என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திசையன்விளையில் 120 மாணவர்களுக்கு சீருடை; 300 பேருக்கு வேட்டி சேலை
  X

  மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்ட காட்சி.

  திசையன்விளையில் 120 மாணவர்களுக்கு சீருடை; 300 பேருக்கு வேட்டி சேலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திசையன்விளை காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா காமராஜர் சிலை அருகில் நடந்தது.
  • காமராஜர் புகழ்பாடும் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

  திசையன்விளை:

  திசையன்விளை காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா காமராஜர் சிலை அருகில் நடந்தது.

  நற்பணி இயக்கத் தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். இயக்க நிர்வாகிகள் ஆதி, ராஜ், சின்னத்துரை, பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனபால் வரவேற்று பேசினார்.

  விழாவில் 120 மாணவர்களுக்கு சீருடைகளும் 300 பேருக்கு வேட்டி சேலைகளும் வழங்கப்பட்டது.

  விழாவில் வியாபாரிகள் சங்கத் தலைவர் டிம்பர் செல்வராஜ், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் சி.விஜயபெருமாள், திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கத் தலைவர் ஆனந்தராஜ், பனங்காட்டு படை கட்சி அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  காமராஜர் புகழ்பாடும் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. நிகழ்ச்சி இறுதியில் நற்பணி இயக்க நிர்வாகி சேகர் நன்றி கூறினார்.

  Next Story
  ×