search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thisayanvilai"

    • 11-ந் தேதி (வியாழக் கிழமை) முதல் நாள் ஆண்கள் பிரிவு போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்கிறார்.
    • 12-ந் தேதி (வெள்ளிக் கிழமை) ஆண்களுக்கான போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பனும், பெண்களுக்கான போட்டியை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைக்க உள்ளனர்.

    திசையன்விளை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 14-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வரை 4 நாட்கள் நடக்கிறது

    11-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் நாள் ஆண்கள் பிரிவு போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்கிறார். பெண்கள்களுக்கான போட்டியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்க உள்ளார்.

    12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆண்களுக்கான போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பனும், பெண்க ளுக்கான போட்டியை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைக்க உள்ள னர். இதில் அமைச்சர் மனோதங்கராஜ் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

    13-ந் தேதி (சனிக்கிழமை)ஆண்கள் பிரிவிற்கான போட்டியை அமைச்சர் தங்கம் தென்னரசு, பெண்க ளுக்கான போட்டியை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தொடங்கிவைக்க உள்ளனர்.

    14-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) ஆண்கள் பிரிவு போட்டியை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து வெற்றிபெற்ற அணிகளுக்கு தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பேசுகிறார்.

    கபடி போட்டியை 5 ஆயிரம்பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மைதானத்தில் கேலரி வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    விழா ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து தலை வரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் செய்து உள்ளார்

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி திசையன்விளையில் வருகிற 11, 12, 13, 14-ந்தேதிகளில் நடக்கிறது.
    • இப்போட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் வெற்றிபெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.

    திசையன்விளை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி திசையன்விளையில் வருகிற 11, 12, 13, 14-ந்தேதிகளில் நடக்கிறது.

    இப்போட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் வெற்றிபெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.

    நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

    இப்போட்டிக்கான கால்நாட்டு விழா, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் நடந்தது. இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கமலா நேரு, முன்னாள் அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் செய்துள்ளார்.

    • திசையன்விளை காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா காமராஜர் சிலை அருகில் நடந்தது.
    • காமராஜர் புகழ்பாடும் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

    திசையன்விளை:

    திசையன்விளை காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா காமராஜர் சிலை அருகில் நடந்தது.

    நற்பணி இயக்கத் தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். இயக்க நிர்வாகிகள் ஆதி, ராஜ், சின்னத்துரை, பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனபால் வரவேற்று பேசினார்.

    விழாவில் 120 மாணவர்களுக்கு சீருடைகளும் 300 பேருக்கு வேட்டி சேலைகளும் வழங்கப்பட்டது.

    விழாவில் வியாபாரிகள் சங்கத் தலைவர் டிம்பர் செல்வராஜ், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் சி.விஜயபெருமாள், திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கத் தலைவர் ஆனந்தராஜ், பனங்காட்டு படை கட்சி அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    காமராஜர் புகழ்பாடும் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. நிகழ்ச்சி இறுதியில் நற்பணி இயக்க நிர்வாகி சேகர் நன்றி கூறினார்.

    • விழாவை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், முதியோர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது.
    • சிறப்பு நிகழ்ச்சியாக 120 பானைகளில் பொங்கலிட்டு பெண்கள் காமராஜருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்

    திசையன்விளை:

    திசையன்விளை கிங்மேக்கர் காமராஜர் டிரஸ்ட் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. டிரஸ்ட் தலைவர் செல்வபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும், முதியோர்களுக்கு ஆடைகளையும் வழங்கினார்.

    சிறப்பு நிகழ்ச்சியாக 120 பானைகளில் பொங்கலிட்டு பெண்கள் காமராஜருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர். விழாவில் வியாபாரிகள் சங்கமாநில இணைச்செயலாளர் தங்கையாகணேசன், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், வக்கீல் ஜெயபாலன், காமராஜர் டிரஸ்ட் துணைத்தலைவர் ராஜபாண்டி, பொதுச்செயலாளர் முருகன், துணைச்செயலாளர்கள் சித்திரை கணேசன், நித்யானந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

    திசையன்விளை:

    நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்த நாள் விழா திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தில் நேற்று மாலை நடந்தது.

    மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணிசெயலாளர் விவேக் முருகன், நெல்லை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் மருதூர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் வாகை துரைராமஜெயம் வரவேற்று பேசினார். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

    விழாவில் ராதாபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் பவான்ஸ், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மகளிர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் அமுதா கலைச்செல்வன், களக்காடு வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரியா முருகன், வள்ளியூர் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜேஷ், மலையன்குடியிருப்பு ராஜேந்திரன், மன்னார்புரம் மார்டீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் விஜயபெருமாள் நன்றி கூறினார்.

    • போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 13-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டுவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.

    போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவிகளுக்கு தொழில் அதிபர் விஜெஸ்குமார், அப்புவிளை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்தாசன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டி பேசினர்.

    கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கல்லூரி தமிழ்துறை தலைவர் தணிகை செல்வி நன்றி கூறினார்.

    • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • மதுபாட்டில் மற்றும் பணம் பறிமுதல்

    திசையன்விளை:

    திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ், ஏட்டு தங்கராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை திசையன்விளை பைபாஸ் சாலை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அரசு மதுபான கடையில் மதுபாட்டில்களை வாங்கி அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த தோப்புவிளையை சேர்ந்த ஜோசப் எழிலரசன் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து மதுபாட்டில்களையும், மதுவிற்பனை செய்து வைத்து இருந்த ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • உதவிதொகை, விதவை உதவிதொகை, இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.
    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை தாலுகாவிற்கு உள்பட்ட இரண்டு குருவட்டங்களுக்கான ஜமாபந்தி திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட ஆய்வு குழு அலுவலர் மூர்த்தி தலைமை தாங்கி முதியோர் உதவிதொகை, விதவை உதவிதொகை, இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    விழாவில் திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார், துணை தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் துரைசாமி செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் குமார், இட்டமொழி இசக்கியப்பன், சத்தியவாணி, அயூப் கான் ஜேம்ஸ், செல்வக்குமார், சந்தனகுமார், அய்யாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    ×