search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subiramaniya Swamy Temple"

    • 80 இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் நடமாடும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
    • கோவில் வளாகத்தில் 4 இடங்களில் அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவி லில் கந்தசஷ்டி திருவிழா 13-ந் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந் தேதியும், திருக்கல்யாணம் 19-ந் தேதியும் நடக்கிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    ஆலோசனை கூட்டம்

    எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று கோவில் இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு கோவில் அறங்காவலர் குழுத்தலை வர் அருள்முருகன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாசில்தார் வாமணன், அறங்காவலர் செந்தில்முருகன், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில் இணை ஆணையர்கள் கார்த்திக் வரவேற்று பேசினார்.

    பக்தர்களுக்கு குடிநீர்

    கூட்டத்தில் திருவிழாக்காலங்களில் பக்தர்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கி விரதமிருப்பதற்காக கோவில் வளாகத்தில் 21 தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கொட்டகைகளின் உள் பகுதியில் மழைநீர் பாதுகாப்பு கருதி சுமார் ஒரு அடி உயரத்தில் பலகைகள் மூலம் சிறிய மேடை அமைக்கப்படும். அருகில் தற்காலிக கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.

    2,500 போலீசார்

    13 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, மேலும் 80 இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் நடமாடும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். பக்தர்கள் பாதுகாப்பு கருதி 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தயார் நிலையில் மருத்துவகுழுவும், கோவில் வளாகத்தில் 4 இடங்களில் அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். கடல் காவல் படை மற்றும் மீன்வளத்துறை மூலம் கடலில் பக்தர்கள் ஆழத்திற்கு செல்லாமல் தடுத்திடும் வகையில் மிதக்கும் வகையில் தடுப்பு கயிறுகள் போடப்பட்டு வீரர்கள் ரோந்து செல்வர்.

    தடையின்றி மின்சாரம்

    திருவிழா காலங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்கவும், பக்தர்கள் விரதமிருக்கும் கொட்டகை களில் மின் கசிவு ஏற்படாதவண்ணம் பாது காப்பான முறையில் மின் தடங்கள் அமைக்கப்படும்.

    சாலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் பிடித்து கோசா லையில் ஒப்படைக்கப்படும். தெருநாய்கள் பக்தர்களை தாக்காத வகை யில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப் படும்.

    இந்த முறை கடற்கரையில் சூரசம்ஹாரம் பார்க்கும் இடங்களில் இரும்பு குழாய்கள் மூலம் பாதைகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கப்படவுள்ளது. கோவிலில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடை பெறும் இடங்களில் யாரும் நுழையாதவாறு பாது காப்பு பலப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கோவில் கண்காணிப்பாளர்கள் ரவீந்திரன், ஆனந்தராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் சிவநாதன், செயற்பொறியாளர்கள் முருகன், சந்தானகிருஷ்ணன், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்ரவி, டாக்டர் நஸ்ரின்பாத்திமா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், கோவில போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கணேச மணிகண்டன், நகராட்சி ஆணையர் கண்மணி, தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜமூர்த்தி, மின் வாரிய இளநிலை பொறியாளர் முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமை டாக்டர்கள் லஷ்மிகாந்த், சச்சின்ராஜா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
    • இலவச மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம் போன்றவை டாக்டர்களால் பரிசோதிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

    திருச்செந்துர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை டாக்டர்கள் லஷ்மிகாந்த், சச்சின்ராஜா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த இலவச மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, உடல் வெப்பநிலை போன்றவை டாக்டர்களால் பரிசோதிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் முகாமில் விளக்கப்படங்கள் மூலம் உடல்நலக் கல்வி வழங்கப்பட்டது.

    முகாமில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வி, கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், 3-ம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர். காலை 10 மணி முதல் 3 மணி வரை நடந்த இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை கல்லூரி இணைபேராசிரியை சங்கீதா, துணை பேராசிரியை வனிஷா ஆகியோர் கல்லூரி முதல்வரின் வழிகாட்டலின்படி செய்திருந்தனர்.

    ×