வர் முனைவர் கலைகுருசெல்வி சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில், உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டிலும் சுத்தம் வேண்டும் என்று கூறினார். மேலும் வரும் நோய்களை கண்டறிய சுய பரிசோதனை வேண்டும் என்றும் நோய்களை தடுக்க ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்றும் கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மகளிர் நல அமைப்பு உறுப்பினர்களான பேராசிரியர்கள் முருகேஸ்வரி, முனைவர் சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் முதுகலை மாணவிகளும் கலந்து கொண்டனர். விலங்கியல் துறை தலைவர் முனைவர் வசுமதி நன்றி கூறினார்.

    • தனி மனிதனின் தலைமை பண்பின் குணாதிசயங்கள் குறித்து ரத்தினபிரபு எடுத்துரைத்தார்.
    • ராஜகுமரன் தமது உரையில் மிகச்சிறந்த தலைவர்களை மேற்கோள் காட்டினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர மதிப்பீடு உறுதிப் பிரிவு மற்றும் சமவாய்ப்பு மையம் சார்பில் 'தலைமை பண்புகள்' என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

    உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். சமவாய்ப்பு மையத்தின் ஆலோசகர் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை ராமஜெய லட்சுமி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    இந்த பயிற்சி முகாமிற்கு பாளை ஜான்ஸ் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ரத்தினபிரபு மற்றும் மெப்கோ ஸ்லனக் பொறியியல் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ராஜகுமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

    சிறப்பு விருந்தினர் ரத்தினபிரபு தமது உரையில் தனி மனிதனின் தலைமை பண்பு சூழ்நிலை வரும் பொழுது வெளிவரும் என்றும் தலைமை பண்பின் குணாதிசயங்களான தகவல் பரிமாற்றம், அணுகுமுறை, பொறுப்புணர்ச்சி, உணர்ச்சிபூர்வ அறிவு ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார்.

    முனைவர் ராஜகுமரன் தமது உரையில் மிகச்சிறந்த தலைவர்களை மேற்கோள் காட்டினார். மேலும் தலைமை பண்புகளான புரிதல், ஏற்று கொள்ளுதல் ஆகியவற்றை மாணவர்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த பயிற்சி முகாமில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    சமவாய்ப்பு மையத்தின் உறுப்பினர் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை முனைவர் முனீஸ்வரி மற்றும் முதலாம் ஆண்டு முதுகலை பொருளியல் துறை மாணவர் செல்வம் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

    இந்த பயிற்சி முகாமில் ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி மற்றும் பேராசிரியைகள் ஆரோக்கிய மேரி, பெர்னான்டஸ், ரீட்டா யசோதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கண்காட்சியில் பல்வேறு பள்ளியில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • மாணவர்கள் சி. கிருஷ்ணா மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.

    உடன்குடி:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நெகிழிப்பை கழிவுகளை மேம்படுத்தும் நுணுக்க திறன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் பல்வேறு பள்ளியில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப திறனைப் பயன்படுத்தி நெகிழிக் கழிவுகளை எரிப்பதின் மூலம் மின்சாரம், தார்ச்சாலை போடுவது குறித்த செயல்பாடுகள் பற்றி மாணவர்கள் செயல் விளக்கம் மூலம் காட்சிப்படுத்தினர்.

    இதில் தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சி. கிருஷ்ணா மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்குபெற்று 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். இந்த மாணவர்களை பள்ளி ஆலோசகர் பேராசிரியர் தி. ஆழ்வார், முதல்வர் சோ. மீனா, நிர்வாக அதிகாரி கண்ணபிரான், துணை முதல்வர் சாந்தி ஜெயஸ்ரீ மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • ஜி-20 மாநாட்டில் இந்தியா சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
    • கருத்தரங்கத்தில் 130 தேசிய தரைப்படை, கப்பற்படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் ஜி-20 அமைப்பின் தலைமைத்துவமும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்பணர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படையின் கடற்படை அதிகாரி வீ.சிவஇளங்கோ வரவேற்று பேசினார்.

    கல்லூரி தாவரவியல் துறைதலைவர் சி.பி.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ஜி-20 மாநாட்டில் இந்தியா சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இதில் மாணவர்களின் பங்களிப்பு மிக அவசியம், என்றார். தேசிய மாணவர் தரைப்படை அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் நன்றி கூறினார்.

    தூத்துக்குடி 29-வது தரைப்படை கம்பெனி ஆபீஸர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்ணல் பிரகோஷ் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், தேசிய மாணவர் படை அதிகாரிகள் சேக்பீர் முகம்மது காமில், சத்யன், ஐசக் கிருபாகரன், சூரிய பொன்முத்து ேசகரன் மற்றும் கே.ஏ. மேல்நிலைப்பள்ளி எல்.கே. மேல்நிலைப்பள்ளி, டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆதித்தனார் கல்லூரியை சேர்ந்த 130 தேசிய தரைப்படை, கப்பற்படை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனைப்படி தேசிய மாணவர்படை அதிகாரிகள் சிவமுருகன், சிவ இளங்கோ மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு விருந்தினர்கள் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக மாணவர்களுக்கு சமூக நல்லிணக்கத்தை விளக்கி பேசினர்.
    • மாணவர்களுக்கு, ‘நல்வாழ்வுக்கான வாழ்வியல் பயிற்சி’ 3 நாட்கள் யோகா பயிற்சி பட்டறை தொடக்க விழா நடந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக 77-வது சுதந்திர தினவிழா, சமூக நல்லிணக்க விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் மருதையா பாண்டியன் வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை சு.விஜயா கலைவாணி, ஆதித்தனார் கல்லூரி பொருளியில் துறை தலைவர் வ.மாலைசூடும் பெருமாள் ஆகிய 2பேரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழ் இலக்கியங்கள் வாயிலாக மாணவர்களுக்கு சமூக நல்லிணக்கத்தை விளக்கி பேசினர்.

    இவ்விழாவில் பேராசிரியர்கள் கணேசன், சிவமுருகன், உமாஜெயந்தி, அந்தோணி பிரைட் ராஜா மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வரின் ஆலோசனைப்படி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் மருதையா பாண்டியன் மற்றும் முதுகலை பொருளி யல் துறை மாணவர்களும் செய்திருந்தனர். மாணவர் பா.செல்வம் நன்றி கூறினார்.

    மேலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் யோகா மன்றம், ஐ.கியூ.ஏ.சி. சார்பில் மாணவர்களுக்கு, 'நல்வாழ்வுக்கான வாழ்வியல் பயிற்சி' 3 நாட்கள் யோகா பயிற்சி பட்டறை தொடக்க விழா நடந்தது. இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். விலங்கியல் துறை தலைவர் வசுமதி வரவேற்று பேசினார். ஈசா யோகா பயிற்றுனர் வினோத் குமார், யோகா பயிற்சி கொடுத்தார். விழாவி ற்கு ஐ.கியூ.ஏ.சி.ஒருங்கி ணைப்பாளர் ஜீம்ரீவ்ஸ் சைலண்ட் நைட், தாவரவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், வேதியி யல் துறைதலைவர் கவிதா, பேராசிரியை தீபாராணி, பேராசிரியர் கார்த்திகா தொகுத்து வழங்கினார்.

    இதில் 3-ம் ஆண்டு விலங்கியல் மற்றும் வேதியி யல் துறை மாணவர்கள் பங்குபெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் யோகா மன்ற இயக்குனர் ஆரோக்கிய மேரி பர்னாந்தஸ் மற்றும் இணை இயக்குனர் லிங்கதுரை ஆகியோர் செய்திருந்தனர்.

    • இயற்கையை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்து கல்லூரி முதல்வர் மகேந்திரன் விளக்கி கூறினார்.
    • விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர உறுதிப்பிரிவின் சார்பில், உலக இயற்கை பாதுகாப்பு தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், நிலம், நீர், காற்று, ஆகாயம் மாசுபடாமல் இயற்கையை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கி கூறினார். கல்லூரி வளாகத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து அப்புறப்படுத்தினர்.

    பேராசிரியர்கள் சாந்தி, வசுமதி, கவிதா, சிவக்குமார், திலீப்குமார், கருப்பசாமி, கொளஞ்சிநாதன், பார்வதிதேவி, திருச்செல்வன், பெனட், சுமதி, ரூபன் ஜெசு அடைக்கலம், கரோலின் கண்மணி, ஸ்வீட்லின் டயானா, சிங்காரவேலன், ஆன்டனி பிரைட்ராஜா, தேசிய மாணவர் படை அலுவலர் சிவமுருகன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மருதையா பாண்டியன், சத்தியலட்சுமி, சுற்றுச்சூழல் இயக்கத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உள்தர உறுதிப்பிரிவின் உதவி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உள்தர உறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் செய்து இருந்தார்.

    • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் விலங்கியல் துறைமன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.
    • விழாவில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி இளம் அறிவியல் விலங்கியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விலங்கியல் துறை மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு துறைத்தலைவர் வசுமதி தலைமை தாங்கினார்.

    விலங்கியல்துறை மாணவர் முத்துக்குட்டிராஜா வரவேற்று பேசினார். திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விலங்கியல் துறைமன்றத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆரோக்கியமேரி பர்னாந்து நன்றி கூறினார். இதை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 3-ம் ஆண்டு மாணவர் ம.முத்துராஜ் வரவேற்று பேசினார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. மாணவர் சப்பாணிமுத்து ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை மாணவர் சிவனேசன் தொகுத்து வழங்கினார்.ஏற்பாடுகளை விலங்கியல் துறை பேராசிரியர்களும், ஆய்வு உதவியாளர்களும் செய்திருந்தனர்.

    • இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20,22-ந்தேதிகளில் நடந்தது.
    • விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கலாம்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியில் சேர www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20 மற்றும் 22-ந்தேதிகளில் நடந்தது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். இதில் இடம் கிடைக்காத மாணவர்கள் அனைவரும் வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கண்டிப்பாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இளம் அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம், இயற்பியில், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன. இளங்கலை பாடப்பிரிவுகளான ஆங்கிலம், பொருளியல், பி.காம். போன்றவற்றிலும் சில இடங்கள் உள்ளன. எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை மறுநாளுக்குள் (வியாழக்கிழமை) விண்ணப்பித்து, வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு நடைபெறும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவிபெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் மாணவர்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அச்சுதன், ஏட்டு காளிதாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர உறுதிப்பிரிவின் சார்பில், 'சைபர் கிரைம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

    தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அச்சுதன், ஏட்டு காளிதாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். மின்னணு தகவல் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சைபர் குற்றங்கள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது குறித்து விளக்கி கூறினர்.

    பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். பேராசிரியர்கள் ரமேஷ், கணேசன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் சிவ இளங்கோ நன்றி கூறினார்.

    ×